Share

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Monday, April 11, 2016

ஆர்வத்தைத் தூண்டும் குற்றவியல் துறை படிப்புகள்!

இன்றைய நவீன உலகில் குற்றமில்லா சமூகம் என்ற ஒரு பகுதியோ, இடமோ எங்குமே இல்லை என்றே கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் குற்றம் பல்வேறுவிதங்களில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் கொடுமைகள், ஆட்கடத்தல், நம்பிக்கை மோசடி செய்தல், கிளர்ச்சி செய்தல், கையூட்டு, அதிகார துஷ்பிரயோகம், இணையக்குற்றங்கள், பயங்கரவாதம் என பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. குற்றங்களையும் குற்ற நடத்தைகளையும் பற்றி அறியவும், குற்றங்களைத் தடுக்கவும், அவை சார்ந்து துப்பறியவும், குற்றநீதி மற்றும் பாதிக்கப்பட்டோரை காக்கவும் கல்வி முறைப்படுத்துதல் அவசியம். அவ்வகையில் ஓரு சமூகத்தில் கூடிவாழும் மனித இனத்தில், சிலருடைய நடத்தைகள் மட்டும் மாறுபட்டு காணப்படுவதேன் என்று சிந்தித்த சில சமூகவியலாளர்களின் பங்களிப்பே இன்று குற்றவியல் துறையாக வளர்ந்து நிற்கின்றது.

குற்றவியல் துறை கல்விமுறை சார்ந்து இந்தியாவின் பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், இளநிலை-முதுநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பு, பட்டயப் படிப்பு, மற்றும் பட்டய மேற்படிப்பு, ஆய்வு முனைவர் படிப்பு எனவும், குற்றவியல் மற்றும் குற்றநீதி அறிவியல், குற்றவியல் மற்றும் காவல் அறிவியல், குற்றவியல் மற்றும் தடய அறிவியல், குற்றவியல் மற்றும் சைபர் சட்டங்கள் எனவும் பயிற்றுவிக்கப் பட்டு வருகின்றன.

குற்றவியல்துறை படிப்புகளைப் பற்றி திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் குற்றநீதித்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் இ.இனநல பெரியாரிடம் கேட்டோம்:

"தமிழகத்தில் குற்றவியல்துறை சென்னை பல்கலைக்கழகத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் முதுநிலை பாடமாகவும், ஆய்வு முனைவர் பட்டமாகவும், இப்பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலைப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இதுதவிர, முக்கிய பல பல்கலைக்கழகங்களில் இக்குற்றவியல்துறை தொலைதூரக் கல்வி வாயிலாகவும் பயிற்றுவிக்கப்படுகின்றது.

இத்துறையில் குற்றவியல் அடிப்படை கோட்பாடுகள், தண்டனையியல் மற்றும் திருத்துதல் நிர்வாகம், காவல் அறிவியல் மற்றும் புலனாய்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்ற இளம் சிறார்கள் மற்றும் உளவியல்கூறுகள், சைபர் சட்டங்கள்,

குற்றவியல் நடைமுறை சட்டம், தண்டனையியல் சட்டம், சாட்சிய சட்டங்கள், பாதிக்கப்பட்டோரியல் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள், தனியார் பாதுகாப்பு மற்றும் தனியார் துப்பறிதல், ஊடகவியல் மேலாண்மை, வங்கி குற்றங்கள் மற்றும் இடர் மேலாண்மை போன்ற பல பாடங்கள் வாய்மொழியாகவும், பயிற்சி வாயிலாகவும் கற்றுத் தரப் படுகின்றன. மேலும் நேரடி நிர்வாகப் பயிற்சி முறையில் காவல் நிலையம், நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், மத்திய சிறை, அரசு சாரா நிறுவனங்கள், தனியார் பாதுகாப்பு மற்றும்

துப்பறிதல் நிறுவங்கள் என பல்வேறு துறைகளுக்கும் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தங்களைச் சிறந்த முறையில் தயார் செய்துகொள்ள முடிகிறது. இத்துறையில் பயின்று கல்வியை நிறைவு செய்யும் மாணவ மாணவியர்களுக்கு அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் மேலும் தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறிதல் துறை போன்றவற்றில் சுய வேலைவாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளவும் வழிவகை உள்ளது.

உதாரணமாக, அரசுத் துறையில் TNPSC GROUP I  மற்றும் Group II தேர்வுகளில் Dy.Superintendent of Police (DSP), ஜெயிலர், தடய அறிவியல் (Forensic Science) பணி போன்ற பதவிகளில் குற்றவியல் துறை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. காவல் துறையில் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிலும், நீதிதுறையில் அலுவலக பணிகளிலும் குற்றவியல் துறை மாணவர்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றனர். அரசு சாரா நிறுவனங்களில் மேல்நிலை பதவிகளிலும், அந்நிறுவனங்களை தாங்களே நிறுவுதலிலும் முக்கியத்

துவம் பெறுகின்றனர். இன்றைய முக்கிய தேவையான தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறிதல் துறையிலும் (Private Security and Detective), ஊடகத்துறையின் குற்றப் பின்னணி தொடர்களிலும் (Crime Investigation Serials), வழிகாட்டுதல் மையங்களில் ஆலோசனை வழங்குதலிலும் (Counselling and Guidance) பல முக்கிய பொறுப்புகளை இத்துறையில் பயின்ற மாணவர்கள் வகித்து வருகின்றனர்.

இத்துறையின் தனிச்சிறப்பாக இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில காவல்துறைக்கான காவல் பல்கலைக்கழகங்களை தத்தம் மாநிலங்களில் நிறுவி வருகின்றன. அவ்வாறு நிறுவப்படும் பல்கலைக்கழகங்களில் குற்றவியல்துறை முதன்மை பெறுகிறது. இதுவரை இராஜஸ்தான் மாநில காவல்துறைக்கான பல்கலைக்கழகம் "சர்தார் பட்டேல்' பெயரிலும், குஜராத் மாநில காவல்துறைக்கான பல்கலைக்கழகம் "ரக்ஸ சக்தி' என்ற பெயரிலும் நிறுவப்பட்டுள்ளன. கேரள மாநில காவல் துறைக்கான பல்கலைக்கழகம் தற்சமயம் கட்டப்பட்டு வருகின்றது. தமிழக காவல் துறைக்கான பல்கலைக்கழகம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றது.

குற்றங்கள் பெருகிவரும் இச்சூழ்நிலையில் இக்குற்றவியல் துறையின் பயன்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. இத்துறையில் சேர்ந்து பயில்வதற்கு அடிப்படைத் தகுதி, ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருத்தல் ஆகும். அறிவியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் தடய அறிவியல் துறையில் தங்களை சிறப்புற்றவராக ஆக்க இது ஏதுவாக இருக்கும்'' என்றார்.

Monday, February 1, 2016

எம்.பில்., பிஹெச்.டி., படிக்கும் மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை

விண்ணப்பித்து விட்டீர்களா...? எஸ்.டி. மாணவர்களுக்கான பெல்லோஷிப்எம்.பில்., பிஹெச்.டி., படிக்கும் மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பல்கலைக்கழக மானியக்குழு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின்படி இந்தாண்டு 750 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. முதுநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, முழுநேரமாக எம்.பில்., அல்லது பிஹெச்.டி. படிப்பவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம். அறிவியல், மானுடவியல், சமூக அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருக்க வேண்டும். எம்.பில். மாணவர்களுக்கு ரூ.25,000, பிஹெச்.டி. மாணவர்களுக்கு ரூ.28,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.11.2015. கூடுதல் விவரங்களுக்கு    www.ugc.ac.in  என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Thursday, July 23, 2015

பெற்றோர்களுக்கு அப்துல் கலாம் வேண்டுகோள்

பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துவிட்டு, குழந்தைகளுடன் சேர்ந்து புத்தகங்களை படிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தினார்.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்கத்தின் 90-ஆம் ஆண்டு விழாவில் டிஜிட்டல் ஆல் அமைப்பைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

அரியலூர் பகுதி விவசாயிகள் இயற்கை வேளாண்மை முறையில் பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். அந்தப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு கிராமங்களில் விற்பனை அங்காடிகள் வேண்டும். இயற்கை விவசாய உணவுகளால் உடல்நலம் காக்கப்படும்.

ஒவ்வொரு வீட்டிலும் சிறிய நூலகம் வேண்டும். பெற்றோர் தமது குழந்தைகளுடன் நூல்களைப் படித்து கலந்துரையாட வேண்டும். தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குழந்தைகளுடன் செலவழிக்க பெற்றோர் முன்வர வேண்டும்.

மதுரை மல்லிகைக்கு சர்வதேச அங்கீகாரம் பெற நடவடிக்கை தேவை. இங்குள்ள உற்பத்திப் பொருள்களை தேசிய அளவில் தெரியப்படுத்த கண்காட்சி நடத்த வேண்டும்.

வேலைவாய்ப்பு பெருகவும், வறுமை ஒழியவும் தொழில் வளர்ச்சி அவசியம். கிராம- நகர இடைவெளியைக் குறைக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், நீர் மேலாண்மை, நேர மேலாண்மை, திடக்கழிவு சுழற்சி முறை, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஊராட்சி அமைப்புகளுடன் வர்த்தக சங்கத்தினர் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

பின்னர் கூட்டத்தினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உற்பத்தி, வடிவமைப்பு, தரம் ஆகியவை மேம்படும். தொலைதொடர்பு, அடிப்படை வசதிகள், சூரிய மின்சாரத்துடன் கூடிய இல்லம் ஆகியவை கிராம மக்களை மேம்படுத்தும் என்றார்.

Thursday, June 4, 2015

பில்கேட்ஸ் கூறும் அறிவுரை

எதிர்கால சந்ததிகளான இளைஞர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறும் அறிவுரை என்ன தெரியுமா? தன்னைப் போல யாரும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விடாதீர்கள் என்பதுதான்.

இது குறித்து இளைஞர்களுக்கு தனது பிளாக்கில் அவர் கூறியிருப்பதாவது, வெற்றியை அடைய மிக எளிதான வழி பட்டப்படிப்புதான். எனவே, மாணவர்கள் பட்டப்படிப்பை முடியுங்கள். எந்த காரணம் கொண்டும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்லூரியில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் கிடைக்கும். பட்டம் பெறாதவர்களோடு ஒப்பிடும் போது, பட்டம் பெற்றவர்கள் நல்ல தரமான வாழ்க்கையை வாழ முடியும். பட்டம் பெற்ற இளைஞர்களால்தான் அமெரிக்காவின் பொருளதாரமும் உயரும் என்று கூறியுள்ளார்.

Saturday, May 9, 2015

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு பள்ளிகளில் இணையம் மூலம், முதல் நாளான (மே 8-ம் தேதி) மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதிய இத்தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் சற்றே கடினமாக இருந்ததால், அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்தது.

கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்தது: இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய முக்கிய பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், இந்த முக்கியப் பாடங்களில் பெரும்பாலானோரின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். மேலும் எம்.பி.பி.எஸ்.- பி.இ. படிப்பில் சேருவதற்கு தாங்கள் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைந்துள்ளதால், பெரும்பாலானோர் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் பள்ளிகளில் இணையம் மூலம் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் நாளான வெள்ளிக்கிழமையே விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுக்கூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ முடியும். வரும் 14-ஆம் தேதி வரை விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டண விவரம்: விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு ரூ. 275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு ரூ. 305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

Tuesday, April 14, 2015

+2 மாணவர்கள் உயர் கல்வியைத் தேர்வு செய்வது எப்படி?

12ம் வகுப்பை நிறைவு செய்யும் தருணம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறைய வேலை கொடுத்து தேர்வெழுதி முடித்திருக்கும் மாணவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்வது தேவையே. ஆனால், ஓடிக் களைத்த முயலைப்போல நீண்ட தூக்கம் போட்டுவிடக்கூடாது. வாழ்வின் அடுத்த கட்டத்துக்கான தயாரித்தல்கள் நிறைய இருக்கின்றன.



'Mens sana in corpore sano’ என்பது ஒரு லத்தீன் பழமொழி. ‘ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனம்’ என்பது இதன் பொருள். சாதனைகள் படைக்க வேண்டிய இளைஞர்களின் மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; அதற்கு அவர்களது உடலும் நல்ல ஆரோக்கியத்தில் திளைக்க வேண்டும். தேர்விலேயே கவனம் செலுத்தி உடல்நலத்தைப் புறக்கணித்திருக்க வாய்ப்புண்டு. புதுத்தெம்பு பெற சற்று ஊர் சுற்றலாம், அதாவது சுற்றுலா செல்லலாம். பழைய உறவுகளுடன் புதிய முகங்கள், புதிய இடங்களைப் பார்க்கலாம். விட்டு வைத்திருந்த உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் மீண்டும் முறையாக ஈடுபடுங்கள். அல்லது புதிதாகப் பழகிக்கொள்ளுங்கள். ஜிம், நீச்சல்குளம், ஓட்டப்பயிற்சி, கிரிக்கெட், டென்னிஸ் என்று எதில் திறமையும் ஆர்வமும் உண்டோ அதில் ஈடுபடலாம்.

12ம் வகுப்பின் இறுதிக்கட்டமானது வாழ்வின் திருப்புமுனைகளில் ஒன்று. மேற்கொண்டு எந்தப் பாதையில் பயணத்தைத் தொடர்வது என்பதை முடிவு செய்ய வேண்டும். தவறாக முடிவெடுத்துவிட்டால் இழப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். ஆகவே பொறுமையாக, முழுமையாகச் சிந்தித்து முடிவெடுங்கள். மேற்படிப்பு எந்த வகை? தேர்வு செய்யும் படிப்பு, தாம் விரும்பும் வேலைக்கு ஏற்றதா? அப்படி என்ன வகை வேலைகள் உள்ளன? என்பதுதான் முக்கியமாக முடிவெடுக்க வேண்டியவை.

இறுதிக் கேள்வியை முதலில் எடுத்துக்கொள்வோம். உள்ள வேலைத் துறைகளில் முக்கியமானவை, இந்திய ஆட்சிப்பணி (IAS), காவல் (IPS),  வனப்பணி (IFS), பாதுகாப்பு (தரை, கடல், விமானம்), கலைப் படிப்புத்துறைகள் (வரலாறு, பொருளியல், அரசியல் முதலியன), அறிவியல்துறை (இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் முதலியவற்றின் அடிப்படையில்), கணிதம், புள்ளியியல், மேலாண்மை, கணக்கியல், சட்டம், மொழிகள், நுண்கலை, விருந்தோம்பலும் உணவியலும், சுற்றுலா, அகழ்வாராய்வு, உடல் மருத்துவம், பல் மருத்துவம், மாற்று மருத்துவங்கள் (ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி), துணை மருத்துவங்கள் (செவிலியியல், மருந்தியல் முதலியன), வேளாண்மை, கால்நடை மருத்துவம், பொறியியல் (சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலிய 40-க்கும் மேற்பட்ட கிளைகள்), கவின் கலை, பயோ டெக்னாலஜி, உடற்பயிற்சிக்கல்வி மற்றும் மேற்சொன்ன எல்லாத் துறைகளிலும் ஆசிரியப்பணி.

இவற்றில் எந்தத் துறையை நீங்கள் தேர்ந்தெடுப்பது என்பதை இப்பொழுது முடிவு செய்தாக வேண்டும். பிறர் வற்புறுத்தலுக்காகவோ, கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டோ நமக்குப் பொருந்தாத விருப்பமில்லாத துறையைத் தேர்ந்தெடுத்தால், பிடிக்காத வாழ்க்கைத் துணையோடு குடும்பம் நடத்துவது போலத்தான். கிஷிரி என்ற பார்முலா இதற்கு உங்களுக்குத் துணையாக இருக்கும்.

முதலில், A:Aptitude என்று சொல்லப்படும் உங்கள் விருப்பம். சிலர் சிறுவயதிலிருந்தே சில துறைகளில் காதலை வளர்த்துக் கொண்டிருக்கலாம்; சிலர் கண்டும் கேட்டும் விருப்பம் கொண்டிருக்கலாம். அதற்கு மதிப்பளியுங்கள். ஆனால், சரியாக ஆராயாமல் தவறாக முடிவு செய்யக்கூடாது. துறை வல்லுனர்களின் கருத்தைக் கேட்கலாம்; வலைத்தளங்களைப் பார்க்கலாம்; வழிகாட்டிக் கருத்தரங்குகளில் பங்கேற்கலாம்; தமக்கு ஏற்புடையதா என அறிய ‘சைக்கோ மெட்ரிக் டெஸ்ட்’ எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து, S: Scope. பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்த பிறகு, அதில் நாம் விரும்பும் முன்னேற்றத்திற்கு வழியிருக்கிறதா என கணிக்க வேண்டும். பட்டப்படிப்புக்கு மட்டுமின்றி மேற்படிப்பு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள், கிடைக்கக்கூடிய ஊதியம், மனநிறைவு ஆகியவற்றையும் கவனித்துத் துறையைத் தேர்வு செய்யலாம். பிறகு, K: Knowledge. கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்த துறையில் உள்ள உட்பிரிவுகளை அறிந்து கொள்ள வேண்டும். அத்துறை தொடர்பான அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

‘ASK’க்கு விடை கிடைத்தபிறகு, சேர்க்கைக்கு விண்ணப்பித்தல் நுழைவுத் தேர்வுகள் இருந்தால் அவற்றுக்குத் தயாரித்தல் ஆகியவற்றையும் இப்பொழுது செய்தாக வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் வரும் கல்லூரிகளில் +2 அடிப்படையிலான படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் இல்லை. ஆனால் அகில இந்திய, அளவில் ஏராளமான நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேவையான தேர்வுகளை தெரிந்தெடுத்து, விண்ணப்பித்து, திட்டமிட்டு முறையாகத் தயார்படுத்திக்கொள்ள இது சரியான நேரம்.

தமிழ்நாட்டின் பள்ளிகளில் தரமான பாடத்திட்டமும் திறமையான ஆசிரியர்களும் இருந்தாலும், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 12ம் வகுப்பில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றாலும், அவர்களின் மேற்படிப்பு செயல்பாடு ஆதங்கத்தையே அளிக்கிறது. குறிப்பாகப் பொறியியலில், தமிழகத்தின் முதன்மைக் கல்லூரியான, கிண்டி பொறியியற் கல்லூரியிலேயே முதல் அரையாண்டுத் தேர்வில் கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களில் 50%க்கு மேல் தோல்வியுறுகிறார்கள் என்பது திகைப்பளிக்கிறது. 12ம் வகுப்பு அரசுத் தேர்வுகள் மாணவர்களின் புரிதலைச் சோதிப்பதற்குப் பதிலாக அவர்களின் நினைவாற்றலையே அளவிடுவதாகப் பல ஆண்டுகளாக இருந்து வருவதுதான் இதற்கு முக்கிய காரணம்.

12ம் வகுப்புத் தேர்வு முடிந்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்து வகுப்பில் அமரும் வரையிலான 4 மாத இடைவெளியில், தாம் படித்த பகுதிகள் அனைத்தையும் மாணவர்கள் முழுவதுமாக மறந்துவிட்டு, துடைத்த பலகையாகக் கல்லூரிக்கு வருவதும் இதற்குக் காரணம். இந்த 4 மாத இடைவெளியில், கணிதம் போன்றவற்றில் 11, 12ம் வகுப்புப் பாடங்கள் முழுவதையும், எதையும் ஒதுக்காமல் மீள்பார்வை (Revision) செய்யுங்கள். ஒரு அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்... அடித்தளம் உறுதியாக இருந்தால்தான் கட்டிடம் நிலைக்கும்!

Wednesday, April 1, 2015

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

வேலூர்: "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே கடைசி வாரத்திலும் வெளியாகும்” என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

அரக்கோணத்தில் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 155 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க, 208 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக, அனைத்து பள்ளிகளிலும் இந்த வசதி செய்யப்படும்.

ஏப்ரல் முதல் வாரத்திலேயே 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்படும்.

ஜூனில், 6 லட்சம் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, மே கடைசி வாரத்திலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, March 26, 2015

விளையாட்டு ஒதுக்கீட்டில் இலவசமாக படிக்க அழைப்பு

Image result for விளையாட்டு ஒதுக்கீட்டில் இலவசமாக படிக்கசோழிங்கநல்லுார்: விளையாட்டு ஒதுக்கீட்டில் இலவசமாக படிக்க வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில் நடப்பு கல்வி ஆண்டில், படிப்பு, உணவு, தங்குமிடம் என, 150 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன. அதற்கான மாணவ, மாணவியர் தேர்வு ஏப்., 11ம் தேதி காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

அதில், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கலாம். மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றோர் 98408 10952, 98409 86678 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, March 10, 2015

குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

சென்னை: குரூப் - 2 தேர்வு முடிவை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த நவ., 8, 9 ஆகிய தேதிகளில், குரூப் - 2 பதவிக்கான, மெயின் தேர்வு நடந்தது.

துணை வணிக வரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, தொழிலாளர் ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 1,130 பதவிகளுக்கு, மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

இதில், 5,635 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களின், தேர்வு எண்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வரும் 26ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது.

இதற்காக, ஒவ்வொரு தேர்வருக்கும், தேதி மற்றும் நேரம் குறித்து, தனித்தனியாக டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் இருந்து கடிதம் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது.

தேர்வு நெருக்கத்தில் செய்யக்கூடாதவை

தேர்வு நெருங்கும் சமயத்தில், நமது உடல்நலனை நல்லபடியாக பராமரித்துக் கொள்வது முக்கியமானதென்றால், உடலில் காயமேற்படுத்தக்கூடிய வேறெந்த காரியத்தையும் செய்வதை தவிர்ப்பதும் நல்லது.

பொதுவாக, கிராமப்புற மாணவர்கள், கிணற்றில் டைவ் அடித்து குதித்து குளிப்பது, மரம் ஏறுவது, முள் வெட்டுவது மற்றும் விறகு வெட்டுவது போன்ற சில காரியங்களில் வழக்கமாக ஈடுபடுவார்கள்.

அவை, அந்த மாணவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான் என்றாலும், எதிர்பாராத சில நேரங்களில், அத்தகைய செயல்களில், விபத்துக்களும் நேர்வதுண்டு. எனவே, தேர்வின்போது, அதுபோன்ற செயல்களை(அவை வழக்கமான ஒன்றாக இருப்பினும்கூட) தயவுசெய்து சில நாட்களுக்கு ஒத்தி வைக்கவும். தேர்வு முடிந்த பிறகு, என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளவும்.

கிராமப்புற மாணவர்கள் தவிர, நகர்ப்புற மாணவர்களும் சேர்ந்து, வேறுசில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களை வைத்து ஏதேனும் வேலை செய்தல், பைக்கில் சாகச பயணம் அல்லது வேகமாக செல்லுதல், நெருப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபடுதல், தேவையற்ற அல்லது பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

ஏனெனில், தேர்வின்போது, கண்களும், கைகளும் மிக முக்கியமானவை. உங்களின் நடவடிக்கைகளால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமானால், அது தேர்வையே பாதித்துவிடும். உங்களின் விரல் நகங்களை, பிளேடு பயன்படுத்தாமல், நகவெட்டிக் கொண்டு வெட்டி, தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

Wednesday, March 4, 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

சென்னை, மார்ச் 4_ தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வியாழக் கிழமை (மார்ச் 5) தொடங்குகிறது. மொத்தம் 8.43 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இந்தத் தேர்வு மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக 2,377 தேர்வு மய்யங்கள் அமைக் கப்பட்டுள்ளன. தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும்.

இதில் முதல் 10 நிமிடங் கள் வினாத்தாளைப் படித் துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். 10.15 முதல் 1.15 வரை தேர்வு நடைபெறும்.

மாணவர்கள் 3 மணி நேரம் எந்தவித சிரமும் இல்லாமல் தேர்வு எழுது வதற்காக அனைத்து ஏற் பாடுகளும் செய்யப்பட் டுள்ளதாக அரசுத் தேர் வுகள் இயக்குநர் கே.தேவ ராஜன் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் 3,000-க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதும் உதவியாளர் களைக் கேட்டுள்ளனர். அரசாணையின்படி, தகுதி யுள்ள அனைவருக்கும் உதவியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களே பெரும் பாலும் தேர்வு உதவியாளர் களாக நியமிக்கப்படுகின் றனர். எனவே, உதவியாளர் களை வழங்குவதில் எந்த வித சிரமும் இல்லை என வும் அவர் தெரிவித்தார்.

தேர்வு மய்யங்களுக்குத் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தனித் தேர்வர் களாக 42,693 பேர் எழுத உள்ளனர்.

60 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள்: தேர்வுப் பணிகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

10 தேர்வறைகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் 4,500-க்கும் மேற்பட்டோர் தேர்வு மய்யங்களைக் கண்காணிக்க உள்ளனர். அதோடு, மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்கள் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகளும் அமைக்கப் பட்டுள்ளன.

மேலும், பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்கு தேர்வுப் பணிகளை மேற் பார்வை யிட மாவட்டங்கள் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனை வரும் ஏற்கெனவே தங்களுக்குரிய மாவட்டங்களுக்குச் சென்று தேர்வு ஏற்பாடு களைச் செய்துள்ளனர்.

மாணவிகள் அதிகம்: பிளஸ் 2 தேர்வை 3 லட் சத்து 90,753 மாணவர்களும், 4 லட்சத்து 52,311 மாண விகளும் எழுத உள்ளனர். மாணவர்களை விட மாண விகளின் எண்ணிக்கை 60 ஆயிரம் அதிகமாக உள் ளது. இந்தத் தேர்வை புழல் சிறைவாசிகள் 77 பேர் எழுதுகின்றனர்.

கூடுதல் நேரம்: இந்தத் தேர்வுகளில் கற்றலில் குறைபாடுடையவர்கள், பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசா தோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுதும் உதவியாளர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு, கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங் கப்படுகின்றன.

விடைத்தாள்களைக் கொண்டுவர ஏற்பாடு: கடந்த ஆண்டைப் போல வே, தேர்வு மய்யங்களுக்கு வினாத்தாள்கள் வாகனங் களில் கொண்டு செல்லப் பட்டு, அதே வாகனங்களில் விடைத்தாள் கட்டுகளை மாவட்டங்களில் அமைக்கப் பட்டுள்ள விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மய்யங் களுக்குக் கொண்டுசெல்ல வும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

சென்னையில்...: சென் னை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 144 தேர்வு மய்யங்களில் 53 ஆயிரம் மாணவர்கள் எழுத உள் ளனர்.
புதுச்சேரியில்...: புதுச்சேரி யில் 33 தேர்வு மய்யங்களில் 14 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுது கின்றனர்.

TKS

VEDUTHALAI.com

Tuesday, March 3, 2015

10ம் வகுப்பு தேர்வு : தேர்வுத்துறை சார்பில் முகப்பு சீட்டு தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு 19-ம் தேதி தொடங்கி தேர்வு ஏப்ரல் 10-ந்தேதி நிறைவடைகிறது.

இந்தாண்டு இந்த தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு எழுத 3 ஆயிரத்து 298 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை சிறப்பான முறையில் நடத்த பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளும் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

விடைத்தாள் அனுப்பும் பணி நிறைவடைந்த நிலையில், விடைத்தாளின் முகப்பு சீட்டு தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த முகப்பு சீட்டில் மாணவரின் தேர்வு எண், புகைப்படம், ரகசிய எண் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். இந்த முகப்பு சீட்டை தனியாக தேர்வுத்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

முகப்பு சீட்டு அனைத்தும் தேர்வு மையங்களுக்கு சென்றடைந்த பின்னரே அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் நூலைக்கொண்டு விடைத்தாளின் முன் பக்கத்தில் வைத்து முகப்பு சீட்டை தைப்பார்கள். அதேபோன்று தான் வினாத்தாளும் முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பிலும் ஆயுதம் தாங்கிய போலீசாரின் காவலில் அனுப்பப்படும்.

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை அறிவிப்பு

புதுச்சேரியிலுள்ள ஜிப்மரில், 2015ம் ஆண்டின் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிப் படிப்பை முறையாக நிறைவுசெய்து, 17 வயது பூர்த்தியடைந்துள்ள இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

மொத்த இடங்கள் 150. அவற்றில், பொது ஒதுக்கீட்டில் 50, பிற்படுத்தப்பட்டோர் 28, தாழ்த்தப்பட்டோர் 16, பழங்குடியினர் 11, புதுச்சேரி வாழ் குடிமக்கள் 40 என்று பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் அடிப்படையிலான நுழைவுத்தேர்வின் மூலமாக, மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தியாவெங்கும், மொத்தம் 50 நகரங்களில் இந்த நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000

SC/ST/OPH பிரிவினருக்கு - ரூ.800

ஆன்லைன் விண்ணப்பித்தல் தொடக்கம் - மார்ச் 2

ஆன்லைன் விண்ணப்பித்தல் நிறைவு - மே 4.

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் - ஜுன் 7.

விரிவான விபரங்களுக்கு http://jipmer.edu.in/.

Wednesday, February 25, 2015

முன்னேற்பாடுகள் ... முக்கியமானவை..

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு பொதுத்தேர்வுகள்
தொடங்கவுள்ளன. அதை முன்னிட்டு, மாணவர்கள் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், என்னதான் முயற்சி செய்து, கடினமாக படித்தாலும், தேர்வு நாளன்று ஏற்படும் சில குளறுபடிகள், தேர்வை சரியாக எழுத முடியாமல் செய்துவிடுவதோடு, உங்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடுகின்றன.

எனவே, ஒவ்வொரு தேர்வுக்கு முன்பாகவும், என்னென்ன முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் மற்றும் என்ன மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என்பதைப் பற்றி சற்று அலசலாம்.

ஸ்டேசனரி பொருட்கள்

இதில், தேர்வெழுதக்கூடிய பேனாவுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கறுப்பு இங்க் அல்லது நீல இங்க் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே, அந்த இரண்டில் எந்த இங்க், உங்களின் எழுத்தை அழகாக காட்டுமோ, அதையே உபயோகிக்கவும். மேலும், தேர்வுக்காக புதிய பேனாவை வாங்காமல், ஏற்கனவே ஓரளவுப் பழகிய பேனாவை, அதேசமயம், தொந்தரவு எதுவும் தராமல், நல்ல நிலையில் இருக்கும் பேனாவையே பயன்படுத்துதல் நலம். ஒவ்வொரு தேர்வுக்கு முன்பாகவும், பேனாவுக்கான இங்க்-ஐ முழுவதுமாக நிரப்பிக் கொள்ள மறக்க வேண்டாம்.

பேனா தவிர, பென்சில், ஸ்கேல் மற்றும் ரப்பர் மற்றும் பென்சில் சீவும் ஷார்ப்னர் போன்ற முக்கிய உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பயன்படுத்தக்கூடிய பென்சில், மிகவும் சிறியதாக இருந்தால், தேவையற்ற அசவுகரியங்கள் நேரும். எனவே, பயன்படுத்துவதற்கு எளிதான வகையிலான அளவில் அதை வைத்துக்கொள்ளவும்.

நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஸ்கேல், மர ஸ்கேலாகவோ அல்லது ஸ்டீல் ஸ்கேலாகவோ இல்லாமல், கண்ணாடி ஸ்கேலாக இருப்பதே சிறப்பு. ஏனெனில், கண்ணாடி ஸ்கேல் மூலம்தான் ஊடுருவி பார்க்க முடியும் என்பதால், நீங்கள் கோடு போடும்போது, தேவையான மற்றும் பொருத்தமான அளவில் இடம் விடுகிறீர்களா? என்பதை சரியாக பார்த்து செய்ய முடியும்.

ஷார்ப்னரை பொறுத்தமட்டில், அது ஓரளவேனும் நல்ல நிலையிலுள்ள ஷார்ப்னராக இருக்கட்டும். ஏனெனில், பென்சிலின் நுனி உடையும் பட்சத்திலோ அல்லது தேயும் நிலையிலோ, மிகப்பழைய ஷார்ப்னர்களை வைத்துக்கொண்டு, நம்மால் விரைவாக சீவ முடியாது மற்றும் தேவையற்ற டென்சனும் உண்டாகும்.

நீங்கள் பயன்படுத்தக்கூடிய ரப்பரும், புதிய அல்லது ஓரளவு நல்ல நிலையிலுள்ள ரப்பராகவே இருந்தால் நல்லது. ஏனெனில், சில பழைய ரப்பர்கள், அழுக்குப் படிந்தவையாக இருக்கும். அதை நாம் பயன்படுத்தும்போது, அழிப்பதற்கு சிரமப்படுவதோடு, பேப்பரிலும் அழுக்கு ஏற்படும்.

மேற்கண்ட ஸ்டேசனரி பொருட்களை தேர்வு அறைக்கு கொண்டுசெல்ல, ஒரு பொருத்தமான பையை பயன்படுத்தவும். சிலர், போனா, பென்சில், ஷார்ப்னர், ரப்பர் ஆகியவைகளை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு, ஸ்கேலை மட்டும் கையில் பிடித்துக் கொள்கின்றனர்.

சில நேரங்களில், தேர்வு மையத்திற்காக, அதிகதூரம் பயணம் செய்ய நேர்கையில், கையில் வைத்திருக்கும் ஸ்கேலை தவறவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், பையில் இருக்கும் பொருட்களிலும், ஏதாவதொன்று கீழே விழுந்து தொலைந்து விடுவதற்கான சாத்தியங்களும் உண்டு. எனவேதான், எதுவுமே நழுவிடாத வகையில், ஒரு பொருத்தமான பையைப் பயன்படுத்த வேண்டும். அது, உங்களின் school bag -ஆக கூட இருக்கலாம்.

ஹால் டிக்கெட்

நீங்கள் பலவிதமான உபகரணங்களை தயாராக வைத்து, அனைத்தையும் மறக்காமல் எடுத்துச் சென்றாலும், ஹால் டிக்கெட்டை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டால், என்ன நடக்கும்? அனைத்தும் பனால் ஆகிவிடும்.

எனவே, அதை எப்போதும் மறக்காத வகையில், உங்களது வீட்டிலேயே, "ஹால் டிக்கெட் முக்கியம்" என்று, அனைவரின் பார்வையிலும் எளிதாக படும்படி எழுதி வைத்துவிடவும். அதன்மூலம், நீங்கள் மறந்தாலும், குடும்ப உறுப்பினர்கள் அதைப் பார்த்து, உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்.

பயண ஏற்பாடுகள்

பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை, அதிகம் பேர், சைக்கிளில் செல்வோராக உள்ளனர். எனவே, தேர்வுக்கு முந்தைய நாள், உங்களின் சைக்கிளுடைய நிலையை நன்றாக பரிசோதித்துக் கொள்ளவும். தேர்வுக்கு புறப்பட்டு, போய் சேரும் வரை, எந்த தொந்தரவும் தராத வகையில், சைக்கிளை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதேசமயம், சிலருக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு, தேர்வின்போது சைக்கிள் ஓட்டிச் செல்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், வீட்டில் யாரையேனும் கொண்டு விட்டுவிட்டு வருமாறு கூறலாம்.

தேர்வுக்கு பைக்கில் செல்வோராக இருக்கும்பட்சத்தில், பெட்ரோல் மற்றும் இதர அம்சங்களை, முந்தைய நாளே சரிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். பெட்ரோலை நாளைக்கு, போகும் வழியில் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்க வேண்டாம். ஏனெனில், ஒருவேளை, அந்தநேரம் பார்த்து, பங்கில் கூட்டம் இருக்கலாம் மற்றும் வேறு ஏதேனும் எதிர்பாராத அசவுகரியம் நேரலாம். எனவே, கடைசிநேர ஆயத்தம் என்ற வார்த்தையையே மறந்துவிடுதல் நல்லது.

உடை

உங்களின் துவைத்த உடையை, முதல்நாளே அயர்ன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காலையில், விரைவாக எழுந்து அயர்ன் செய்து கொள்ளலாம் என்ற நினைப்பெல்லாம் வேண்டாம். அப்படி செய்யும்போது, அவசரத்தில், உங்களின் கையில்கூட சூடு வைத்துக்கொள்ள நேரிடலாம் மற்றும் தேவையற்ற பதற்றமும் வரலாம்.

பரங்கிப்பேட்டையில் மீன் உணவுப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி

பரங்கிப்பேட்டை கிராம வள மையத்தில் மீனவர்களுக்கான மதிப்புக்கூட்டிய மீன் உணவுப் பொருள்கள் தயாரித்தல், டீசல் என்ஜின் இயக்குதல் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை குறித்த பயிற்சி அண்மையில் தொடங்கியது.

 எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய மீன் வளர்ச்சி வாரியம் சார்பில் 5 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் கே.கதிரேசன் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியது: பெண்கள் சுயதொழில் செய்வதனால், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

 மேலும், குழந்தைகள் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும். கடல் உணவு உடல் நலத்துக்கு ஏற்ற உணவாகும். அதில் புரதச் சத்துகள் நிறைந்துள்ளன.

 கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் சார்பில் பெண்கள் முன்னேற்றத்துக்காக காளான் வளர்ப்பு, கடல்பாசி வளர்ப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனை கடலோர கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

 நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்வளத் துறை ஆய்வாளர் எஸ்.அஞ்ஞனாதேவி பேசுகையில், மீன்களில் சுண்ணாப்புச் சத்து, மாங்கனிசு, பாஸ்பரஸ், கந்தகம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. கடல் உணவு பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயிற்சி பெறும் பெண்கள் தங்கள் பகுதிகளில் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்றார்.

 எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட அலுவலர் ஆர்.இளங்கோவன் பயிற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.

 பயிற்சியில் புதுக்குப்பம், சி.புதுப்பேட்டை, சின்னூர் வடக்கு, சின்னூர் தெற்கு, கிள்ளை, பரங்கிப்பேட்டை, எம்ஜிஆர் திட்டு, அய்யம்பேட்டை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

 பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி நிறுவன பணியாளர்கள் பி.அருள்தேவன், எம்.ஸ்ரீகாந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

Tuesday, February 24, 2015

பிளஸ்2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை

 பிளஸ்2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தேர்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.இதுகுறித்து
 கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வு நடக்கும் மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால், அவர்களது வினாத்தாள், விடைத்தாள் மற்றும் கைப்பற்றப்பட்ட இதர ஆவணங்களை முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தேர்வுத்துறை அறிவுறு த்தியுள்ளது.
ஒழங்கீனச் செயலில் ஈடுபட்ட தேர்வர்கள் அன்றைய நாள் நடக்கும் தேர்வினை தொடர்ந்து எழுத முடியாது. அடுத்தடுத்து வரும் தேர்வுகள் எழுதலாம். ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தேர்வரின் முகப்புச் சீட்டில்   விணீறீ    என உள்ள கட்டத்தில் சிவப்பு மையினால் டிக் செய்யப்படும்.

பின்னர் தேர்வரிடம் இருந்து கைப்பற்ற ஆவணங்கள், விடைத்தாள், வினாத்தாள் பறிமுதல், செய்த தவறினை குறிக்கும் வகையில் தேர்வரின் வாக்குமூலம், தவறு செய்தவரை கண்டு பிடித்தவரின் வாக்குமூலம், அறை கண்காணிப்பாளரின் வாக்குமூலம், தேர்வரின் இருக்கை அறை மாதிரி வரைபடம் ஆகியவை சேகரித்து முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பின்னர் சம்மந்தப்பட்ட தேர்வர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்

Monday, February 23, 2015

இயலாதவரின் இழி பழக்கங்கள்!

நம்மை வாழ்வில் ஏற்றுவதும் இறக்குவதும் நமது பழக்கங்களே. வாழ்க்கை ஏணியில் முன்னேற நாம் பிடித்துக்கொள்ளும் பலமான கயிறுதான் நம்பழக்கங்கள்.

வெற்றி பெறுவதற்கான பழக்கங்களை முன்பு கண்டோம்... இழிபழக்கங்கள் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா?

இயலாதவர் இறுக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் இழி பழக்கங்கள் ஏழு:

1. எதிர்மறை எண்ணங்கள்: நினைப்பது, பேசுவது செய்வது எல்லாமே நெகடிவ் ஆக இருக்கும். ஒவ்வொரு வாய்ப்பிலும் அவர்கள் கண்ணில்படுவது பிரச்சனை மட்டுமே. வெயில், மழை, காற்று எல்லாமே கூட அவர்களுக்கு எதிர் என்று எளிதில் சொல்லிவிடுவார்கள். சிறுசிறு சிக்கல்களைகூட பெரிதாக பார்த்து ஆபத்தில் தம்மை கொண்டுபோய்விட்டுக்கொள்வார்கள்.

தோல்விகள் தன்னை வீழ்த்தவந்த எமன் என்று நினைப்பதால் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள ஏதும் இல்லை என்று நினைப்பார்கள். தோல்விகளில் துவண்டுபோய் முன்னேறாமல் தமது வசதி வட்டத்தில் ஆசனம் போட்டு அமர்ந்துகொள்வார்கள்.

2. குறைந்த தன்னம்பிக்கை: செய்த பிறகே யோசிப்பார்கள். ஒருகணநேர உந்துதலில் காரியத்தில் இறங்கிவிட்டு பிறகுதான் அதைவிட சிறந்த வேறு சாய்ஸ் அல்லது வழிமுறை இருப்பதை கண்டு அறிவார்கள். மேலும் தம்மையே நொந்து கொள்வார்கள்.

வருங்காலம் பற்றி சிந்திக்காமல் நடந்ததையே நினைத்து நேரத்தை வீணடிப்பார்கள். தற்சமயம் நடப்பதை மறந்து எதுவுமே தற்செயலாக நடக்கும் என்று நினைப்பார்கள். தன்செயல் தான் வெற்றிபெற்றுத்தரும் என்பதையும் நடந்த ஒன்றை நினைத்து நின்றால் ஏற்படும் இழப்புகளையும் உணரமறுக்கிறார்கள்.

3. அர்த்தமற்ற பேச்சு: கேட்பதுகுறைவு; பேசுவதுஅதிகம். தானே பேசவேண்டும். பிறர் அதைகேட்கவேண்டும் என்பதில் தொடங்கி பொய்யைக்கூட உண்மைபோல பேச விரும்புகிறார்கள். தாம்பேசுவது அபத்தம் என்று சற்றும் நினைக்காமல் தமது சுயபிரதாபங்களை எடுத்துவைத்து பெயர் வாங்கும் இடைவெளியில் பிறர் சொல்லும் நல்ல யோசனைகளை கோட்டை விடுவார்கள்.

காதுகளை மூடிக்கொண்டு வாயை மட்டும் திறந்துவைத்தால் வாய்ப்புகள் வருமே தவிர வெற்றி வராது. பிறர் சொன்னதைக்கேட்டல் தமக்கு தரக்குறைவு என்று நினைக்கும் எண்ணம் இருப்பதுவும் காரணம்.

4. முயலாமை: சுலபமாக முடியாது என்று ஒப்புக்கொள்வார்கள். வெற்றியாளர்கள் தோல்வியில் இருந்து பாடங்கள் கற்பர். தோல்வியாளர்கள் தோல்வி வந்ததுமே துவண்டுபோய் தன்னால் இயலாது என்ற முடிவுக்கு வருவார்கள்.

தவறு நிகழும்போது மேலும் செய்ய விருப்பம் இல்லாது போய்பாதியில் விட்டு விட்டு அடுத்த விஷயத்தை பாதியில் எடுத்துவிட்டு அரைகுறை நிபுணர்களாக வலம் வருவார்கள். ஆனால் கதை என்னவோ அதேதான் இருக்கும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று. எடுத்தேன் முடித்தேன் என்று அல்ல. கனவுகளை நனவாக்கும் பழக்கம் இவர்களிடம் சிறிதும் இருக்காது.

5. பொறாமை: அடுத்தவரையும் தமது நிலைக்கு சுலபமாக கொண்டுவரும் சாமர்த்தியம் நிறைய உண்டு. வெற்றியாளர்களைக் கண்டு பொறாமை கொள்வாரே தவிர அவர்களிடமிருந்து என்ன கற்கலாம் என்று ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். வெற்றிபெறுபவர் பற்றி புரளி கிளப்பிவிடுவது, அவதூறு பேசுவது, வதந்திபரப்புவது, அவர்களை எப்படியாவது கீழே இறக்குவது என்பதில் தீர்மானமாக இருப்பது இவர்கள் பழக்கம். வெற்றியின் ரகசியம் கற்றுக்கொள்ள நேரம் இல்லை என்று விட்டு பிறரை கவிழ்க்க அதிகம் மெனக்கெடுவார்கள். எதிலும் தம்மால் ஜெயிக்கமுடியும் என்று சற்றும் நம்பாதவர்கள்.

6. சோம்பேறித்தனம்: நேரத்தை வீணடிப்பவர்கள். அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று கொஞ்சமும் தெரியாதவர்கள். உண்பது, உறங்குவது, உழைக்கும் நேரத்தை களிப்பில் இழப்பது, வெற்றுச்சுவரை உற்றுப்பார்ப்பது, கற்றுக்கொள்ள மறுப்பது, வேலை மற்றும் இன்பம் இரண்டையும் பாகுபாடின்றி நேரம் வகுத்து பொழுதைக் கழிப்பவர்கள் இவர்கள். எதற்கும் நேரம் இல்லை என்னும் இவர்களுக்கு நேரம் சரியில்லை என்று பிறகுதான் புரியும்.

7. குறைகூறுதல்: குறுக்குவழிதான் எனதுவழி என்பார்கள். அதிகம் வருவாய், அங்கீகாரம் இல்லாத ஒரு பாதையினை தேர்வு செய்துவிட்டு வெற்றிபெற்றவர்களை ஏளனம் செய்வார்கள். கஷ்டம், வலி, தியாகம் இல்லாது சிறந்தவை மட்டும் வேண்டும் என்றால் எப்படிக் கிடைக்கும் என்று நினைத்துப்பார்க்காத வேடிக்கை மனிதர்கள் இவர்கள். போட்டதுதானே முளைக்கும், செய்ததுதானே கிடைக்கும் என்று இவர்கள் புரிந்துகொள்ள மறுப்பவர்கள். முயற்சியும், வெற்றிக்கு தேவையான சரியான நடவடிக்கையும் எப்போதும் நல்ல பலன்தரும் என்பதை உணரமறுப்பதால் அவஸ்தைக்கு உள்ளாகும் மனிதர்கள் இவர்கள்.

நீங்கள் எப்படி?

எடுத்த காரியம்யாவிலும் வெற்றிபெறும் வல்லவர்கள் பலவழிமுறைகளை தெரிந்துவைத்திருக்கிறார்கள், பல மனிதர்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள், சிறந்த நபர்களை உதாரண மனிதர்களாக தேர்வு செய்கிறார்கள், சரியாக திட்டமிடுகிறார்கள், வலிவேதனை உணராது உழைக்கிறார்கள், தியாகம் செய்ய துணிகிறார்கள், தோல்வி கொண்டு துவளாது முன்னேறுகிறார்கள், சாதிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள், பிறரது அபிப்ராயங்கள் கேட்டு பாதை மாறாமல் இருக்கிறார்கள். அதனால் வெற்றி இவர்களை தேடிவருகிறது. எனவே பழக்கம் நல்லதாக இருந்தால் வெற்றி பெறுவது ஒரு பழக்கமாக நல்ல வழக்கமாக மாறி விடுகிறது. நீங்கள் எப்படி ?

பழக்கம் தீயது என்றால் மாற்றுங்கள். வெற்றிக்கொடி நாளும் ஏற்றுங்கள்.

Friday, February 20, 2015

தேர்வறையில் கால்குலேட்டர்களுக்கு அனுமதி!!!

சென்னை: பிளஸ் 2 தேர்வில், சிறப்புப் பாடம் எழுதும் மாணவர்களுக்கு,  புரோகிராம் செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே, தேர்வறையில் அனுமதிக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5 - 31 வரை நடக்கிறது. தேர்வு அறையில், மாணவர்கள் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்களில், எதை அனுமதிக்கலாம்; எதை அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், சிறப்புத் தேர்வுகளுக்கான கூடுதல் தேவைகள் குறித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கணிதம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல் மற்றும் வணிகக் கணிதம் போன்ற தேர்வுகளுக்கு, லாகரிதம் அட்டவணை, புள்ளிவிவர அட்டவணை, கிராப் ஷீட் போன்றவை தேர்வறையில் வழங்கப்படும்.

புள்ளியியல் மற்றும் வணிகக் கணிதம் பாடங்கள் எழுதும் மாணவ, மாணவியர், புரோகிராம் செய்யப்படாத சாதாரண கால்குலேட்டர் மட்டும் கொண்டுவர அனுமதிக்கப்படும். இதுபோன்ற விவரங்கள், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளன.

Tuesday, February 17, 2015

8.43 லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 தேர்வு: கண்காணிப்பதற்கு 1000 பறக்கும் படைகள் தயார்


மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களைக் கண்காணிக்க, 4,000 ஆசிரியர், அதிகாரிகளைக் கொண்ட 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 5 முதல் 31 வரை, பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், 6,256 பள்ளிகளைச் சேர்ந்த, 3,90,753 மாணவர்கள், 4,52,311 மாணவியர் என, மொத்தம் 8,43,064 பேர் பங்கேற்கின்றனர். இதில், தமிழ் வழியில் தேர்வு எழுதும் 5,56,498 பேருக்கு, 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, கடந்த ஆண்டைவிட, 16,947 மாணவ, மாணவியர் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். சிறைக்கைதிகள், 77 பேர், புழல் மத்திய சிறையில் தேர்வு எழுதுகின்றனர். காப்பியடித்தல், ஆள் மாறாட்டத்தில் ஈடுபடாமல் கண்காணிக்க, 4,000 ஆசிரியர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட, 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய தொழில்நுட்ப பாடத் தேர்வின்போது, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொண்ட தனிப்படை, தேர்வு மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த உள்ளது.
10ம் வகுப்பு தேர்வு
மார்ச் 19ல் துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம், புதுச்சேரியிலுள்ள 11,827 பள்ளிகளைச் சேர்ந்த 5,40,505 மாணவர்கள், 5,32,186 மாணவியர் என, 10,72,691 பேர் எழுதுகின்றனர்.
இதில், தமிழ் வழி மாணவர்கள், 7,30,590 பேர். இத்தேர்வுக்கு 3,298 தேர்வு மையங்களில், 75 ஆயிரம் தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களைக் கண்காணிக்க 5,200 பேர் கொண்ட 1,300 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புழல் சிறையில்...
பாளையங்கோட்டை மத்திய சிறையில், 33; கோவை மத்திய சிறை, 97; சென்னை, புழல்சிறையில் 111 பேர் தேர்வெழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு, தரைத்தளத்திலேயே தேர்வு அறைகள் அமைக்கப்படும். வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங் களில், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி., தலைமையிலான குழுவினர், பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வை செய்கின்றனர்.
புதுச்சேரியில்...
புதுச்சேரியில், 128 பள்ளிகளைச் சேர்ந்த 6,575 மாணவர்கள், 7,731 மாணவியர், 33 தேர்வு மையங்களில் பிளஸ் 2 தேர்வையும், 291 பள்ளிகளைச் சேர்ந்த 9,703 மாணவர்கள், 9,856 மாணவியர், 48 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு தேர்வையும் எழுதுகின்றனர்.
சென்னையில்...
சென்னையில், 412 பள்ளிகளைச் சேர்ந்த 24,653 மாணவர்கள், 28,750 மாணவியர், 144 தேர்வு மையங்களில் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதேபோல் 578 பள்ளிகளைச் சேர்ந்த 28,124 மாணவர்கள், 29,230 மாணவியர், 209 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.

Monday, February 16, 2015

மாணவர்களை விட பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவிகளே அதிகம்

நிகழும் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வெழுதும், மாணவ, மாணவிகளில் மாணவிகளே அதிகமாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. பிளஸ் 2 தேர்வில் 6,256 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் 11,827 பள்ளிகளைச் சேர்ந்த 10,72,691 மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வை 16,947 மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 33,816 மாணவர்களும் நிகழாண்டு கூடுதலாக எழுதுகின்றனர்.

60,000 மாணவிகள் அதிகம்: நிகழாண்டு பிளஸ் 2 தேர்வை 3,90,753 மாணவர்களும், 4,52,311 மாணவிகளும் எழுத உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை 60 ஆயிரம் அதிகமாக உள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 5,40,505 மாணவர்களும், 5,32,186 மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர். 10-ஆம் வகுப்பில் தனித்தேர்வர்களாக 50,429 பேரும், பிளஸ் 2 தேர்வில் 42,963 பேரும் எழுதுகின்றனர்.

பிளஸ் 2 தேர்வுக்காக 2,377 தேர்வு மையங்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வுக்காக 3,298 தேர்வு மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

77 சிறைவாசிகள்: நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை புழல் சிறைவாசிகள் 77 பேர் எழுதுகின்றனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 241 சிறைவாசிகள் எழுதுகின்றனர்.

தமிழ் வழியில்... பிளஸ் 2 தேர்வை 5,50,000 பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 7,30,000 பேரும் தமிழ் வழியில் எழுதுகின்றனர்.