பரங்கிப்பேட்டை கிராம வள மையத்தில் மீனவர்களுக்கான மதிப்புக்கூட்டிய மீன் உணவுப் பொருள்கள் தயாரித்தல், டீசல் என்ஜின் இயக்குதல் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை குறித்த பயிற்சி அண்மையில் தொடங்கியது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய மீன் வளர்ச்சி வாரியம் சார்பில் 5 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் கே.கதிரேசன் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியது: பெண்கள் சுயதொழில் செய்வதனால், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
மேலும், குழந்தைகள் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும். கடல் உணவு உடல் நலத்துக்கு ஏற்ற உணவாகும். அதில் புரதச் சத்துகள் நிறைந்துள்ளன.
கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் சார்பில் பெண்கள் முன்னேற்றத்துக்காக காளான் வளர்ப்பு, கடல்பாசி வளர்ப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனை கடலோர கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்வளத் துறை ஆய்வாளர் எஸ்.அஞ்ஞனாதேவி பேசுகையில், மீன்களில் சுண்ணாப்புச் சத்து, மாங்கனிசு, பாஸ்பரஸ், கந்தகம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. கடல் உணவு பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயிற்சி பெறும் பெண்கள் தங்கள் பகுதிகளில் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்றார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட அலுவலர் ஆர்.இளங்கோவன் பயிற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.
பயிற்சியில் புதுக்குப்பம், சி.புதுப்பேட்டை, சின்னூர் வடக்கு, சின்னூர் தெற்கு, கிள்ளை, பரங்கிப்பேட்டை, எம்ஜிஆர் திட்டு, அய்யம்பேட்டை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி நிறுவன பணியாளர்கள் பி.அருள்தேவன், எம்.ஸ்ரீகாந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment