பிளஸ்2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தேர்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.இதுகுறித்து
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வு நடக்கும் மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால், அவர்களது வினாத்தாள், விடைத்தாள் மற்றும் கைப்பற்றப்பட்ட இதர ஆவணங்களை முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தேர்வுத்துறை அறிவுறு த்தியுள்ளது.
ஒழங்கீனச் செயலில் ஈடுபட்ட தேர்வர்கள் அன்றைய நாள் நடக்கும் தேர்வினை தொடர்ந்து எழுத முடியாது. அடுத்தடுத்து வரும் தேர்வுகள் எழுதலாம். ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தேர்வரின் முகப்புச் சீட்டில் விணீறீ என உள்ள கட்டத்தில் சிவப்பு மையினால் டிக் செய்யப்படும்.
பின்னர் தேர்வரிடம் இருந்து கைப்பற்ற ஆவணங்கள், விடைத்தாள், வினாத்தாள் பறிமுதல், செய்த தவறினை குறிக்கும் வகையில் தேர்வரின் வாக்குமூலம், தவறு செய்தவரை கண்டு பிடித்தவரின் வாக்குமூலம், அறை கண்காணிப்பாளரின் வாக்குமூலம், தேர்வரின் இருக்கை அறை மாதிரி வரைபடம் ஆகியவை சேகரித்து முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பின்னர் சம்மந்தப்பட்ட தேர்வர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்

0 கருத்துரைகள்:
Post a Comment