12ம் வகுப்பை நிறைவு செய்யும் தருணம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறைய வேலை கொடுத்து தேர்வெழுதி முடித்திருக்கும் மாணவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்வது தேவையே. ஆனால், ஓடிக் களைத்த முயலைப்போல நீண்ட தூக்கம் போட்டுவிடக்கூடாது. வாழ்வின் அடுத்த கட்டத்துக்கான தயாரித்தல்கள் நிறைய இருக்கின்றன.
'Mens sana in corpore sano’ என்பது ஒரு லத்தீன் பழமொழி. ‘ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனம்’ என்பது இதன் பொருள். சாதனைகள் படைக்க வேண்டிய இளைஞர்களின் மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; அதற்கு அவர்களது உடலும் நல்ல ஆரோக்கியத்தில் திளைக்க வேண்டும். தேர்விலேயே கவனம் செலுத்தி உடல்நலத்தைப் புறக்கணித்திருக்க வாய்ப்புண்டு. புதுத்தெம்பு பெற சற்று ஊர் சுற்றலாம், அதாவது சுற்றுலா செல்லலாம். பழைய உறவுகளுடன் புதிய முகங்கள், புதிய இடங்களைப் பார்க்கலாம். விட்டு வைத்திருந்த உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் மீண்டும் முறையாக ஈடுபடுங்கள். அல்லது புதிதாகப் பழகிக்கொள்ளுங்கள். ஜிம், நீச்சல்குளம், ஓட்டப்பயிற்சி, கிரிக்கெட், டென்னிஸ் என்று எதில் திறமையும் ஆர்வமும் உண்டோ அதில் ஈடுபடலாம்.
12ம் வகுப்பின் இறுதிக்கட்டமானது வாழ்வின் திருப்புமுனைகளில் ஒன்று. மேற்கொண்டு எந்தப் பாதையில் பயணத்தைத் தொடர்வது என்பதை முடிவு செய்ய வேண்டும். தவறாக முடிவெடுத்துவிட்டால் இழப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். ஆகவே பொறுமையாக, முழுமையாகச் சிந்தித்து முடிவெடுங்கள். மேற்படிப்பு எந்த வகை? தேர்வு செய்யும் படிப்பு, தாம் விரும்பும் வேலைக்கு ஏற்றதா? அப்படி என்ன வகை வேலைகள் உள்ளன? என்பதுதான் முக்கியமாக முடிவெடுக்க வேண்டியவை.
இறுதிக் கேள்வியை முதலில் எடுத்துக்கொள்வோம். உள்ள வேலைத் துறைகளில் முக்கியமானவை, இந்திய ஆட்சிப்பணி (IAS), காவல் (IPS), வனப்பணி (IFS), பாதுகாப்பு (தரை, கடல், விமானம்), கலைப் படிப்புத்துறைகள் (வரலாறு, பொருளியல், அரசியல் முதலியன), அறிவியல்துறை (இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் முதலியவற்றின் அடிப்படையில்), கணிதம், புள்ளியியல், மேலாண்மை, கணக்கியல், சட்டம், மொழிகள், நுண்கலை, விருந்தோம்பலும் உணவியலும், சுற்றுலா, அகழ்வாராய்வு, உடல் மருத்துவம், பல் மருத்துவம், மாற்று மருத்துவங்கள் (ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி), துணை மருத்துவங்கள் (செவிலியியல், மருந்தியல் முதலியன), வேளாண்மை, கால்நடை மருத்துவம், பொறியியல் (சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலிய 40-க்கும் மேற்பட்ட கிளைகள்), கவின் கலை, பயோ டெக்னாலஜி, உடற்பயிற்சிக்கல்வி மற்றும் மேற்சொன்ன எல்லாத் துறைகளிலும் ஆசிரியப்பணி.
இவற்றில் எந்தத் துறையை நீங்கள் தேர்ந்தெடுப்பது என்பதை இப்பொழுது முடிவு செய்தாக வேண்டும். பிறர் வற்புறுத்தலுக்காகவோ, கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டோ நமக்குப் பொருந்தாத விருப்பமில்லாத துறையைத் தேர்ந்தெடுத்தால், பிடிக்காத வாழ்க்கைத் துணையோடு குடும்பம் நடத்துவது போலத்தான். கிஷிரி என்ற பார்முலா இதற்கு உங்களுக்குத் துணையாக இருக்கும்.
முதலில், A:Aptitude என்று சொல்லப்படும் உங்கள் விருப்பம். சிலர் சிறுவயதிலிருந்தே சில துறைகளில் காதலை வளர்த்துக் கொண்டிருக்கலாம்; சிலர் கண்டும் கேட்டும் விருப்பம் கொண்டிருக்கலாம். அதற்கு மதிப்பளியுங்கள். ஆனால், சரியாக ஆராயாமல் தவறாக முடிவு செய்யக்கூடாது. துறை வல்லுனர்களின் கருத்தைக் கேட்கலாம்; வலைத்தளங்களைப் பார்க்கலாம்; வழிகாட்டிக் கருத்தரங்குகளில் பங்கேற்கலாம்; தமக்கு ஏற்புடையதா என அறிய ‘சைக்கோ மெட்ரிக் டெஸ்ட்’ எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து, S: Scope. பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்த பிறகு, அதில் நாம் விரும்பும் முன்னேற்றத்திற்கு வழியிருக்கிறதா என கணிக்க வேண்டும். பட்டப்படிப்புக்கு மட்டுமின்றி மேற்படிப்பு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள், கிடைக்கக்கூடிய ஊதியம், மனநிறைவு ஆகியவற்றையும் கவனித்துத் துறையைத் தேர்வு செய்யலாம். பிறகு, K: Knowledge. கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்த துறையில் உள்ள உட்பிரிவுகளை அறிந்து கொள்ள வேண்டும். அத்துறை தொடர்பான அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
‘ASK’க்கு விடை கிடைத்தபிறகு, சேர்க்கைக்கு விண்ணப்பித்தல் நுழைவுத் தேர்வுகள் இருந்தால் அவற்றுக்குத் தயாரித்தல் ஆகியவற்றையும் இப்பொழுது செய்தாக வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் வரும் கல்லூரிகளில் +2 அடிப்படையிலான படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் இல்லை. ஆனால் அகில இந்திய, அளவில் ஏராளமான நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேவையான தேர்வுகளை தெரிந்தெடுத்து, விண்ணப்பித்து, திட்டமிட்டு முறையாகத் தயார்படுத்திக்கொள்ள இது சரியான நேரம்.
தமிழ்நாட்டின் பள்ளிகளில் தரமான பாடத்திட்டமும் திறமையான ஆசிரியர்களும் இருந்தாலும், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 12ம் வகுப்பில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றாலும், அவர்களின் மேற்படிப்பு செயல்பாடு ஆதங்கத்தையே அளிக்கிறது. குறிப்பாகப் பொறியியலில், தமிழகத்தின் முதன்மைக் கல்லூரியான, கிண்டி பொறியியற் கல்லூரியிலேயே முதல் அரையாண்டுத் தேர்வில் கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களில் 50%க்கு மேல் தோல்வியுறுகிறார்கள் என்பது திகைப்பளிக்கிறது. 12ம் வகுப்பு அரசுத் தேர்வுகள் மாணவர்களின் புரிதலைச் சோதிப்பதற்குப் பதிலாக அவர்களின் நினைவாற்றலையே அளவிடுவதாகப் பல ஆண்டுகளாக இருந்து வருவதுதான் இதற்கு முக்கிய காரணம்.
12ம் வகுப்புத் தேர்வு முடிந்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்து வகுப்பில் அமரும் வரையிலான 4 மாத இடைவெளியில், தாம் படித்த பகுதிகள் அனைத்தையும் மாணவர்கள் முழுவதுமாக மறந்துவிட்டு, துடைத்த பலகையாகக் கல்லூரிக்கு வருவதும் இதற்குக் காரணம். இந்த 4 மாத இடைவெளியில், கணிதம் போன்றவற்றில் 11, 12ம் வகுப்புப் பாடங்கள் முழுவதையும், எதையும் ஒதுக்காமல் மீள்பார்வை (Revision) செய்யுங்கள். ஒரு அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்... அடித்தளம் உறுதியாக இருந்தால்தான் கட்டிடம் நிலைக்கும்!

0 கருத்துரைகள்:
Post a Comment