Share

Monday, January 19, 2015

கணக்கு பண்ணுங்க...

பல்வேறு போட்டித் தேர்வுகளின் போது இரண்டு மற்றும் மூன்றிலக்க எண்களில் வர்க்கங்கள் கேள்வியாக கேட்கப்படுகின்றன. அவற்றில் 1 ஆல் முடியும் இரண்டிலக்க (21, 51, 81...) எண்களுக்கு அவற்றின் வர்க்கங்கள் காணும் எளிய முறைகளும் உள்ளன.

====> வர்க்கம் காண வேண்டிய எண்ணை முதலில் 10 ஆல் வகுபடக்கூடிய எண்ணாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக 71 என்ற எண்ணை வர்க்கப்படுத்த அதிலிருந்து 1 ஐ கழித்து, 70 ஆக மாற்றிக் கொள்ள வேண்டும்.

71 - 1 = 70

====> பின்னர் நாம் ஏற்கனவே அறிந்துள்ள, 10ன் மடங்கு எண்களை வர்க்கப்படுத்தும் எளிய முறை மூலம், அந்த எண்ணை வர்க்கப்படுத்த வேண்டும்.

விடையாக கிடைத்த 70 ஐ வர்க்கப்படுத்த,

70 ஜ் 70 = 4900

====> தற்போது, வர்க்கப்படுத்த வேண்டிய எண்ணையும், 10ன் மடங்காக மாற்றப்பட்ட எண்ணையும் கூட்டிக்கொள்ள வேண்டும்.

வர்க்கப்படுத்த வேண்டிய எண் 71 ஐ அதனை முழு எண்ணாக மாற்ற வந்த 70 உடன் கூட்டிக்கொள்ள வேண்டும்.

71 + 70 = 141

====> இறுதியாக தற்போது வந்த கூட்டுத்தொகையை, ஏற்கனவே கண்டுபிடித்துள்ள 10ன் மடங்கு எண்ணின் வர்க்கத்துடன் கூட்டிக்கொள்ள இறுதி விடை கிடைத்து விடுகிறது.

===> 4900
141 +
------
5041
------
ஃ 71 ஜ் 71 = 5041
இப்போது மற்றுமொரு உதாரணமாக எண் 41 ஐ எடுத்துக்கொள்வோம்,
41 ===> 41 - 1 = 40,
40 ஜ் 40 = 1600,
41 + 40 = 81,
1600 + 81 = 1681 ===> ஃ 41 ஜ் 41 = 1681....

0 கருத்துரைகள்: