Share

Friday, February 20, 2015

தேர்வறையில் கால்குலேட்டர்களுக்கு அனுமதி!!!

சென்னை: பிளஸ் 2 தேர்வில், சிறப்புப் பாடம் எழுதும் மாணவர்களுக்கு,  புரோகிராம் செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே, தேர்வறையில் அனுமதிக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5 - 31 வரை நடக்கிறது. தேர்வு அறையில், மாணவர்கள் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்களில், எதை அனுமதிக்கலாம்; எதை அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், சிறப்புத் தேர்வுகளுக்கான கூடுதல் தேவைகள் குறித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கணிதம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல் மற்றும் வணிகக் கணிதம் போன்ற தேர்வுகளுக்கு, லாகரிதம் அட்டவணை, புள்ளிவிவர அட்டவணை, கிராப் ஷீட் போன்றவை தேர்வறையில் வழங்கப்படும்.

புள்ளியியல் மற்றும் வணிகக் கணிதம் பாடங்கள் எழுதும் மாணவ, மாணவியர், புரோகிராம் செய்யப்படாத சாதாரண கால்குலேட்டர் மட்டும் கொண்டுவர அனுமதிக்கப்படும். இதுபோன்ற விவரங்கள், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள்: