எம்.பில்., பிஹெச்.டி., படிக்கும் மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பல்கலைக்கழக மானியக்குழு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின்படி இந்தாண்டு 750 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. முதுநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, முழுநேரமாக எம்.பில்., அல்லது பிஹெச்.டி. படிப்பவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம். அறிவியல், மானுடவியல், சமூக அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருக்க வேண்டும். எம்.பில். மாணவர்களுக்கு ரூ.25,000, பிஹெச்.டி. மாணவர்களுக்கு ரூ.28,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.11.2015. கூடுதல் விவரங்களுக்கு www.ugc.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
பிரட் போண்டா
9 years ago






0 கருத்துரைகள்:
Post a Comment