பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு பொதுத்தேர்வுகள்
தொடங்கவுள்ளன. அதை முன்னிட்டு, மாணவர்கள் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், என்னதான் முயற்சி செய்து, கடினமாக படித்தாலும், தேர்வு நாளன்று ஏற்படும் சில குளறுபடிகள், தேர்வை சரியாக எழுத முடியாமல் செய்துவிடுவதோடு, உங்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடுகின்றன.
எனவே, ஒவ்வொரு தேர்வுக்கு முன்பாகவும், என்னென்ன முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் மற்றும் என்ன மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என்பதைப் பற்றி சற்று அலசலாம்.
ஸ்டேசனரி பொருட்கள்
இதில், தேர்வெழுதக்கூடிய பேனாவுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கறுப்பு இங்க் அல்லது நீல இங்க் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே, அந்த இரண்டில் எந்த இங்க், உங்களின் எழுத்தை அழகாக காட்டுமோ, அதையே உபயோகிக்கவும். மேலும், தேர்வுக்காக புதிய பேனாவை வாங்காமல், ஏற்கனவே ஓரளவுப் பழகிய பேனாவை, அதேசமயம், தொந்தரவு எதுவும் தராமல், நல்ல நிலையில் இருக்கும் பேனாவையே பயன்படுத்துதல் நலம். ஒவ்வொரு தேர்வுக்கு முன்பாகவும், பேனாவுக்கான இங்க்-ஐ முழுவதுமாக நிரப்பிக் கொள்ள மறக்க வேண்டாம்.
பேனா தவிர, பென்சில், ஸ்கேல் மற்றும் ரப்பர் மற்றும் பென்சில் சீவும் ஷார்ப்னர் போன்ற முக்கிய உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பயன்படுத்தக்கூடிய பென்சில், மிகவும் சிறியதாக இருந்தால், தேவையற்ற அசவுகரியங்கள் நேரும். எனவே, பயன்படுத்துவதற்கு எளிதான வகையிலான அளவில் அதை வைத்துக்கொள்ளவும்.
நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஸ்கேல், மர ஸ்கேலாகவோ அல்லது ஸ்டீல் ஸ்கேலாகவோ இல்லாமல், கண்ணாடி ஸ்கேலாக இருப்பதே சிறப்பு. ஏனெனில், கண்ணாடி ஸ்கேல் மூலம்தான் ஊடுருவி பார்க்க முடியும் என்பதால், நீங்கள் கோடு போடும்போது, தேவையான மற்றும் பொருத்தமான அளவில் இடம் விடுகிறீர்களா? என்பதை சரியாக பார்த்து செய்ய முடியும்.
ஷார்ப்னரை பொறுத்தமட்டில், அது ஓரளவேனும் நல்ல நிலையிலுள்ள ஷார்ப்னராக இருக்கட்டும். ஏனெனில், பென்சிலின் நுனி உடையும் பட்சத்திலோ அல்லது தேயும் நிலையிலோ, மிகப்பழைய ஷார்ப்னர்களை வைத்துக்கொண்டு, நம்மால் விரைவாக சீவ முடியாது மற்றும் தேவையற்ற டென்சனும் உண்டாகும்.
நீங்கள் பயன்படுத்தக்கூடிய ரப்பரும், புதிய அல்லது ஓரளவு நல்ல நிலையிலுள்ள ரப்பராகவே இருந்தால் நல்லது. ஏனெனில், சில பழைய ரப்பர்கள், அழுக்குப் படிந்தவையாக இருக்கும். அதை நாம் பயன்படுத்தும்போது, அழிப்பதற்கு சிரமப்படுவதோடு, பேப்பரிலும் அழுக்கு ஏற்படும்.
மேற்கண்ட ஸ்டேசனரி பொருட்களை தேர்வு அறைக்கு கொண்டுசெல்ல, ஒரு பொருத்தமான பையை பயன்படுத்தவும். சிலர், போனா, பென்சில், ஷார்ப்னர், ரப்பர் ஆகியவைகளை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு, ஸ்கேலை மட்டும் கையில் பிடித்துக் கொள்கின்றனர்.
சில நேரங்களில், தேர்வு மையத்திற்காக, அதிகதூரம் பயணம் செய்ய நேர்கையில், கையில் வைத்திருக்கும் ஸ்கேலை தவறவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், பையில் இருக்கும் பொருட்களிலும், ஏதாவதொன்று கீழே விழுந்து தொலைந்து விடுவதற்கான சாத்தியங்களும் உண்டு. எனவேதான், எதுவுமே நழுவிடாத வகையில், ஒரு பொருத்தமான பையைப் பயன்படுத்த வேண்டும். அது, உங்களின் school bag -ஆக கூட இருக்கலாம்.
ஹால் டிக்கெட்
நீங்கள் பலவிதமான உபகரணங்களை தயாராக வைத்து, அனைத்தையும் மறக்காமல் எடுத்துச் சென்றாலும், ஹால் டிக்கெட்டை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டால், என்ன நடக்கும்? அனைத்தும் பனால் ஆகிவிடும்.
எனவே, அதை எப்போதும் மறக்காத வகையில், உங்களது வீட்டிலேயே, "ஹால் டிக்கெட் முக்கியம்" என்று, அனைவரின் பார்வையிலும் எளிதாக படும்படி எழுதி வைத்துவிடவும். அதன்மூலம், நீங்கள் மறந்தாலும், குடும்ப உறுப்பினர்கள் அதைப் பார்த்து, உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்.
பயண ஏற்பாடுகள்
பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை, அதிகம் பேர், சைக்கிளில் செல்வோராக உள்ளனர். எனவே, தேர்வுக்கு முந்தைய நாள், உங்களின் சைக்கிளுடைய நிலையை நன்றாக பரிசோதித்துக் கொள்ளவும். தேர்வுக்கு புறப்பட்டு, போய் சேரும் வரை, எந்த தொந்தரவும் தராத வகையில், சைக்கிளை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதேசமயம், சிலருக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு, தேர்வின்போது சைக்கிள் ஓட்டிச் செல்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், வீட்டில் யாரையேனும் கொண்டு விட்டுவிட்டு வருமாறு கூறலாம்.
தேர்வுக்கு பைக்கில் செல்வோராக இருக்கும்பட்சத்தில், பெட்ரோல் மற்றும் இதர அம்சங்களை, முந்தைய நாளே சரிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். பெட்ரோலை நாளைக்கு, போகும் வழியில் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்க வேண்டாம். ஏனெனில், ஒருவேளை, அந்தநேரம் பார்த்து, பங்கில் கூட்டம் இருக்கலாம் மற்றும் வேறு ஏதேனும் எதிர்பாராத அசவுகரியம் நேரலாம். எனவே, கடைசிநேர ஆயத்தம் என்ற வார்த்தையையே மறந்துவிடுதல் நல்லது.
உடை
உங்களின் துவைத்த உடையை, முதல்நாளே அயர்ன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காலையில், விரைவாக எழுந்து அயர்ன் செய்து கொள்ளலாம் என்ற நினைப்பெல்லாம் வேண்டாம். அப்படி செய்யும்போது, அவசரத்தில், உங்களின் கையில்கூட சூடு வைத்துக்கொள்ள நேரிடலாம் மற்றும் தேவையற்ற பதற்றமும் வரலாம்.

0 கருத்துரைகள்:
Post a Comment