மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மேற்கு மண்டலத்தில் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள குருப் �பி� மற்றும் �சி� பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. கோர்ட் மாஸ்டர்:
3 இடங்கள். (பொது - 2, எஸ்சி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் கோர்ட்கள்/ டிரிபியூனல்களில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.
2. நூலகர் மற்றும் தகவல் உதவியாளர்:
1 இடம் (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 28க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் நூலக அறிவியலில் பட்டம்.
3. பேச்சு திருத்த பயிற்சியாளர்:
1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பிளஸ் 2வுடன் பேச்சு திருத்தப் பயிற்சியில் டிப்ளமோ மற்றும் அத்துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் அல்லது ஒலியியல் மற்றும் பேச்சுப்பயிற்சி பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.
4. தொழில்நுட்ப கண்காணிப்பாளர் (நெசவு):
4 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு அல்லது கைத்தறி தொழில்நுட்பம் அல்லது கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்தில் 3 ஆண்டு டிப்ளமோ.
5. டெக்ஸ்டைல் டிசைனர்:
2 இடங்கள் (பொது). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: டெக்ஸ்டைல் டிசைன் அல்லது பைன் ஆர்ட்சுடன் டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் அல்லது டெக்ஸ்டைல் டிசைனுடன் பைன் ஆர்ட்ஸ் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
6. தொழில்நுட்ப கண்காணிப்பாளர்:
(செயல் இயக்கம்) 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: டெக்ஸ்டைல் புராசசிங் அல்லது டெக்ஸ்டைல் வேதியியல் ஆகிய பாடங்களில் பி.இ.,/ பி.டெக். மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.
7. வனவிலங்கு ஆய்வாளர்:
1 இடம் (பொது) சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: விலங்கியல் பாடத்துடன் ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் வனவிலங்கு நிர்வாகத்தில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு.
8. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் :
2 இடங்கள். (பொது - 1, ஒபிசி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: வேளாண்மை பாடத்தில் எம்.எஸ்சி அல்லது தாவரவியல்/வேதியியல்/ விலங்கியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்புடன், பால் பண்ணையியல் பாடத்தில் எம்.எஸ்சி. அல்லது வேளாண்மை பாடத்தில் பிஎஸ்சி மற்றும் கால்நடை தீவன தயாரிப்பில் முன் அனுபவம்.
9. கள ஆய்வாளர்:
1 இடம் (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: கால்நடை அறிவியல்/ பண்ணையியல்/ வேளாண்மை ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.
10. விடிஎஸ் கன்சோல் ஆபரேட்டர்:
9 இடங்கள். (பொது - 6, ஒபிசி - 2, எஸ்சி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் அல்லது டெலிகம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் டிப்ளமோ மற்றும் ரேடார் அல்லது கம்யூனிகேசன் கருவிகளை இயக்குவதில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
11. சயின்டிபிக் அசிஸ்டென்ட்:
1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: வேதியியல் பாடத்தில் பி.எஸ்சி. அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங்/ கெமிக்கல் டெக்னாலஜி பாடத்தில் டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.
12. ஜூனியர் கெமிஸ்ட்:
7 இடங்கள். (பொது - 3, ஒபிசி - 2, எஸ்சி - 2). சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: வேதியியல் அல்லது பண்ணை வேதியியல் அல்லது உணவு தொழில்நுட்பத்தில் ஆயில் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் அல்லது வேதியியல் பாடத்துடன் ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.
13. இளநிலை நூலகர்:
1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் நூலக அறிவியலில் டிப்ளமோ/ சான்றிதழ் படிப்பு மற்றும் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
14. தோற்பாவைக் கலைஞர்:
1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: மெட்ரிகுலேசன், கண்காட்சி மற்றும் ஆய்வுக்காக விலங்குகளின் தோல்களை தயாரிப்பதில் முன்அனுபவம்.
15. விடுதி வார்டன்:
1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நாக்பூரில் தேசிய தீயணைப்பு பயிற்சி கல்லூரியில் சப்-ஆபீசர் படிப்பில் தேர்ச்சி.
16. களப் பணியாளர்:
2 இடங்கள். (பொது - 1, எஸ்டி - 1). சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தகுதி.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.50. இதை சென்ட்ரல் ரெக்ருட்மென்ட் ஃபீ ஸ்டாம்ப் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி., எஸ்டியினர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி
விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு
www.sscwr.net
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Regional Director, Staff Selection Commission (WR),
1st Floor, PRATISHITHA BHAVAN, 101,
MK Road, MUMBAI 400020.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.4.2015.
இதுபோல் வடகிழக்கு மாநிலங்களில் அரசு துறைகளில் உள்ள 15 காலி பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்ஷன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. தொழில்நுட்ப கண்காணிப்பாளர் (நெசவு):
7 இடங்கள். (பொது - 5, ஒபிசி - 2). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 30க்குள். தகுதி: டெக்ஸ்டைல் டெக்னாலஜி பாடத்தில் பி.இ. அல்லது கைத்தறி தொழில்நுட்பம் அல்லது கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்ப பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.
2. தொழில்நுட்ப கண்காணிப்பாளர் (செயல்முறை) :
5 இடங்கள். (பொது - 4, எஸ்சி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 30க்குள். தகுதி: டெக்ஸ்டைல் புராசசிங் அல்லது டெக்ஸ்டைல் வேதியியல் ஆகிய பாடங்களில் பி.எஸ்சி., அல்லது பி.இ.,/ பி.டெக்., மற்றும் பிளீச்சர்/ பினிஷர்/ டையிங் மாஸ்டர்/ பிரின்டிங் மாஸ்டர்/ டெக்ஸ்டைல் புராசசிங் அசிஸ்டென்ட்/ லேபரட்டரி டெக்னீசியன்/ டெமான்ஸ்டிரேட்டர் (புராசசிங்)/ சூபர்வைசர் ஆகிய பணிகளில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது கைத்தறி தொழில்நுட்பம் அல்லது கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் டிப்ளமோவுடன் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.
3. டெக்ஸ்டைல் இன்ஜினியர்:
3 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 30க்குள். தகுதி: டெக்ஸ்டைல் டிசைன் அல்லது பைன் ஆர்ட்ஸ் பாடத்தில் டெக்ஸ்டைல் டிசைன் ஒரு பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு மற்றும் டெக்ஸ்டைல் டிசைனராக 2 ஆண்டுகள் முன் அனுபவம்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.50. இதை சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப் மூலம் செலுத்தவும். எஸ்சி., எஸ்டியினர் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு
www.sscner.org.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Regional Director, Staff Selection Commission,
(NER) Housefed Complex, West End Building,
Beltola Basistha Road, DISPUR, GUWAHATI. Pin: 781006.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
20.4.2015.