Share

Sunday, April 12, 2015

அறிவு எவ்வளவு இருக்கிறது என்பதைவிட அதை சரியாக பயன்படுத்துவதே முக்கியம்!

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உங்களது அறிவாற்றல் எந்தளவுக்கு இருக்கிறது என்பது முக்கியமல்ல. அதை எப்படி முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

அறிவாற்றலைப் பற்றிய உங்கள் எண்ணம்தான் வாழ்க்கைப் பாதையை அமைக்கிறது. அறிவு நிறைய இருந்தும், அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் தங்கள் வாழ்க்கையைத் துருப்பிடிக்கச் செய்தவர்கள் அதிகம்.

அதே நேரத்தில் குறைந்தளவு அறிவு இருந்தும், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களும் உள்ளனர். அறிவு மனம் போன்றது. பலர் நிறைய பணம் இருந்தும் அதை நல்ல வழிகளில் பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். பிறருக்கும் உதவ மாட்டார்கள்.

இன்னும் சிலர் குறைவாகப் பணமிருந்தும் அதைத் தங்களுக்கும், பிறருக்கும் பயனளிக்கும் வகையில் செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

எனவே அறிவைத் தகவல் சேகரிக்க மட்டும் பயன்படுத்தாதீர்கள். அறிவைப் பயன்படுத்தி பிரச்னைகளைத் தீர்க்க பழகுங்கள்.

0 கருத்துரைகள்: