Share

Wednesday, December 31, 2014

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு பணி

பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 37 குரூப் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 37
பணி:  லேபரட்ரி அட்டெண்டன்ட்
காலியிடங்கள்: 22
தகுதி: அறிவியல் துறையில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஆபீஸ் அட்டெண்டன்ட்
கலியிடங்கள்: 15
தகுதி: எட்டமாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணி அனுபவம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aiimspatna.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பட்டதாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறையில் பணி

நேஷனல் ஹைவே அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் தேசிய நெடுஞ்சாலை நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை மேனேஜர் (நிதி)
காலியிடங்கள்: 06
பணி: மேலாளர் (நிதி)
காலியிடங்கள்: 21
தகுதி: மேற்கண்ட இரு பணிகளுக்கும் வணிகவியல் துறை அல்லது பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில் முதுகலைப் படிப்போ அல்லது சி.ஏ அல்லது ஐ.சி.டபுள்யு.ஏ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கன கடைசித் தேதி: 13.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை. தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ரெப்கோ வங்கியில் கிளார்க் பணி

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியின் தமிழகம் உள்ளிட்ட சில மாநில கிளைகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிளார்க்
வயதுவரம்பு: 01.12.2014 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் சம்மந்தப்பட்ட மாநில மொழிகளில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். இந்தியில் ஓரளவு பேச தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.
சம்பளம்: நேரடியாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மதம் ரூ.16,000 மற்றும் இதர சலுகைகள். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Gnral Manager (HR),
Repco Home Finance Limited, 3rd Floor, Alexander Square 2/34&34, Sardar Patel Road, Guindy, Chennai - 600032.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcobank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை கட்டாயம் பதிவுசெய்ய அறிவுறுத்தல்

சென்னை: பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும் என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடிதம்
அனைவருக்கும் கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, சமீபத்தில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில், மாணவர்கள் குறித்த தகவல்கள், ஆதார் எண் பதிவு செய்தல் குறித்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இதுகுறித்த உத்தரவுகள், சம்பந்தப்பட்ட இயக்குனர் அலுவலகங்களில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளன.
* கல்வி தகவல் மேலாண்மை முறை இணையதளத்தில், 2012 - 13ம் கல்வியாண்டில் இருந்து, பள்ளிகளின் விவரங்கள் அடிப்படையில், தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதை சரிபார்த்து, நடப்பு கல்வியாண்டிற்கு, புதிய பள்ளிகள், விடுபட்ட பள்ளிகளின் விவரங்களை பதிய வேண்டும்.
* 2014 - 15ல், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளை, ஜன., 31க்குள் முடிக்க வேண்டும். அதன்பின், தலைமை ஆசிரியர்கள், மாணவர் வருகை பதிவுடன், விவரங்களை சரிபார்க்க வேண்டும். ஆய்வு அலுவலரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.
* ஒன்று முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை, ஆதார் எண்களை பெற்று, கல்வி தகவல் மேலாண்மை முறை இணையதளத்தில் பதிவுசெய்ய, தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு பள்ளியிலும், ஆதார் எண் பெற்ற, பெறாத மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை, ஆய்வு அலுவலர்கள் பெற்று, தகவல் மேலாண்மை முறை மாநில மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
சிறப்பு முகாம்
* அதிகளவில் ஆதார் எண் பெறாத பகுதிகளை, மாவட்ட ஆய்வு அலுவலர்கள் கண்டறிந்து, அந்த பகுதி அல்லது மண்டலங்களில், மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி, ஆதார் அட்டை வழங்க, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.
* மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண், மின் அஞ்சல் முகவரி, எடை உயரம் ஆகிய விவரங்களை பெற்று, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதவி மேலாளர் பதவி

வாகனங்கள், தீவிபத்து, கொள்ளை போதல், கடல் சார்ந்த பயணங்கள் போன்றவற்றில் இடர்களிலிருந்து தப்பிப்பதற்காக உயிர் சாராத தேவைகளுக்காக செய்யப்படும் இன்சூரன்சை பொது இன்சூரன்ஸ் என்று நாம் கூறுகிறோம்.
நமது நாட்டிலுள்ள பொதுத் துறை சார்ந்த நான்கு நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல், ஓரியண்டல் போன்றவற்றை நிர்வகிக்கும் நிறுவனமாக பொது இன்சூரன்ஸ் நிறுவனம் (ஜி.ஐ.சி., - ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா)
உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த உதவி மேலாளர் பணியிடங்கள் 65ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகளும் காலியிடங்களும்: இன்சூரன்சில் 28, எச்.ஆர்., கெமிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங், ஏரோனாடிகல் இன்ஜினியரிங், மெடிக்கல், கம்பெனி செக்ரட்டரி, ஆக்சுவரி ஆகிய பிரிவுகளில் தலா 1 இடமும், ஜெனரலில் 11ம், பினான்ஸ்/நிதியில் 6ம், ஐ.டி., மற்றும் 'லீகல்'பிரிவுகளில் தலா 3ம், புள்ளியியல் பிரிவில் 4ம் காலியாக உள்ளது.
வயது: 31.12.2014 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இந்தப் பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் சிறப்புத்தகுதியும், பட்டப் படிப்பும் தேவைப்படும், முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தமிழ் நாட்டில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.01.2015
இணையதள முகவரி: http://www.gicofindia.in/

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி

<h1 class=tamizhnadu seythithal marrum kakitha" itemprop="contentURL"> (30 Dec) தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) சந்தையியல் துறையில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் (சந்தையியல்), உதவி பொது மேலாளர் (சந்தையியல்), மேலாளர் (சந்தையியல்) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Officer (Marketing) காலியிடங்கள்: - 03தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.16,000 - 400 - 20000 பணி: Assistant Manager (Marketing)காலியிடங்கள்: 03தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.19500 - 500 - 24050 பணி: Deputy Manager (Marketing)காலியிடங்கள்: 04தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.23500 - 600 - 29500 பணி: Manager (Marketing)காலியிடங்கள்: 04தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.28,000 - 800 - 36000விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2015பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Deputy General

சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியிருப்பது: நாகப்பட்டினம் மாவட்டம், ஊரக வளர்ச்சித் துறை பொறியியல் பிரிவில் காலியாக உள்ள 14 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய கல்வித் தகுதி மற்றும் இதர சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் 2015 ஜனவரி 10 க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிப்பிரிவு) எண்.119, நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும் இடம் மற்றும் தேதி குறித்து தனியே தெரிவிக்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிறுவனம் அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சிவில் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2014 ஜூலை 1-ல் 35 வயது முடியாதவராக இருக்க வேண்டும். தமிழக அரசின் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஐ.ஐ.எஸ்.இ.ஆர். வழங்கும் ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பு

அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய கல்வி நிறுவனம்(IISER), ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பில் சேர, மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இக்கல்வி நிறுவனம், மத்திய மனிதவள அமைச்சகத்தின்கீழ் வரக்கூடிய ஒரு தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனம்.
உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பு, 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்குகிறது.
இப்படிப்பில் சேர, சம்பந்தப்பட்ட பிரிவுகளில், இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருப்பதோடு, குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல் துறை ஆராய்ச்சியில் இணைய விரும்புவோருக்கு மட்டும், JEST - 2015 மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.
மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்புவோர், ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி - ஜனவரி 24, 2015.
விரிவான தகவல்களுக்கு www.iisertvm.in/iphd/

இந்திய அணு மின் கழகத்தில் நர்ஸ், எக்ஸ்ரே டெக்னீசியன் பணியிடங்கள்

மகாராஷ்டிராவிலுள்ள தாராப்பூர் இந்திய அணு சக்தி கழகத்தில் துணை மருத்துவ பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்:

1.
நர்ஸ் '' (ஆண்):

6 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 2, எஸ்சி - 1). இதில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 


சம்பளம்: 

ரூ.9,300 - 34,800. 

வயது: 

18 முதல் 30க்குள். 


தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சியுடன் நர்சிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., பட்டம். 3 வருட நர்சிங் அனுபவம்.

2.
நர்ஸ் '' (பெண்):

4 இடங்கள். (எஸ்சி - 1, ஒபிசி - 1, பொது - 2). இதில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 


சம்பளம்: 

ரூ.9,300 - 34,800. 

வயது: 

18 முதல் 30க்குள். 


தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சியுடன் நர்சிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது பிஎஸ்சி பட்டம். 3 வருட நர்சிங் அனுபவம்.

3.
எக்ஸ்ரே டெக்னீசியன்:

1 இடம் (மாற்றுத்திறனாளி). 


சம்பளம்: 

ரூ.5,200 - 20,200. 

வயது: 

18 முதல் 25க்குள். 


தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு வருட மெடிக்கல் ரேடியோகிராபி/ எக்ஸ்ரே டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது வரம்பு 1.7.2014 தேதிப்படி கணக்கிடப்படும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு. 

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Manager (HR Recruitment), 
Tarapur Maharashtra Site, 
Tarapur Atomic Power Station, 
14, PO:TAPP, Via Boisar (W.Rly), 
Tal - Dist:Dalghar, 
MAHARASHTRA. PIN: 401504.


விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 6.1.2015.

மத்திய அரசில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு - பெண்களுக்கு கட்டணம் கிடையாது

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணியின் விவரம்:

1.
சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:

32 இடங்கள் (பொது - 14, ஒபிசி - 13, எஸ்சி - 4, எஸ்டி - 1). 


சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. 

வயது: 

9.1.2015 அன்று 30க்குள். 


தகுதி: 

சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது ஐடிஐ அல்லது பாலிடெக்னிக்கல் டிராப்ட்ஸ்மென்ஷிப் பாடத்தில் இரண்டு ஆண்டு சான்றிதழ் படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

2.
உதவி கல்வெட்டு ஆய்வாளர்:

1 இடம் (பொது). 


சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. 

வயது: 

9.1.2015 அன்று 30க்குள். 


தகுதி: 

தமிழ்/ மலையாளம்/ தெலுங்கு/ கன்னடம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டத்துடன் பட்டப்படிப்பில் பழங்கால இந்திய வரலாறு படித்திருக்க வேண்டும் அல்லது பழங்கால வரலாறு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று பட்டப்படிப்பில் தமிழ்/ மலையாளம்/ தெலுங்கு/ கன்னடம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும்.

3.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்:

2 இடங்கள் (பொது). 


சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. 

வயது: 

9.1.2015 அன்று 18 முதல் 25க்குள். 


தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஒரு மணி நேரத்திற்கு 8 ஆயிரம் எழுத்துக்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

4.
டெக்னிக்கல் கிளார்க் (பொருளியல்):

3 இடங்கள் (ஒபிசி - 1, எஸ்சி - 1, எஸ்டி - 1). 


சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. 

வயது: 

9.1.2015 அன்று 18 முதல் 27க்குள். 


தகுதி: 

பிளஸ் 2. (வணிகவியல் எடுத்து படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.)

கட்டணம்:

ரூ.50. இதை சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி., எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

ஸ்கிரீனிங் தேர்வு, துறை வாரியான எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்குhttp://ssckkr.kar.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Regional Director (KKR),
Staff Selection Commission,
Ist Floor, 'E' Wing, Kendriya Sadan,
Koramangala,
BANGALORE 560 034.


விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 9.1.2015.

Tuesday, December 30, 2014

விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு: 2 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேசியத் தகுதித் தேர்வை 2 ஆயிரம் பேர் எழுதவில்லை.
பல்கலைக்கழக மானியக் குழு சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் 15 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்தது.
இத்தேர்வை எழுத 9,154 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இதில் 2 ஆயிரம் பேர் தேர்வெழுத வரவில்லை.
தேர்வு மையங்களை, பல்கலைக்கழகப் பதிவாளர் என். ராஜசேகர் ஆய்வு செய்தார்.
அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முந்தைய தேர்வு வரை பல்கலைக்கழக மானியக் குழு சார்பில், மத்திய அரசு தேர்வாணையம் மூலம் நடைபெற்று வந்த இந்தத் தேர்வு, தற்போது முதல்முறையாக மத்திய இடைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலையும், இன்போசிஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வளாக நேர்காணல்

சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், இன்போசிஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் தேர்வு பெருங்களத்தூர் ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரியில் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறுகிறது.
சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 168 பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் கணினி அறிவியல் மற்றும் மின்னணுவியல்,தகவல் தொழில்நுட்பம், மின்னியல் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட 6 துறைகளைச் சேர்ந்த தகுதியான இறுதியாண்டு மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு 2 நாட்கள் நடைபெறுகின்றன.
அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் ராஜாராம் வழிகாட்டுதலுடன் அண்ணா பல்கலைக்கழகம் தொழில்நிறுவனங்கள் கூட்டு நடவடிக்கை மையம் இயக்குநர் தியாகராஜன் மேற்பார்வையில் நடைபெறுகிறது.
2 நாட்கள் நடைபெறும் நேர்முக வேலைவாய்ப்புத் தேர்வில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஜி.கே.எம்.கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் சுஜாதா பாலசுப்ரமணியன் பேசும்போது,பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மாணவர்களை ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வழிகாட்டும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதம் எதுவும் நிகழாவண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு, தீயணைப்புத்துறையினர் மற்றும் அவசர சிகிச்சைக்கு உதவும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகளின்றி வேலைவாய்ப்பில் பின்தங்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

 போட்டிகள் நிறைந்த இன்றைய தொழில்நுட்ப உலகில், கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகள் முற்றிலும் அல்லாமல், அரசு பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பில் பின்தங்குவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த கனெக்டிவ்-கிளாஸ் ரூம் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வினியோகம், பள்ளிகளுக்கு லேப்-டாப் மற்றும் கம்ப்யூட்டர் வினியோகம் என முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அடிப்படை தொழில்நுட்ப அறிவை புகுத்தாமல், மாணவர்கள் கைகளில் லேப்-டாப் வழங்குவது எதிர்மறை விளைவுகளையே தற்போது உருவாக்கி வருகிறது.
அரசு பள்ளிகளை பொறுத்தவரையில், மேல்நிலை வகுப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு அடிப்படை தொழில்நுட்ப அறிவு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. தனியார் பள்ளிகளில் துவக்க வகுப்பு முதலே அடிப்படை கம்ப்யூட்டர் இயக்க செயல்பாடுகள், பயன்பாடு என படிப்படியாக கற்பிக்கப்படுகிறது.
ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்ற பின்பே அடிப்படை இயக்கங்களை கூட கற்க முடிகின்றது. இதனால், போட்டித்தேர்வு, வேலைவாய்ப்பில் பின்தங்கும் நிலை ஏற்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு குறிப்பிட்ட அளவில், கம்ப்யூட்டர்கள், லேப்-டாப்களை அரசு வினியோகித்து வருகிறது.
அதில், பாடம் கற்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.ஆனால், எந்த ஒரு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த தொழில்நுட்ப அறிவு கட்டாயம் என்பதை அரசு உணர்வது அவசியம். மேலும், தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், குறைந்தபட்சம் பள்ளிக்கு ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமித்து, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டும். அதன் பின்பே, கனெக்டிவ் - கிளாஸ் ரூம் போன்ற திட்டங்களில் வெற்றிபெற இயலும்.
கோவை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் கொள்முதல் செய்ய, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி ஆசிரியர்கள் இல்லாததால், வீணாகி வருகிறது.
கல்வியாளர் பாரதி கூறுகையில், "அரசு பள்ளி மாணவர்கள், திறமைகள் இருந்தும் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழித்திறன் இல்லாமல் நல்ல வேலை வாய்ப்பை இழக்கின்றனர். தற்போது முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டுள்ளது. அதேபோல், தொழில்நுட்ப அறிவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். தொடக்க பள்ளி முதலே, மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பாடப்பிரிவை உருவாக்க வேண்டும்" என்றார்.