வாகனங்கள், தீவிபத்து, கொள்ளை போதல், கடல் சார்ந்த பயணங்கள் போன்றவற்றில் இடர்களிலிருந்து தப்பிப்பதற்காக உயிர் சாராத தேவைகளுக்காக செய்யப்படும் இன்சூரன்சை பொது இன்சூரன்ஸ் என்று நாம் கூறுகிறோம்.
நமது நாட்டிலுள்ள பொதுத் துறை சார்ந்த நான்கு நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல், ஓரியண்டல் போன்றவற்றை நிர்வகிக்கும் நிறுவனமாக பொது இன்சூரன்ஸ் நிறுவனம் (ஜி.ஐ.சி., - ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா)
உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த உதவி மேலாளர் பணியிடங்கள் 65ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகளும் காலியிடங்களும்: இன்சூரன்சில் 28, எச்.ஆர்., கெமிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங், ஏரோனாடிகல் இன்ஜினியரிங், மெடிக்கல், கம்பெனி செக்ரட்டரி, ஆக்சுவரி ஆகிய பிரிவுகளில் தலா 1 இடமும், ஜெனரலில் 11ம், பினான்ஸ்/நிதியில் 6ம், ஐ.டி., மற்றும் 'லீகல்'பிரிவுகளில் தலா 3ம், புள்ளியியல் பிரிவில் 4ம் காலியாக உள்ளது.
வயது: 31.12.2014 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இந்தப் பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் சிறப்புத்தகுதியும், பட்டப் படிப்பும் தேவைப்படும், முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தமிழ் நாட்டில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.01.2015
இணையதள முகவரி: http://www.gicofindia.in/

0 கருத்துரைகள்:
Post a Comment