Share

Labels

வேலைவாய்ப்பு (246) கல்வி (101) குறியீடுகள் (4) MEERA (1) சிந்துவெளி (1)
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

Tuesday, April 26, 2016

வேதியியல் பட்டதாரிகளுக்கு எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தில் பணி

Image result for cecriகாரைக்குடியில் செயல்பட்டு வரும் Electro Chemical Research மையத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Assistant III
பணி: Project Assistant III
பணி: Junior Research Fellow
மொத்த காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் Chemistry, Organic Chemistry, Applied Chemistry, Nanitechnology, Materials Science பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்று NET, GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Central Electrochemical Research Institute, Karaikudi.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cecri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, April 13, 2016

CDAC நிறுவனத்தில் திட்ட பொறியாளர் பணி

அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங் வளர்ச்சி மையத்தில் (Centre for Development of Advanced Computing (CDAC) ) காலியாக உள்ள திட்ட பொறியாளர், திட்ட உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Project Engineer

காலியிடங்கள்: 44

பணி:  Project Assistant

காலியிடங்கள்: 02

பணி: Project Manager

காலியிடங்கள்: 01

பணி: Consultant

காலியிடங்கள்: 08

தகுதி: பொறியியல் துறையில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் போன்ற பிரிவுகளில் பி.இ, பி,டெக் அல்லது எம்இ, எம்.டெக், சுற்றுச்சூழல் அறிவியல், வளிமண்டலவியல், கடலியல், கெமிக்கல், எம்சிஎஸ், எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, சிவில். எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ,  மனிதநேயம், கணக்கீட்டு மொழியியல், இலக்கியம், வரலாறு, சமஸ்கிருதம், மராத்தி போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்களில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திரையிடல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in official என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cdac.in/index.aspx?id=job_pune_feb_2016_pe என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, April 11, 2016

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 264 டிரேட்ஸ் அப்ரண்டீஸ் பணி

Image result for hindustan aeronautics limitedகர்நாடகா மாநிலம் பெங்களூரூவைத் தலைமையிடமாக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 264 டிரேட்ஸ் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Electronic mechanic - 87

2. Fitter -  62

3. Copa/passa - 49

4. Electrician -  14

5. Machinist- 7

6. Turner  - 6

7. Painter - 6

8.  R & AC - 6

9.  Draughtsmen - 4

10.  Welder - 3

11.  Mechanic (motor  vehicle) - 2

12.  Plumber - 8

13. Carpenter - 6

14.  Diesel  mechanic - 3

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: Plumber, carpenter, Diesel mechanic பிரிவுகளுக்கு இரண்டு ஆண்டு பயிற்சியும், மற்ற பிரிவுகளுக்கு 1 ஆண்டு பயிற்சியும் அளிக்கப்படும்.

உதவித்தொகை: இரண்டு ஆண்டு பயிற்சி பிரிவினருக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.6,772 உதவித்தொகை வழங்கப்படும். ஒரு ஆண்டு பயிற்சி பிரிவினருக்கு மாதம் ரூ.7619 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in/pages/Apprenticeship/home.as px என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, Manager, Department of Training and  Development, HAL Avionics Division, Balanagar,  Hyderabad-500042 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

எம்பிஏ பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ (ESI) மருத்துவமனையில் ஆலோசக மேலாளர் பணி

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழக மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள CONSULTANT  HOSPITAL  MANAGER  &  CONSULTANT  MANAGER பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 101

பணி: CONSULTANT  MANAGER

காலியிடங்கள்: 78

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 45,000

பணி: CONSULTANT  HOSPITAL  MANAGER

காலியிடங்கள்: 23

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000 - 25,000

தகுதி: எம்பி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.225.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.04.2016 அன்று காலை 9 மணிக்கு

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://esic.nic.in/backend/writereaddata/recruitment/3c8bc7d523e22dc7ad6bfb694256a671.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, February 8, 2016

என்டிபிசி மின்சார நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Image result for ntpc41 மின் தயாரிப்பு நிலையங்கள் மூலம் 45 ஆயிரத்து 548 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறகொண்ட என்டிபிசி என அழைக்கப்படும் மிகப்பெரிய மின்சார நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: எக்சிகியூட்டிவ் டிரெயினி (நிதி) - 46

பணி: எச்.ஆர் - 25

தகுதி: நிதி மற்றும் நிர்வாகவியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: அசிஸ்டன்ட் கெமிஸ்ட் டிரெயினி - 25

வயதுவரம்பு: 29.02.2016 தேதியின்படி 29க்குள் இருக்க வேண்டும். அசிஸ்டன்ட் கெமிஸ்ட் டிரெயினி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல், தனிநபர் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ntpccareers.net   என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, February 3, 2016

நீங்கள் லேப்-டெக்னீஷியனா...? எம்ஆர்பி-க்கு உடனே அப்ளிகேஷன் போடுங்க...!!

சென்னை: லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ சேவை தேர்வாணையம் (எம்ஆர்பி) அறிவிப்பு செய்துள்ளது.
மொத்தம் 710 லேப்- டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக உள்ளதாம். தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கண்டிப்பாக பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பு படித்ததற்கான சான்ரிதவையும் வைத்திருக்கவேண்டும். மேலும் நல்ல உடல், கண் பார்வை, வெளியே சென்று வேலை செய்யத் தயாராக இருக்கவேண்டும்.
வயது 18 முதல் 57-க்குள் இருக்கலாம்.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் எம்ஆர்பி இணையதளத்தில் கிடைக்கின்றன. அணுக வேண்டிய இணையதள முகவரி: http://www.mrb.tn.gov.in
கல்வித் தகுதி, தொழில்நுட்ப கல்வித் தகுதி அடிப்படையில் ஆட்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
விண்ணப்பக் கட்டணமாக ஓபிசி, பொதுப் பிரிவினருக்கு ரூ.500-ம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250-ம் வசூலிக்கப்படும்.

பணியாற்ற அழைக்கிறது இந்திய கடலோரக் காவல்படை!!

சென்னை: இந்தியக் கடலோரக் காவல்படை தனது யாந்த்ரிக் பகுதியில் பணியாற்ற தகுதியான நபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யலாம்.
யாந்த்ரிக் பகுதியில் 02/2016 பேட்ச்சுக்காக ஆட்களை கடலோரக் காவல்படை தேர்வு செய்யவுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு 3 ஆண்டு டிப்ளமோ(எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங்) அல்லது அதற்கு இணையான படிப்பைப் படித்து முடித்திருக்கவேண்டும்.
வயது 18 முதல் 22-க்குள் இருக்கலாம்.
தகுதியும், விருப்பமுள்ளவர்கள் http://joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியக் கடலோரப் பகுதியைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும், கடலோரக் காவல் படை 1978-ல் உருவாக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கடலோரக் காவல் படை செயல்படுகிறது.

Sunday, January 31, 2016

மின்வாரியத்தில் உதவி பொறியாளர் காலி பணியிடம்

Image result for தமிழக மின்வாரியத்தில்சென்னை : தமிழக மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாத இறுதியில், காலியாக உள்ள 375 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. அதில் 2015 டிசம்பர் 28ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கான கடைசி தேதி வரும் 11ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மாதம் 31ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயக்குனர்கள் தலைமையில் நடக்கும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தும் தேர்வுகளுக்கு 85 சதவீதமும், நேர்முகத் தேர்வுக்கு 15 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது. 

இந்த 15 சதவீத மதிப்பெண் அதிகாரிகள் வசம் உள்ளதால், ஊழல் நடக்க அதிக வாய்ப்புள்ளது எனவும், விண்ணப்பதாரர்களிடம் பணம் வாங்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்றும் அனைத்து தரப்பினரும் புகார் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது முதலே இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், சுமார் ரூ.3 முதல் 6 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாகவும் விண்ணப்பதாரர்கள் பகிரங்கமாகவே புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்பத்துக்கும் தற்போது மூடுவிழா கண்டுள்ளதாக பரபரப்பு புகார் எழந்துள்ளது. இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் கூறியதாவது: மின்வாரியத்தில் காலியாக உள்ள 375 உதவி பொறியாளர் பணியிடத்துக்கு 2015 டிசம்பர் 28ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஜனவரி 11ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் டிசம்பர் 31ம் தேதி முதலே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியவில்லை. www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் recruitment என்ற பக்கம் வரை மட்டுமே செல்ல முடிகிறது. அதற்கு மேல் அந்த இணையதளத்தை பார்வையிட முடியவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், “வரும் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மீண்டும் ஒருமுறை சரியாக பாருங்கள்” என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். முன் கூட்டியே பணம் வாங்கிக் கொண்டு, அவர்களை மட்டும் திட்டமிட்டு ஆன் லைன் மூலம் முதல் நாளே விண்ணப்பம் செய்து விட்டு, அடுத்த நாள் முதல் யாரும் விண்ணப்பம் செய்யவிடாமல் தடுக்கும் செயலாக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம் என அதிருப்தி தெரிவித்துள்ளனர். காலி பணியிடங்களுக்கான ஆன் லைன் விண்ணப்பம் அறிவித்து விட்டு ஓரே நாளில் அதற்கு மூடுவிழா கண்டுள்ளது ஏராளமான பட்டதாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.