Share

Friday, February 13, 2015

பொதுத்தேர்வு எழுத பயமா?; டயல் செய்யுங்க ‘104’




                பொதுத்தேர்வை எதிர்கொள்வதில் பயம் இருந்தால், ’104’ தொலைபேசி சேவையை அழைத்து, ஆலோசனை பெறலாம்’ என, கல்வித் துறை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு சமயத்தில் பின்பற்ற வேண்டிய உணவுமுறை, தேர்வுக்காக உடல்நலத்தை தயார்படுத்துவது குறித்து, ’104’ஐ தொடர்பு கொண்டால், உரிய ஆலோசனைகள் வழங்கப்படும்.

முக்கியமாக, தேர்வை எதிர்கொள்ள பயப்படும் மாணவர்கள், ஞாபக மறதி போன்றவற்றை போக்கி, தைரியமாக தேர்வை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

தேர்வு நேரத்தில், மாணவர்களிடம், பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், ஆலோசனை வழங்கப்படும். இந்த சேவை, 24 மணி நேரமும் வழங்கப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர் தொடர்பு கொண்டால், மனநல மருத்துவர் மற்றும் இரு ஆலோசகர்கள், ஆலோசனைகளை வழங்குவர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்: