ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், 2015-16ம் ஆண்டிற்கான CMAT இரண்டாம் கட்ட தேர்வு விபரங்களை வெளியிட்டுள்ளது. மேலாண்மை படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
இத்தேர்வை எழுத விரும்புவோருக்கு 2 வாய்ப்புகள் உண்டு. 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எழுதியிருக்கலாம் மற்றும் அதை எழுதியவர்கள் மீண்டும் 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் எழுதலாம். இந்த இரண்டில், எது நல்ல மதிப்பெண்ணோ, அதுவே மாணவர் சேர்க்கையின்போது கணக்கில் கொள்ளப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ளது இரண்டாவது தேர்வுக்கான அறிவிப்பு ஆகும்.
ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்தோர் அல்லது 2015ம் ஆண்டு சேர்க்கைக்கு முன்னர், பட்டப் படிப்பு இறுதி தேர்வை எழுதி, அதன் முடிவுகளைப் பெறும் வாய்ப்புள்ளோர், CMAT தேர்வையெழுத விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் தேர்வை, நாட்டினுடைய 3 நகரங்களில், 3 வெவ்வேறு தேதிகளில் தேர்வெழுதும் ஆப்ஷன் வழங்கப்படும். அந்த மூன்றில், ஒருவர் தனக்கு வசதியான ஒன்றை தேர்வுசெய்து கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணமாக ரூ.1400(வங்கிக் கட்டணம் தனி) வசூலிக்கப்படுகிறது. SC/ST/PD பிரிவினருக்கு ரூ.700(வங்கி கட்டணம் தனி) மட்டுமே.
தமிழகத்தில், சென்னையும், கோவையும் தேர்வு மையங்களாக செயல்படும்.
ஹால் டிக்கெட் print out செய்யும் தேதி - ஜனவரி 30, 2015.
ஆன்லைன் தேர்வுகளுக்கான தேதி - 2015 பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 22 வரை.
தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் - மார்ச் 25, 2015.
மற்ற அனைத்து விபரங்களுக்கும் www.aicte-cmat.in
0 கருத்துரைகள்:
Post a Comment