Share

Sunday, January 18, 2015

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

வாழ்க்கையில் வெற்றி பெற எதுவும் தேவையில்லை; தன்னம்பிக்கை ஒன்று போதும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி. தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

* ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வார்கள். அணியும் ஆடைகளில் கவனமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு.

* நமது நடை சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டுபிடித்து விடுவார்கள். வேகமாக நடப்பது என்பது நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

* எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்கள் தொங்கியபடியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் குணங்கள்.

* எந்த விஷயத்தையும் பாசிட்டிவ் ஆக அணுக வேண்டும். தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சாளர்களின் பேச்சை கேட்கலாம் அல்லது புத்தகம் படிக்கலாம். கண்ணாடி முன் நின்று "என்னால் முடியும்" என பேசுவதும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

* வாழ்க்கையில் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை பட்டியலிடுங்கள். இதன்மூலம் நமக்கு வந்த வாய்ப்புகள், தன்னம்பிக்கை அளிக்கும் சம்பவங்களை தெரிந்து கொள்ள லாம்.

* என்னால் முடியாது என்ற எதிர்மறை எண்ணம் அறவே இருக்கக்கூடாது. இதிலிருந்து விடுபட மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.

* பள்ளி, கல்லூரி, கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புகிறீர்களா?. அப்படியெனில் தன்னம்பிக்கை குறைவு என அர்த்தம். இனிமேல் எங்கு சென்றாலும், முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். இதனால் பயம் போய்விடும். தன்னம்பிக்கை கூடும்.

* நண்பர்களுடன் இருக்கும்போது, மனதில் பட்டதை தைரியமாக பேசுங்கள். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என நினைக்க வேண்டாம்.

* உடற்பயிற்சி செய்து உடலை சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

0 கருத்துரைகள்: