இந்திய அரசின் சமூகநீதி மற்றும் உரிமை வழங்கல் அமைச்சகம் மூலமாக, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ப்ரீ-மெட்ரிக் மற்றும் போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசித்தேதி, பிப்ரவரி 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்பு, பிப்ரவரி 4ம் தேதிதான் கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 46 ஆயிரம் ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகைகளும், 16 ஆயிரத்து 650 போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இந்த உதவித்தொகை திட்டம், 2014, ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகையைப் பெற விரும்புபவருடைய பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும், போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகையைப் பெற விரும்புவோரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இதுகுறித்த அனைத்து விரிவான தகவல்களுக்கும் www.socialjustice.nic.in.
0 கருத்துரைகள்:
Post a Comment