Share

Tuesday, March 31, 2015

ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர்கள்

ஆயில் அண்டு நேச்சுரல் காஸ் கமிஷன் எனப்படும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் இயற்கை எரிசக்தி தொடர்புடைய ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் இத்துறையில் மிகச் சிறந்த சாதனைகளைத் தொடர்ந்து சாதித்து வந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 745 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் கிராஜூவேட் டிரெய்னி பணியிடங்களில் அசிஸ்டெண்ட் எக்சிகியூடிவ் இன்ஜினியர் பிரிவில் சிமென்டிங், சிவில், டிரில்லிங், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், புரொடக்சன், ரிசர்வாயர் ஆகிய பிரிவுகளிலும், கெமிஸ்ட், ஜியாலஜிஸ்ட், ஜியோபிசிஸ்ட், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் ஆபிசர், புரோகிராமிங் ஆபிசர்ஸ், டிரான்ஸ்போர்ட் ஆபிசர் ஆகிய பிரிவுகளிலும் காலியிடங்கள் உள்ளன.
வயது: 01.01.2015 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பை மெக்கானிகல், பெட்ரோலியம், சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம், இன்ஸ்ட்ரூமென்டேஷன், பெட்ரோலியம் டெக்னாலஜி, கெமிக்கல், ஜியாலஜிக்கல் டெக்னாலஜி, பெட்ரோலியம் ஜியாலஜி ஆகிய ஏதாவது ஒரு பிரிவிலும், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., கணிதம், அப்ளைடு மேதமேடிக்ஸ் ஆகிய ஏதாவது ஒன்றில் பட்டப் படிப்பும், எலக்ட்ரானிக் மீடியாவில் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களும் பிரிவுக்கு ஏற்றபடி விண்ணப்பிக்க முடியும்.
தேர்ச்சி முறை: கேட் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.04.2015
இணையதள முகவரி: http://103.241.147.158/ongc/College/Index_New.aspx.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிசெய்துகொள்ள இணைய முகவரி அறிவிப்பு

காஞ்சிபுரம்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள், தங்களது பதிவுகளை http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் சரிபார்த்துகொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அந்த செய்தி குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மேற்கூறிய இணைய முக வரியை பயன்படுத்தி தங்களது பதிவு அடையாள அட்டையை பதி விறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவு விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் மற்றும் விடுபாடுகள் இருப்பின் உடனடியாக கல்வி, சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அடையாள அட்டை, ஆதார் எண், கைப்பேசி எண்/ இணையதள மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன், இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்துக்குள்,வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

முதுநிலை மருத்துவப் படிப்புகள்: 13 இடங்கள் காலி

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் 13 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தில் 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்.எஸ்., எம்.டி, முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு,  முதுநிலை பல் மருத்துவப் படிப்பான எம்.டி.எஸ். என மொத்தம் 585 இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மார்ச் 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 572 அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரம்பின. கலந்தாய்வின் முடிவில் 13 இடங்கள் காலியாக உள்ளன.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஏற்படும் காலியிடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு கிடைக்கும் இடங்களுக்கும், தமிழக அரசின் ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 13 இடங்களுக்கும் சேர்த்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏப்ரல் மாத இறுதியில் நடத்தப்படும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணுவ ஆராய்ச்சிக் கழகத்தில் சயின்டிஸ்ட் பணி

இந்திய பாதுகாப்புத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 117
பணி: விஞ்ஞானிகள்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electronics and Communication Engineering - 06
2. Computer Science and Engineering - 04
3. Mechanical Engineering - 08
4. Aeronautical Engineering - 03
5. Electrical Engineering - 02
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
Scientist`B' பணிக்கு மாதம் ரூ. 15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5400
Scientist `C' பணிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6600
Scientist `D' பணிக்கு மாதம் ரூ.15,600  -39,100 + தர ஊதியம் ரூ.7600
Scientist `E' பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8700
Scientist `F' பணிக்கு மாதம் ரூ.37,400  -67,000 + தர ஊதியம் ரூ. 8900
Scientist `G' பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10000
Scientist `H' பணிக்கு மாதம் ரூ.67000 - 79,000
Distinguished Scientist பணிக்கு மாதம் ரூ.75,500 - 80,000 (HAG+Scale)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 31க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:  http://rac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rac.gov.in/cgibin/2015/advt_117/public/pdf/advt_117.pdf?edb01099483bacbd327895ba1ae43202=1 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நூலக அறிவியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு கல்லூரியில் பணி

Image result for நூலக அறிவியல்ஜார்கண்ட மாநில தான்புரத்தில் செயல்பட்டு வரும் Indian School of Mines என்ற பொறியியல் கல்வி மையத்தில் (சுரங்கம் சார்ந்த) காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Librarian - 01
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நூலக அறிவியல், தகவல் அறிவியல், டாக்குமெண்ட்டேஷன் அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் NET/SLET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

பணி: Semi Professional Assistant (Library) - 03
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று நூலக அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு குழுவால் நடத்தப்படும் Professional Competency Test, Computer Proficiency Test மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ismdhanbad.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து டி.டி மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Registrar, Indian School of Mines, Dhanbad என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Registrar (Estt),
 Indian School of Mines,
 Dhanbad - 826004.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ismdhanbad.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Monday, March 30, 2015

பட்டதாரிகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 60 இடங்கள்

மத்திய அரசின் சுற்றுப்புறச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சரவையின் கீழ் இயங்கும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் சயின்டிஸ்ட், அசிஸ்டென்ட், லோயர் டிவிசன் கிளார்க், ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 60 இடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. சயின்டிஸ்ட்: 'ஈ':

4 இடங்கள். (பொது - 2, ஒபிசி - 1, எஸ்சி - 1).

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,700. சம்பந்தப்பட்ட துறையில் 4 ஆண்டுகள் முன்அனுபவம்.

வயது:

50க்குள்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ.,/ பி.டெக்., அல்லது எம்.இ., அல்லது எம்.டெக்., அல்லது இயற்கை/ வேளாண் அறிவியல்களில் முதுநிலை பட்டம். நெட் தேர்வு அல்லது பி.எச்டி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. சயின்டிஸ்ட்: 'டி':

2 இடங்கள். (பொது).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600. சம்பந்தப்பட்ட துறையில் 7 ஆண்டுகள் முன் அனுபவம்.

வயது:

45க்குள்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ.,/ பி.டெக்., அல்லது எம்.இ., அல்லது எம்.டெக்., அல்லது இயற்கை/ வேளாண் அறிவியல்களில் முதுநிலை பட்டம். நெட் தேர்வு அல்லது பி.எச்டி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

3. சயின்டிஸ்ட்:

8 இடங்கள். (ஒபிசி - 3, பொது - 5).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600. சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம்.

வயது:

40க்குள்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ.,/ பி.டெக்., அல்லது எம்.இ., அல்லது எம்.டெக்., அல்லது இயற்கை/ வேளாண் அறிவியல்களில் முதுநிலை பட்டம். நெட் தேர்வு அல்லது பி.எச்டி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

4. உதவி சட்ட அதிகாரி:

2 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

35க்குள்.

தகுதி:

பி.எல் பட்டத்துடன் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாவது வக்கீலாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

5. உதவியாளர்:

3 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

வயது:

30க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்து 3 ஆண்டுகளுக்கு குறையாத முன் அனுபவம் மற்றும் கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமலும் அல்லது இந்தியில் 30 வார்த்தைகளுக்கு குறையாமலும் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

6. ஜூனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்:

2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

வயது:

30க்குள்.

தகுதி:

அறிவியல் பாடத்தில் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு பணியில் அல்லது அதன் தொடர்புடைய பணியில் 4 ஆண்டுகள் முன் அனுபவம். அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் விரும்பத்தக்கது.

7. லோயர் டிவிசன் கிளார்க்:

12 இடங்கள் (பொது - 5, எஸ்சி - 2, எஸ்டி - 1, ஒபிசி - 2, முன்னாள் ராணுவத்தினர் - 2).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது:

18 முதல் 25க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் டைப்பிங்கில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும் அல்லது இந்தியில் 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

8. ஜூனியர் டெக்னீசியன்:

1 இடம் (ஒபிசி)

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400

வயது:

18 முதல் 25க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேசன்/ எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் ஐடிஐ.

9. டிரைவர்:

3 இடங்கள் (எஸ்சி - 1, ஒபிசி - 1, பொது - 1).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது:

25க்குள்.

தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். டிரைவிங்கில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் மற்றும் மெக்கானிசம் தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.

10. டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்:

3 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200.

வயது:

30க்குள்.

தகுதி:

கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் டிப்ளமோ.

11. சீனியர் லேபரட்டரி அசிஸ்டென்ட்:

5 இடங்கள் (ஒபிசி - 1, பொது - 4).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

வயது:

30க்குள்.

தகுதி:

அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம்.

12. ஜூனியர் லேபரட்டரி அசிஸ்டென்ட்:

3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

தகுதி:

அறிவியல் பாடத்தில் பிளஸ் 2.

வயது:

18 முதல் 25க்குள்.

13. சீனியர் டெக்னீசியன்:

4 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 1).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

தகுதி:

இன்ஸ்ட்ருமென்டேசன்/ எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ.

14. நிதி மற்றும் கணக்கு அதிகாரி:

1 இடம். (பிரதிநிதி பணி).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.

தகுதி:

இந்தியன் தணிக்கை மற்றும் அக்கவுன்ட்ஸ் சர்வீஸ்/ இந்தியன் பாதுகாப்புத்துறை அக்கவுன்ட்ஸ், இந்தியன் ரயில்வே அக்கவுன்ட்ஸ் சர்வீஸ் அல்லது மத்திய, மாநில முக்கிய துறையில் அக்கவுன்ட்ஸ் சர்வீசில் குறைந்தது 12 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

15. நிர்வாக அதிகாரி:

1 இடம் (பிரதிநிதி பணி):

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.

தகுதி:

பட்டப்படிப்புடன் பெர்சனல் மேனேஜ்மென்ட் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ மற்றும் அக்கவுன்ட்ஸ், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 7 ஆண்டுகள் முன்அனுபவம்.

16. பிரிவு அலுவலர்:

3 இடங்கள். (பிரதிநிதி பணி):

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

தகுதி:

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள்/ யூனியன் பிரேதசங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குறைந்த பட்சம் 8 ஆண்டுகள் பிரிவு அலுவலராக பணியாற்றியிருக்க வேண்டும்.

17. தனி செயலாளர்: (பிரதிநிதி பணி)

1 இடம்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

தகுதி:

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது பணியாற்றியிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதும் திறனும், அதை டைப் செய்வதில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

18. ஜூனியர் இன்ஜினியர்: (பிரதிநிதி பணி)

1 இடம்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

தகுதி:

மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்களில் குறைந்த பட்சம் ஓராண்டு ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றிய முன்அனுபவம் இருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல் பாடங்களில் டிப்ளமோ.

19. ஜூனியர் இன்ஜினியர் (பிரதிநிதி பணி):

1 இடம்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

தகுதி:

சிவில் பாடத்தில் டிப்ளமோ மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஜூனியர் இன்ஜினியராக பணிபுரிந்திருக்க வேண்டும். பிரதிநிதி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அனைத்து பணிகளுக்கும் வயது வரம்பு 5.4.2015 தேதிப்படி கணக்கிடப்படும்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.cpcb.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Administrative Officer (Recruitment),
Central Pollution Control Board,
“Praivesh Bhawan“, East Arjun Nagar,
Shahdara,
DELHI110032.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.4.2015.

பட்டப்படிப்பு, கம்ப்யூட்டர் தகுதிக்கு இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 100 காலியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்திய ஸ்டீல் ஆணையத்தின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய வாணிப நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது.

இந்த அலுவலகங்களில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டென்ட் காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

பணி:

ஜூனியர் அசிஸ்டென்ட் டிரெய்னி (நிலை - எஸ் - 3):

மொத்த இடங்கள்:

100 (எஸ்சி - 16, எஸ்டி - 6, ஒபிசி - 28, பொது - 50).

சம்பளம்:

ரூ.16,800 - 24,110.

வயது:

1.3.2015 தேதிப்படி 18 முதல் 28க்குள்.

தகுதி:

55 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஒரு வருட டிசிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் 45 சதவீதம் பெற்றிருந்தால் போதும். கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருந்தால் போதும்).

அதிகபட்ச வயது வரம்பு

1.3.2015 தேதிப்படி கணக்கிடப்படும். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். கம்ப்யூட்டர் திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு கொல்கத்தாவில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.250. இதை இன்டர்நெட் பேங்கிங் அக்கவுன்ட்/ கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு மூலம் ஆன்லைன் முறையில் செலுத்தவும். ஸ்டேட் பாங்க் செலானை பயன்படுத்தியும் கட்டணம் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.4.2015.

விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரங்களை சரிபார்க்க, திருத்தம் செய்ய கடைசி நாள்: 8.4.2015.

'எஸ்டி' பிரிவினருக்கு வாய்ப்பு புதுச்சேரி ஜிப்மரில் 40 ஸ்டாப் நர்ஸ் தேவை

புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 40 ஸ்டாப் நர்ஸ் பணிக்கு தகுதியான பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.

பணி:

ஸ்டாப் நர்ஸ் (குருப் - பி):

மொத்த இடங்கள் - 40. (இதில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.)

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

3.4.2015 அன்று 40க்குள். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்ப் பாடத்தில் பிஎஸ்சி அல்லது டிப்ளமோ. இந்திய நர்சிங் கவுன்சில்/மாநில நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.250. இதை 'The Director, JIPMER, Puducherry' என்ற பெயரில் புதுச்சேரியிலுள்ள ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,
 JIPMER,
PUDUCHERRY 605 006.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.4.2015.

பிளஸ் 2 தேர்ச்சிக்கு ராணுவ தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம், டெஹூ ரோடு புனே பகுதியில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலையில் காலியாக உள்ள 22 குருப் 'சி' பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. ஸ்டோர் கீப்பர் :

4 இடங்கள் (பொது - 2, எஸ்சி - 1, ஒபிசி - 1).

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் 'ஓ' நிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

2. பயர்மேன்:

1 இடம் (பொது).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாதங்களுக்கு குறையாத ஆரம்ப தீத்தடுப்பு பயிற்சி குறித்த படிப்பில் தேர்ச்சி. (ஷூக்கள் இல்லாமல்): 165 செ.மீ., மார்பளவு: சாதாரண நிலையில் 81.5 செ.மீ. (விரிவடைந்த நிலையில் 85 செ.மீ). எடை: குறைந்தபட்சம் 50 கிலோ.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

3. டெலிபோன் ஆபரேட்டர்:

1 இடம் (பொது).

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் பிபிஎக்ஸ் போர்டு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்சேஞ்சுகள் கையாள்வதில் முன் அனுபவம்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

4. லோயர் டிவிசன் கிளார்க்:

6 இடங்கள் (பொது - 3, எஸ்சி - 2, எஸ்டி - 1).

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

5. தர்வான்:

4 இடங்கள் (எஸ்சி - 1, எஸ்டி - 1, ஒபிசி - 2).

தகுதி:

மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி. உடற்தகுதி: (ஷூக்கள் இல்லாமல்) உயரம்: 165 செ.மீ., மார்பளவு: சாதாரண நிலையில் - 77 செ.மீ., விரிவடைந்த நிலையில் - 82 செ.மீ., முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

6. சிவிலியன் மோட்டார் டிரைவர்:

1 இடம் (பொது).

தகுதி:

மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் இலகுரக, கனரக வாகனங்கள் ஓட்டும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்கள் பழுதுபார்க்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

7. சீனியர் நர்ஸ் (நிலை - 2):

2 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1).

தகுதி:

அறிவியல் பாடங்களில் பிளஸ் 2 மற்றும் நர்சிங் பாடத்தில் சான்றிதழ் படிப்புடன் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

8. ஆம்புலன்ஸ் டிரைவர்:

2 இடங்கள் (எஸ்சி - 1, ஒபிசி - 1).

தகுதி:

மெட்ரிகுலேசனுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கனரக, இலகுரக வாகனங்கள் ஓட்டுவதில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

9. சூப்பர்வைசர் (கேன்டீன்):

1 இடம் (பொது).

தகுதி:

மெட்ரிகுலேசனுடன் கம்ப்யூட்டரில் 'ஓ' நிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: வரிசை எண்:

1, 4, 7, 9 ஆகிய பணிகளுக்கு 3.4.15 தேதிப்படி 18 முதல் 27க்குள். வரிசை எண்: 5 பணிக்கு 3.4.2015 தேதிப்படி 20 முதல் 27க்குள். வரிசை எண்: 6 பணிக்கு 3.4.2015 தேதிப்படி 18 முதல் 32க்குள்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.50. இதை 'The General Manager, Ordnance Factory Dehu Road, Pune' என்ற பெயருக்கு டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ofdr.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,
Ordnance Factory Dehu Road,
PUNE 412101,
MAHARASHTRA.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.4.2015

அரியலூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Image result for கிராம உதவியாளர்அரியலூர் வட்டத்தில் காலியாக உள்ள 6 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரியலூர் வட்டாட்சியர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் வட்டத்தில் ஓட்டக்கோவில், இலுப்பையூரி, இடையத்தாங்குடி, கரையவெட்டி, திருமழபாடி, மற்றும் வெற்றியூர் ஆகிய 6 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஓட்டக்கோவில் கிராமத்துக்கு ஓட்டக்கோவில், இலுப்பையூர், கடுகூர், ராயம்புரம், கல்லங்குறிச்சி, கோவிந்தபுரம், ஆகிய கிராமங்களில் வசித்துவரும் முஸ்லீம்(பொது)வகுப்பினரும், பிற்பட்ட வகுப்பினர்களும், இலுப்பையூர் கிராமத்துக்கு இலுப்பையூர் கிராமத்துக்கு இலுப்பையூர், பொட்டவெளி, ராயம்புரம், ஓட்டக்கோவில், ஆகிய கிராமங்களில் வசித்து வரும் அட்டவணை வகுப்பினரும், இடையத்தாங்குடி கிராமத்துக்கு இடையத்தாங்குடி, கருப்பிலாக்கட்டளை, பெரியதிருக்கோணம், கருப்பூர்சேனாபதி, புதுப்பாளையம், சிறுவளூர் ஆகிய கிராமங்களில் வசித்து வரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர்(பெண்கள்) வகுப்பினரும்,

கரையவெட்டி கிராமத்துக்கு கரையவெட்டி, கீழக்காவட்டங்குறிச்சி, வெங்கனூர், கோவில்எசனை(கிழக்கு) அயன்சுத்தமல்லி, சன்னாவூர்(வடக்கு) இலந்தைக்கூடம், அன்னிமங்கலம் ஆகிய கிராமங்களில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரும், திருமழபாடி கிராமத்துக்கு கண்டிராதீர்த்தம், குலமாணிக்கம்(கிழக்கு), அன்னிமங்கலம், ஆகிய கிராமங்களில் வசித்து வரும் பொது(அனைத்து பிரிவினரும்) வகுப்பினர்களும்,

வெற்றியூர் கிராமத்துக்கு வெற்றியூர், சாத்தமங்கலம், கீழக்கொளத்தூர், கீழக்காவட்டங்குறிச்சி, அருங்கால், அயன்சுத்தமல்லி, மஞ்சமேடு, ஆகிய  கிராமங்களில் வசித்து வரும் அட்டவணை வகுப்பினர்(பெண்கள் மட்டும்) கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது கல்வித் தகுதி உள்ளிட்ட விபரங்களுடன் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் உதவி மேலாளர் பணி

Image result for தூத்துக்குடி துறைமுகம்தமிழ்நாடு, தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள உதவிமேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Estate Manager Grade-I

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Architecture/Town and Country Planning பிரிவில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Chief Manager, V.O.Chidamparanar
 Port Trust, Tuticorin - 628004.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.vocpt.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

போலீஸ் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சிபெறும் வழிமுறைகள்

நேர்மையான, மனிதாபிமான உணர்வுடன் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இளையவர்கள் தயாராகி கொண்டிருப்பீர்கள். 1,078 பணியிடங்களுக்கு 1.70 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.

எப்படி தேர்வு நடக்கும், எந்தெந்த பகுதிக்கு எத்தனை மார்க் என்ற குழப்பம், தேர்வாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேள்வியாக மனதில் ஓடிக்கொண்டிருக்கும். எழுத்துத்தேர்வில் 35 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களில் இருந்து இடஒதுக்கீடு அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். பின் உடற்தகுதி தேர்வு நடக்கும். இதில் தகுதியானவர்கள் 1:2 எண்ணிக்கையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

பொதுப்பிரிவில் எழுத்துத்தேர்வுக்கு மொத்தம் 70 மதிப்பெண். உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண். சிறப்பு மதிப்பெண் 5. அதாவது என்.சி.சி., 2, விளையாட்டு 2, என்.எஸ்.எஸ்., 1 மதிப்பெண். போலீஸ் துறை ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வுக்கு 85 மதிப்பெண். தேசிய அளவில் போலீசாருக்கான பணித்திறன் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்கு 3, வெள்ளிப் பதக்கத்திற்கு 3, வெண்கலத்திற்கு 2 மதிப்பெண் என சிறப்பு மதிப்பெண் 5 உண்டு.

நேர்காணலில் 10 மதிப்பெண் என்று மொத்தம் 100 மதிப்பெண். எழுத்துதேர்வில் கூடுதல் மதிப்பெண் எடுத்தால்தான் அடுத்தக்கட்ட தேர்வுக்கு செல்ல முடியும். இதனால் இத்தேர்வு மிக மிக முக்கியம்.

எதில் இருந்து கேள்வி

இதுவரை நடந்த சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்டுள்ளனர். அதேபோல் எஸ்.ஐ., தேர்விலும் கேள்வி கேட்க வாய்ப்பு உண்டு. போலீஸ் துறை ஒதுக்கீட்டில் தேர்வு எழுதுபவர்களுக்கு பொது அறிவு வினாத்தாள் உண்டு.

பொதுப்பிரிவுக்கான பாடத்திட்டம்தான் போலீஸ் ஒதுக்கீட்டு தேர்வாளர்களுக்கு என்றாலும், சட்டம், போலீஸ் நிர்வாகம், நடைமுறை, வழக்கு விசாரணை தொடர்பானவை கேள்விகளாக வரக்கூடும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றாச்சு... அடுத்து உடற்தகுதி தேர்வு.

உயரம், மார்பளவு போன்றவை நிர்ணயிக்கப்பட்ட அளவை குறைந்தாலும் வாய்ப்பு பறிபோய்விடும். இதைதவிர்க்க, பயிற்சி மூலம் அதை சரிசெய்யலாம். முயற்சியும், கடின பயிற்சியும் இருந்தால் வெற்றி எளிதாகலாம்.

தேர்வு, கேள்வி எப்படி?

அனைத்து பிரிவு பாடங்களையும் படித்தால் வெற்றி நிச்சயம். பொதுப்பிரிவினருக்கு பொது அறிவு பகுதிக்கு 40 மதிப்பெண். உளவியல் அறிவுக்கூர்மைக்கு 30 மதிப்பெண். மொத்த கேள்விகள் 140. ஒரு கேள்விக்கு அரை மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 70. தேர்வு 2.30 மணிநேரம்.

போலீஸ் துறை ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பொது அறிவு 15 மதிப்பெண். இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், போலீஸ் உத்தரவுகள், போலீஸ் நிர்வாகம் ஆகியவற்றுக்கு 70 மதிப்பெண்கள். மொத்தம் 170 கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் அரைமதிப்பெண் வீதம் 85 மதிப்பெண். தேர்வு 3 மணிநேரம்.

காஃபி வாரியத்தில் ஆராய்ச்சியாளர் பணி

Image result for காஃபி வாரியகர்நாடகா மாநிலம், பெங்களூரில் செயல்பட்டு வரும் காஃபி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 2 ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ரிசர்ச் அஸிஸ்டெண்டண் கிரேடு 1 - அக்ரோனமி

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800



பணி: ரிசர்ச் அஸிஸ்டெண்ட் கிரேடு 1 - பிளாண்ட் பிசியாலஜி

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.9300 - 34,800

தகுதி: வேளாண்மை, அக்ரோனமி, ஹார்டிகல்ச்சர் போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy Secretary (SR),

Coffee Boadr, No.1, Dr.B.R.Ambedkar Veedhi, Bengaluru - 560001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indiancoffee.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு உதவியாளர் பணி

இந்திய நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள 12 பாதுகாப்பு உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 1/2015

நிறுவனம்: Parliament of India

பணி: Security Assistant

காலியிடங்கள்: 12

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினர் +2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயதுவரம்பு: 05.05.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.loksabha.nic.in அல்லது http://164.100.47.132/JRCell/Module/Notice/Advt.1-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Image result for கிராம உதவியாளர்செந்துறை தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, செந்துறை வட்டாட்சியர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவில் உள்ள ஆதனங்குறிச்சி,மணக்குடையான்,பெரியாக்குறிச்சி ஆகிய வருவாய் கிராமங்கலில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவற்றிற்கு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆதனங்குறிச்சி கிராமத்துக்கு அருகில் வசிக்கும் தளவாய், மணக்குடையான், ஆலத்தியூர், துளார், ஆதனங்குறிச்சி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், விதவைகள் விண்ணப்பிக்கலாம்.

மணக்குடையான் கிராமத்துக்கு ஆதனங்குறிச்சி, துளார்,தளவாய், அசாவீரன்குடிக்காடு, மற்றும் மணக்குடையான் கிராமங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பெரியாக்குறிச்சி கிராமத்துக்கு மணப்புத்தூர், அசாவீரன்குடிக்காடு, சிறுகளத்தூர், மருவத்தூர், நக்கம்பாடி மற்றும் பெரியாக்குறிச்சியை சேர்ந்த பொது வகுப்பினரும், அட்டவணை வகுப்பினரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்குள்பட்டவராகவும்  இருக்க வேண்டும். அட்டவணை வகுப்பினர் 35 வயதுக்குள்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்குள்பட்டவராகவுமம் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் பெயர் முகவரி, கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் போன்ற முழு விபரங்களுடன் ரூ.30 க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் ஏப்.6 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்