Share

Tuesday, March 31, 2015

முதுநிலை மருத்துவப் படிப்புகள்: 13 இடங்கள் காலி

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் 13 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தில் 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்.எஸ்., எம்.டி, முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு,  முதுநிலை பல் மருத்துவப் படிப்பான எம்.டி.எஸ். என மொத்தம் 585 இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மார்ச் 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 572 அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரம்பின. கலந்தாய்வின் முடிவில் 13 இடங்கள் காலியாக உள்ளன.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஏற்படும் காலியிடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு கிடைக்கும் இடங்களுக்கும், தமிழக அரசின் ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 13 இடங்களுக்கும் சேர்த்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏப்ரல் மாத இறுதியில் நடத்தப்படும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்: