Share

Monday, January 19, 2015

பிளஸ் 2 தகுதிக்கு முப்படைகளில் 375 அதிகாரி பணிகள்

தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய கப்பற்படை அகாடமி பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானம், கப்பற்படைகளில் அதிகாரிகள் பணிக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி தேர்வை நடத்துகிறது. தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் 135வது கோர்ஸ் மற்றும் கப்பல் படை அகாடமியில் 97வது 10 + 2 கோர்ஸ் பயிற்சிகள் 2.1.2016ல் ஆரம்பமாக உள்ளது.

மொத்த காலியிடங்கள்: 375.

இதில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் 320 இடங்களும் (ராணுவம் - 208, கப்பற்படை - 42, விமானப்படை - 70). இந்திய நேவல் அகாடமி (பிளஸ் 2 என்ட்ரி ஸ்கீம்) - 55.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 2.7.1996க்கு முன்போ அல்லது 1.7.1999க்கு பின்போ பிறந்திருக்கக் கூடாது. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

1. தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு:

பிளஸ் 2 தேர்ச்சி.

2. தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10+2 (Cadet Entry Scheme) பிரிவிற்கு:

இயற்பியல், கணிதம் பாடப்பிரிவுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்:

ரூ.100. (எஸ்சி., எஸ்டியினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது). இதை இணையதளத்திலிருந்து செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் பணமாக செலுத்தலாம் அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா/ ஸ்டேட் பாங்க் ஆப் பைகானிர் மற்றும் ஜெய்ப்பூர்/ ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்/ ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்/ ஸ்டேட் பாஙக் ஆப் பாட்டியாலா/ ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளின் ஏதேனும் ஒரு கிளையில் நெட் பேங்கிங் முறை மூலம் செலுத்தலாம். இரண்டு கட்டங்களாக 3 முதல் 4 நாட்கள் தேர்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வு சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், மதுரை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.

www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.1.2015.

0 கருத்துரைகள்: