விருந்தோம்பல் துறை என்பது, தங்குவது, உணவு சேவைகள், பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு விளையாட்டு அம்சங்கள் கலந்த ஒரு கலவையாகும். அடிப்படையாக இத்துறையில் 3 பிரிவுகள் உள்ளன. அவை, ஓட்டல்கள், பயணம் மற்றும் சுற்றுலா, ரெஸ்டாரன்ட்கள் மற்றும் கிளப்புகள்). விருந்தோம்பல் தொழில்துறை தன்னுள் பல்வேறான பணி வாய்ப்புகளை உள்ளடக்கியதாகும். ஈவென்ட்ஸ்(விளையாட்டு, இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் போன்றவை), மாநாடுகள், உபசார விருந்து நிகழ்வுகள், தீம் பார்க்குகள், ரெஸ்டாரண்ட்கள், கேட்டரிங், ரிசார்ட்டுகள், ஏர்லைன்ஸ் மற்றும் மக்கள் சேவை தொடர்பான அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.
* இத்துறைக்கான தகுதிகள்:
விருந்தோம்பல் துறையில் தமது பணியை அமைத்துக் கொள்ள விரும்புவோர், நல்ல உடலாற்றல், வலுவான தகவல் தொடர்பு திறன்கள், காரணகாரிய திறன்கள், மற்றும் கவர்ந்திழுக்கும் ஆளுமை ஆகிய அம்சங்களை பெற்றிருப்பது அவசியம். இதன் மூலம் தான் இத்துறையில் வெற்றி காண முடியும். வாடிக்கையாளர்கள் சேவை தொடர்பான இத்துறையில், சவாலான சூழல்களில் பதற்றமில்லாமல் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
நீண்ட நேரம் பணியாற்றும் சகிப்புத்தன்மை வேண்டும். நட்பு ரீதியான, பணிவான, கவர்ந்திழுக்கும் மற்றும் உபசரிப்பு தன்மையுள்ள ஆளுமையை இத்துறை சார்ந்த ஒருவர் கொண்டிருப்பது கட்டாயம். இரட்டை மொழி தெரிந்தவர்களுக்கு, இத்துறையில் பணி வாய்ப்புகள் அதிகம்.
* படிப்புகள்:
ஓட்டல் மேனேஜ்மென்ட், ஓட்டல் அன்ட் டூரிசம் மேனேஜமென்ட் அல்லது ஓட்டல் நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் பட்டப் படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளில் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், சுற்றுலா கப்பல்கள், பொழுது போக்கு பூங்காக்கள், மார்க்கெட்டிங் அமைப்புகள், மாநாட்டு மையங்கள், கிளப்புகள், மற்றும் தொடர்புடையவற்றை நிர்வாகம் செய்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். மேலும், விருந்தோம்பல் வணிகம் தொடர்பான பல்வேறு துறைகளில், அக்கவுண்டிங், நிர்வாகம், நிதி, தகவல் அமைப்பு, மார்க்கெட்டிங், மனிதவள நிர்வாகம், பொதுமக்கள் தொடர்பு, வியூகம், மதிப்பீட்டு முறைகள், பகுதிவாரியான படிப்புகள் ஆகியவை உள்ளடங்கிய ஒட்டுமொத்த பாடங்களும் அடக்கம்.
அத்தகைய படிப்புகளில் முக்கியமானது, ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட் அல்லது ஹாஸ்பிடாலடி மற்றும் டூரிசம் மேனேஜ்மென்ட் ஆகிய ஏதேனும் ஒரு பெயரில் வழங்கப்படும் எம்.பி.ஏ., படிப்பு. இப்படிப்பை தவிர, ஹாஸ்பிடாலடி மற்றும் டூரிசம் மேலாண்மையில், முதுநிலை டிப்ளமோ படிப்பையும் மேற்கொள்ளலாம். இத்தகைய படிப்புகளின் மூலமாக, விருந்தோம்பல் தொழில்துறையில், ஒருவர் சிறப்பான நிபுணத்துவம் பெற முடியும்.
* கல்வி நிறுவனங்கள்:
விருந்தோம்பல் துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை வழங்கும் அகில இந்திய அளவிலான சில பெயர் பெற்ற கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட், டாக்டர் அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் சண்டிகர்.
அமிட்டி ஸ்கூல் ஆப் ஹாஸ்பிடலிடி நொய்டா, வெலிங்கர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் மும்பை, எஸ்பி மோர் பவுண்டேஷன் மும்பை, அகடமி ஆப் மெரிடைம் எஜூகேஷன் அண்ட் டிரெயினிங் சென்னை, டெல்லி பிசினஸ் ஸ்கூல் டெல்லி, ஹைரேங்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், நொய்டா, ப்ரை இன்ஸ்டிடியூட் ஆப் ஹாஸ்பிடலிடி மேனேஜ்மென்ட் நொய்டா, பஞ்சாப் டெக்னிக்கில் யுனிவர்சிடி ஜலந்தர், திலக் மகாராஷ்டிரா யுனிவர்சிடி புனே, கோகினூர் காலேஜ் ஆப் ஓட்டல்-டூரிசம் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் மும்பை ஆகியவை உள்ளன.
* வேலை வாய்ப்புகள்:
லாட்ஜிங் ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் ஆகியவற்றின் பெருக்கம், லாட்ஜிங் துறையில் அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. இவற்றில், விருந்தினர் தொடர்பு, ஹவுஸ் கீப்பிங், பொது தொடர்பு, மனித வளம், மற்றும் விற்பனை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன. அழகு நிலையங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் ஆபரேஷன்ஸ் மேலாளர், அழகு நிலைய பொது மேலாளர் மற்றும் முன்னணி அழகுநிலைய தொழில் நிபுணர் உள்ளிட்ட பல்வேறான பணி வாய்ப்புகள் இப்பிரிவில் உள்ளன.
உணவு மற்றும் பானங்கள் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் மற்றும் இதர கேட்டரிங் சேவை மையங்களில் சமையலறை மேலாளர், ரெஸ்டாரன்ட் மேலாளர், முன்னணி சமையல்காரர், பார் மேலாளர், கேட்டரிங் மேற்பார்வையாளர், உணவு மற்றும் பானங்கள் இயக்குநர் உள்ளிட்ட நிலைகளில் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. பயணம் விருந்தோம்பல் துறைகளில் ஆர்வமுடைய நபர்களுக்கு பணிகளை அள்ளி வழங்கும் பிரிவுகளில் முக்கியமானது பயணத்துறை. சிறுபடகு இயக்குநர், டிராவல் ஏஜென்ட், சுற்றுலா மேலாளர் மற்றும் பொழுது போக்கு மேலாளர் உள்ளிட்ட பணி வாய்ப்புகள் உண்டு.

0 கருத்துரைகள்:
Post a Comment