கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் அடங்கிய பாலிமர் டெக்னாலஜி என்னும் ஒரு சிறப்பு பிரிவானது, படிப்பதற்கு ஆர்வமூட்டக் கூடியது. நல்ல பணி வாய்ப்புகளை கொண்டது. ரப்பர் டெக்னாலஜி, பிளாஸ்டிக் டெக்னாலஜி, பைபர் டெக்னாலஜி, பிசின் மற்றும் பூச்சு தொழில்நுட்பம் போன்ற பரவலான அம்சங்களை உள்ளடக்கிய ஒரு படிப்பாக இந்த பாலிமர் டெக்னாலஜி படிப்பு திகழ்கிறது. பல் துலக்கும் பிரஷ், பாத்ரூமில் பயன்படுத்தும் பக்கெட் உள்ளிட்ட சாதாரண பொருட்கள் முதல் ராக்கெட்டுகள், ஏவுகணைகள், விமானங்கள், செயற்கை கோள்கள், பயோமெடிக்கல் அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட மிகப்பெரிய விஷயங்களில் தயாரிப்புகள் வரை பாலிமரின் பயன்பாடு மிகவும் பரவலான ஒன்றாகும்.
* பொருளாதாரத்தில் பங்கு:
இந்தியாவின் பாலிமர் சந்தையானது, ஒரு ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன்கள் மதிப்புடையதாக உள்ளது. சிறிய அளவிலான தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் செயல்பாடு நடைபெறுகிறது. மொத்தம் 33 லட்சம் பேர் இத்துறையில் பணி வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கான சராசரி யூனிட் தயாரிப்பு 215 டன். இது சீனாவின் உற்பத்தியில் 1/4 பாகமும், அமெரிக்க உற்பத்தியில் 1/8 பாகமும் ஆகும்.
* படிப்புகள்:
பள்ளிப் படிப்பு முடித்த பிறகு 4 வருட பி.டெக்., படிப்பாக பொறியில் கணிதம், மெக்கானிக்ஸ், கிராபிக்ஸ், மேலாண்மை ஆகியவை மட்டுமின்றி கெமிக்கல் இன்ஜினியரிங், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி, பைபர் டெக்னாலஜி, பெயின்ட் டெக்னாலஜி, பயோமெடிக்கல் அப்ளிகேஷன்ஸ், ஏரோஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் அப்ளிகேஷன்ஸ், பயோடீக்ரடேஷன் ஆப் பாலிமர்ஸ், டயர் டெக்னாலஜி, கம்போசைட் டெக்னாலஜி உள்ளிட்ட விஷயங்கள் இப்படிப்பில் அடங்கி உள்ளன.
* நடைமுறை அனுபவம்:
மாணவர்கள் எந்த நிறுவனத்தில் ப்ராஜக்ட் பணியை மேற்கொள்கிறார்களோ அந்த நிறுவனத்திலேயே பணி வாய்ப்புகளை பெறுகிறார்கள். முதல் 5 மாதங்களில் ஒரு லைவ் ரிசர்ச் ப்ராஜக்டை செய்து முடிக்கும் மாணவர்கள் கடைசி ஆறாவது மாதத்தில் தொழில்துறை பயிற்சியை மேற்கொள்கிறார்கள். மாணவர்கள் மேற்கொள்ளும் ரிசர்ச் ப்ராஜெக்ட்டுகள், அவ்வப்போது சர்வதேச ஜர்னல்களில் வெளி வருவதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் ஒரு பெரிய மதிப்பு உருவாகிறது.
சேட்டிலைட்டுகளை செலுத்தும் ராக்கெட்டுகளுக்கான ஆற்றல் கொண்ட உந்துவிசை இயந்திரங்கள், ஏரோஸ்பேஸ், நீரடி பயன்பாடுகளுக்கான புதிய இணைப்பு மேம்பாட்டு அம்சம், டையர் உள்ளடக்கத்திற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்ளடக்கங்களின் அறிமுகம், செயற்கை எலும்புகளின் மேம்பாடு, நானோ உள்ளடக்கங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் ஆகியவற்றை ஜர்னல்களில் வெளியானவற்றுக்கு உதாரணமாக கூறலாம்.
* சேர்க்கை பெறுவது எப்படி?
பிற பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க பின்பற்றப்படும் நடைமுறைதான் இதற்கும். பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை படித்து தேவையான நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதியிருக்க வேண்டும். மதிப்பெண் கணக்கீட்டில் 50 சதவீதம் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய 3 பாடங்களின் கூட்டிற்கும், தனியாக 50 சதவீதம் கணிதப் பாடத்திற்கு மட்டுமாக பிரித்து கணக்கிடப்படும்.
பல பொறியியல் கல்வி நிறுவனங்கள் இப்படிப்பில் மாணவர்களை சேர்க்க தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. மேலும், பல பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள், பாலிமர் டெக்னாலஜியில் டிப்ளமோ படிப்பை வழங்குகின்றன. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இப்படிப்பிற்கான வருடாந்திர கல்வி கட்டணம் ரூ.8000. ஆனால், சுயநிதி கல்வி நிறுவனங்களில் ஆண்டு கல்வி கட்டணம் ரூ.65000க்கு மேல் செலவாகின்றன.
* பணிவாய்ப்புகள்:
டயர், மோல்டு செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பெயின்டுகள் போன்ற உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மேலாண்மைப் பணி மற்றும் உற்பத்தி ஆகியவற்றிலும், நிறுவனங்களின் தொழில்நுட்ப பிரிவுகளிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், உற்பத்தி தொடர்பான தரக்கட்டுப்பாடு பிரிவிலும் பணி வாய்ப்புகள் உண்டு. பாலிமர் கச்சா பொருட்கள், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் பணியானது, பாலிமர் தொழில்துறையில் மிக முக்கியமான ஒன்றாகும்.
அதே சமயம், இப்பணியை சிறப்பாக மேற்கொள்ள, பி.டெக்., படிப்புடன் எம்.பி.ஏ., படிப்பையும் முடித்திருந்தால் நல்லது. கூடுதல் முக்கியத்துவமும் கிடைக்கும். இப்படிப்பை பாலிடெக்னிக் பிரிவு படித்தவர்கள், டயர், பெயின்ட், பிசின், பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்களில் மேற்பார்வையாளர், நிலையிலான பணி வாய்ப்புகளை பெறுகிறார்கள்.

0 கருத்துரைகள்:
Post a Comment