Share

Thursday, July 23, 2015

நெடுஞ்சாலைத் துறையில் 213 உதவி பொறியாளர் பணி: அடுத்த மாதம் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Image result for நெடுஞ்சாலைத் துறைநெடுஞ்சாலைத்துறையில் 213 உதவி பொறியாளர் பணிக்கு, வரும் 12-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

                                           தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், நெடுஞ்சாலைத்துறையில் 213 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு, சிவில் என்ஜினியரிங் பயின்றவர்கள், இன்று முதல், அடுத்த மாதம் 12-ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கான இணையதளத்துக்கு சென்று (http://www.tnpsc.gov.in/latest-notification.html)  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

                                        இதற்கான தேர்வு, வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி காலை, மாலை என இரண்டு வேளைகளும் நடைபெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோர்களுக்கு அப்துல் கலாம் வேண்டுகோள்

பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துவிட்டு, குழந்தைகளுடன் சேர்ந்து புத்தகங்களை படிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தினார்.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்கத்தின் 90-ஆம் ஆண்டு விழாவில் டிஜிட்டல் ஆல் அமைப்பைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

அரியலூர் பகுதி விவசாயிகள் இயற்கை வேளாண்மை முறையில் பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். அந்தப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு கிராமங்களில் விற்பனை அங்காடிகள் வேண்டும். இயற்கை விவசாய உணவுகளால் உடல்நலம் காக்கப்படும்.

ஒவ்வொரு வீட்டிலும் சிறிய நூலகம் வேண்டும். பெற்றோர் தமது குழந்தைகளுடன் நூல்களைப் படித்து கலந்துரையாட வேண்டும். தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குழந்தைகளுடன் செலவழிக்க பெற்றோர் முன்வர வேண்டும்.

மதுரை மல்லிகைக்கு சர்வதேச அங்கீகாரம் பெற நடவடிக்கை தேவை. இங்குள்ள உற்பத்திப் பொருள்களை தேசிய அளவில் தெரியப்படுத்த கண்காட்சி நடத்த வேண்டும்.

வேலைவாய்ப்பு பெருகவும், வறுமை ஒழியவும் தொழில் வளர்ச்சி அவசியம். கிராம- நகர இடைவெளியைக் குறைக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், நீர் மேலாண்மை, நேர மேலாண்மை, திடக்கழிவு சுழற்சி முறை, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஊராட்சி அமைப்புகளுடன் வர்த்தக சங்கத்தினர் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

பின்னர் கூட்டத்தினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உற்பத்தி, வடிவமைப்பு, தரம் ஆகியவை மேம்படும். தொலைதொடர்பு, அடிப்படை வசதிகள், சூரிய மின்சாரத்துடன் கூடிய இல்லம் ஆகியவை கிராம மக்களை மேம்படுத்தும் என்றார்.

திருவாரூர் மாவட்டத்தில் ஓட்டுநர், உதவியாளர் பணி

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தியில் ஓட்டுநர், உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உள்ள நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி ஓட்டுனர், உதவியாளர் பணியிடத்துக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. இன சுழற்சி முறைப்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் முன் னுரிமையற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி, நான்கு சக்கர வாகன இயக்க தகுதி பெற்றவர் என்ப தற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். தொகுப்பபூதியமாக ரூ. 8,000 வழங்கப்படும். உத வியாளர் பணியிடத்துற்கு 8-ம் வகுப்பு தோல்வியுற்றவராக இருக்க வேண்டும். இதற்கு தொகுப்பூதியமாக ரூ. 5,000 வழங்கப்படும்.

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. வயது 1.7.2015 ல் 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். இந்த தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்துள்ள, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வே ண்டும்.விரும்புவோர் கல்விச் சான்றிதழ் நகல்களுடன் சாதி மற்றும் இதர சான்றுடன்அறை எண் 6, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், ஆட்சியர் அலுவலக வளாகம், திரு வாரூர் 4 என்ற முகவரிக்கு ஜூலை 27- ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தேசிய புலனாய்வு அமைப்பில் (N.I.A.) காலியாக உள்ள 41 டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர், ப்ரோக்ராமர் பணியிடங்க


தேசிய புலனாய்வு அமைப்பில் (என்.ஐ.ஏ.) காலியாக உள்ள 41 டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர், ப்ரோக்ராமர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 41

பணி இடம்: தில்லி, ல்க்னோ, கவுகாத்தி கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், கொச்சி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Senior System Analyst - 03

2. Network Administrator - 03

3. Programmer - 04

4. Additional Superintendent - 04

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

5. Data Entry Operator - 27

சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2800

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.nia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

(AIG)ADM, NIA HQ,

7th Floor, NDCC II Building, Jai Singh Road,

New Delhi - 110001.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2015

மேலும் வயதுவரம்பு, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19133_3_1516b.pdf,  http://www.nia.gov.in/Absorption_ASP.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.