Share

Saturday, April 11, 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு கப்பற்படையில் பயிற்சியுடன் பணி

Image result for கப்பற்படைஇந்திய கப்பல் படையின் எக்சிகியூட்டிவ் பிரிவில் காலியாக உள்ள Pilot/Observer பணியில் சேர திருமணமாகாத இருபால் இந்தியர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Pilot/Observer

Pilot பிரிவுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Observer பிரிவுக்கு இருபாலரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதி: Observer பிரிவுக்கு பொறியியல் துறையின் ஏதாவதொரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொது பிரிவினர் 19 - 24க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1992 - 01.01.1997க்கும் இடைப்பட்ட காலத்தில் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.

CPL Holders (Pilot) பிரிவுக்கு பொறியியல் துறையின் ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொது பிரிவினர் 19 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1992 - 01.01.1997க்கும் இடைப்பட்ட காலத்தில் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்கள் Service Selection Board (SSB) நடத்தும் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தேர்வு 2015 ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் பெங்களூரில் வைத்து நடத்தப்படும். இத்தேர்வு இரண்டு கட்டங்களாக மொத்தம் 5 நாட்கள்  நடைபெறும்.

தேர்வு செய்யப்படுவபவர்களுக்கு ஜனவரி 2016 ஆம் ஆண்டில் சம்பளத்துடன் கூடிய பயிற்சிகள் ஆரம்பமாகும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதன் படிவத்தை இரண்டு நகல்கள் எடுத்து ஒரு நகலில் உரிய இடத்தில் கையொப்பமிட வேண்டும். அதனுடன் தேவையான அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள், சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை நூலினால் கட்டி கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

"ONLINE APPLICATION NO-----------APPLICATION FOR PILOT/OBSERVER JAN 2016 COURSE Qualification ---------Percentage ----------% NCC 'C' Yes/No"  என்று விண்ணப்ப கவரின் மேல் எழுதி Post Box No.02, Sarojini Nagar(PO), New Delhi - 110023. என்று அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைனி மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2015

ஆன்லைன் விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி: 28.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: