முனைவர்பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உதவித்தொகை வழங்குகிறது.
யு.ஜி.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2010-2011ம் ஆண்டுக்கான முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்களில் 100 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், சமூகவியல், மனிதவியல் பிரிவுகளில் ஆராய்ச்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த உதவித்தொகையைப் பெற, வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். நேரிலோ, தபால் மூலமோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்க, www.ugc.ac.in/pdfss என்ற இணையப் பக்கத்தையும், மேலதிக விவரங்களுக்கு www.ugc.ac.in என்ற இணையப்பக்கத்தையும் அணுகலாம்.
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment