கோவை: தமிழக அரசால் நடத்தப்படும் விளையாட்டு விடுதிகளில் சேர, மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழக அரசால் நடத்தப்படும் விளையாட்டு விதிகளில், 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் சேர நடப்பாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
7ம் வகுப்பில் சேர, 6ம் வகுப்பில் தேர்ச்சி, 2002 ஜன., 1ம் தேதிக்கு முன் பிறந்தவராக இருக்க வேண்டும். 8ம் வகுப்பில் சேர, 7ம் வகுப்பில் தேர்ச்சி 2001 ஜன., 1ம் தேதிக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் சேர 8ம் வகுப்பில் தேர்ச்சி, 2000 ஜன., 1க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பில் சேர, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி, 1998 ஜன.,1ம் தேதிக்கு பின் பிறந்தவராகவும் 18 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
மாவட்ட, மாநில அளவு என இரு கட்டங்களாக விளையாட்டில் தேர்வு நடத்தப்படும். ஏழாம் வகுப்புக்கு, மாணவர்களுக்கு 165 செ.மீ., மாணவியருக்கு 155 செ.மீ., உயரம், எட்டாம் வகுப்புக்கு, மாணவர்களுக்கு 170 செ.மீ., மாணவியருக்கு 160 செ.மீ., ஒன்பதாம் வகுப்புக்கு, மாணவர்களுக்கு 175 செ.மீ., மாணவியருக்கு 165 செ.மீ., பிளஸ் 1 வகுப்புக்கு, மாணவர்களுக்கு 185 செ.மீ., மாணவியருக்கு 175 செ.மீ., இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு, விளையாட்டு சீருடை, பயிற்சி இலவசமாக வழங்கப்படும். கல்வி சம்பந்தப்பட்ட கட்டணங்களை பெற்றோர் ஏற்க வேண்டும். இடையில் வெளியேறினால், நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம் கணக்கிட்டு தொகையை திரும்ப செலுத்த வேண்டும். மொபைல் போன் அனுமதிக்கப்பட மாட்டாது.
பெற்றோரிடம் பேசுவதற்கு, விடுதி காப்பாளர் மூலம் தகுந்த வசதி செய்து தரப்படும். கலந்தாய்வு முறையில் இட ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் மாணவியர், தங்கள் பெற்றோர் அல்லது காப்பாளரின் புகைப்படங்களை விடுதிக் காப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அவர்களைத் தவிர, மற்றவர்கள், மாணவியரை பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்று நிரப்பி, ஏப்., 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள், சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மாநில அளவிலான தேர்வு முடிந்த பின், கலந்தாய்வுக்கு தகுதி பெறுவோரின் பட்டியல், மே 22ம் தேதி, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தவிர, அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல், அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். கலந்தாய்வுக்கு வரும்போது, மாநில தேர்வுக்கான நேர்காணல் அட்டையை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி மேத்யூ அழைப்பு விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment