இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் எனப்படும் இர்கான் நிறுவனம் பொதுத் துறை சார்ந்த கட்டுமான நிறுவனமாகும். இதன் தரம் மற்றும் சேவைகளுக்காக இந்த நிறுவனம் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 38 இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: எக்ஸிக்யூடிவ் டிரெய்னி - சிவில் பிரிவில் 20ம், எக்ஸிக்யூடிவ் டிரெய்னி மெக்கானிக்கலில் 3ம், எக்ஸிக்யூடிவ் டிரெய்னி- எலக்ட்ரிகலில் 10ம், எக்ஸிக்யூடிவ் டிரெய்னி - எலக்ட்ரானிக்ஸ் அண்டு சிக்னலிங் பிரிவில் 5ம் சேர்த்து மொத்தம் 38 இடங்கள் உள்ளன.
வயது: 31.03.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொதுவான தகுதியாக இன்ஜினியரிங் பட்டப் படிப்பு உள்ளது. இந்தப் பட்டப் படிப்பை விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் பட்டம் முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தேர்ச்சி முறை: நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-க்கான டி.டி.,யை Ircon International Limited என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.04.2015
இணையதள முகவரி: http://www.ircon.org.in

0 கருத்துரைகள்:
Post a Comment