யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அரசின் அமைச்சகம் மற்றும் இதர கேந்திரமான அரசுப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது அனைவரும் அறிந்ததே. புது டில்லியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பின் சார்பாக கம்பைண்டு மெடிக்கல் சர்வீசஸ் எக்ஸாம் நடத்துவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுத் துறை சார்ந்த 1402 மருத்துவ காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பிரிவுகள் மற்றும் காலியிட விபரம்: யு.பி.எஸ்.சி., யின் கம்பைண்டு மெடிக்கல் சர்வீசஸ் எக்ஸாம் மூலமாக ரயில்வேயின் அஸிஸ்டெண்ட் டிவிஷனல் மெடிக்கல் ஆபிசர் பிரிவில் 600ம், ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையின் அசிஸ்டெண்ட் மெடிக்கல் ஆபிசரில் 39ம், மத்திய சுகாதார சேவைப் பிரிவில் 391ம், புது டில்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் ஜெனரல் டியூடி டாக்டர் பிரிவில் 372ம் சேர்த்து மொத்தம் 1402 காலியிடங்கள் உள்ளன.
வயது: 01.01.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வை எதிர்கொள்பவர்களும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த பொது எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு இணையதளத்தைப் (http://upsconline.nic.in/mainmenu2.php) பார்க்கவும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: யு.பி.எஸ்.சி.,யின் இந்த பொது எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை அல்லது மதுரை ஆகிய நாட்டின் பல்வேறு மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.200/-ஐ பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாகவோ, அல்லது நெட் பேங்கிங் முறையிலோ, அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு வாயிலாகவோ செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.04.2015.

0 கருத்துரைகள்:
Post a Comment