Share

Friday, March 27, 2015

விளையாட்டு வீரர்களுக்கு வருமானவரி அலுவலகத்தில் பணி

Image result for விளையாட்டு வீரர்களுக்கு வருமானவரி அலுவலகத்தில் பணிசென்னையிலுள்ள இந்திய வருமான வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர், வரி உதவியாளர், பல்நோக்கு பணியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: வருமானவரித்துறை ஆய்வாளர் (கேட்டகிரி-1) - 07

சம்பளம்: மாதம் ரூ-.9,300 - 34,800

வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: வரி உதவியாளர் (கேட்டகிரி-2) - 20

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: பல்நோக்கு பணியாளர் - 10

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி: மேற்கண்ட மூன்று பணிகளுக்கும் அதெல்டிக்ஸ், கூடைப்பந்து, பாடிபில்டிங், கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, ஷட்டில் பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஏதாவது ஒன்றில் தேசிய அளவில், மாநில அளவில், பல்கலைக்கழக அளவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும். சர்வதேச அளவில் போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு திறமை மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விளையாட்டு தகுதிக்கான முழுமையான விவரங்கள் அறிய www.tnincometax.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: