Share

Friday, March 27, 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு கனிம வள நிறுவனத்தில் பணி

Image result for கனிம வளமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்எம்டிசி எனப்படும் தேசிய கனிம வள நிறுவனம் மற்றும் தேசிய இரும்பு கனிமவள ஆலையின் சத்தீஸ்கர், ஜகதால்பூர், நாகர்நர் என்ற இடத்தில் அமைந்து வரும் புதிய இரும்பு கனிம தொழிற்சாலையைக்கான எக்சிக்யூக்டிவ் டிரெய்னீ பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Trainee (Technical)

மொத்த இடங்கள்: 250

துறை வாரியான காலியிடங்கள் விவரம்:

செராமிக் - 02

கெமிக்கல் - 11

சிவில் - 07

கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் - 07

எலக்ட்ரிக்கல் - 35

எலக்ட்ரானிக்ஸ் - 05

சுற்றுப்புறச்சூழலியல் - 06

தொழிற்துறை பொறியியல் - 07

இனஸ்ட்ருமென்டேசன் - 10

மெக்கானிக்கல் - 60

மெட்டலர்ஜி - 30

மினரல் புராசசிங் - 07

மைனிங் - 14.

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500.

வயது வரம்பு: 24.03.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவிற்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்சிஏ அல்லது எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்..

பணி: Executive Trainee (Administration)

காலியிடங்கள்: 49

கமர்சியல் - 15

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சந்தையியல், வெளிநாட்டு வணிகம், விற்பனை நிர்வாகம் போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

நிதி - 09

தகுதி: பட்டப்படிப்புடன் சிஏ அல்லது ஐசிடபிள்ஏ முடித்திருக்க வேண்டும்.

மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் - 10

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் எம்பிஏ அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணியாளர் துறை - 15

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சமூகவியல், சமூகப்பணி, தொழிலாளர் நலன், பணியாளர் நிர்வாகம், தொழில் உறவுகள் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை டிப்ளமோ அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500.

வயது வரம்பு: 24.03.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். சத்தீஸ்கரில் உள்ள பெயிலாடில்லா, கர்நாடகாவில் உள்ள பெல்லாரி, பன்னாவில் வைர சுரங்கம் ஆகியவற்றில் பணியமர்த்தப்படுவார்கள்.

பயிற்சியின்போது மாதம் ரூ.20,600 உதவித் தொகையாக வழங்கப்படும்.

தேர்வு மையம்: சென்னை ஹைதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.nmdc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 17.5.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nmdc.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

0 கருத்துரைகள்: