Share

Tuesday, March 17, 2015

மத்திய அரசு நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 'Midhani  Metallurgical' தொழிற்சாலையில் சீனியர் ஆபரேட்டிவ் டிரெய்னீ, ஜூனியர் ஆபரேட்டிவ் டிரெய்னீ மற்றும் ஜூனியர் அசிஸ்டென்ட் என காலியாக உள்ள 73  பணியிடங்களுக்கு ஐடிஐ/ டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

1. Senior Operative Trainee (SOT) (WG 4):

11 இடங்கள். இவற்றில் பொதுப்பிரிவில் மெக்கானிக்கலுக்கு 6 இடங்களும், மெட்டாலர்ஜிக்கு 4  இடங்களும், எலக்ட்ரிக்கலுக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.8,500 - 20,850.

வயது:

35க்குள்.

தகுதி:

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ மற்றும் குறைந்தது 2 வருடம் பணி அனுபவம். மெக்கானிக்கல் பிரிவில் ஒரு  இடம், மெட்டாலர்ஜி பிரிவில் 2 இடம், குறைந்தபட்சம் 5 வருடம் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வழங்கப்படும். மேலும் 5 வருட வயது வரம்பு சலுகை அளிக்கப்படும்.

2. Junior Operative Trainee (JOT) (WG 2):

41 இடங்கள். இவற்றில் பொதுப்பிரிவில் எலக்ட்ரீசியன் பணிக்கு 5 இடங்களும், வெல்டருக்கு  பொதுப்பிரிவில் 2 இடங்களும், ஒபிசியில் ஒரு இடமும், பிட்டருக்கு பொதுப்பிரிவில் 10  இடங்களும், ஒபிசிக்கு 1 இடமும், எஸ்சிக்கு ஒரு இடமும், மெஷினிஸ்ட் பணிக்கு பொதுப்பிரிவில் 8 இடங்களும், ஒபிசிக்கு 4 இடங்களும், எஸ்சிக்கு 2 இடமும், எஸ்டிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பெண்களுக்கு 3 இடங்கள் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. டர்னர் பணிக்கு பொதுப்பிரிவில் 4 இடங்களும், ஒபிசி பிரிவில் 1  இடமும், எஸ்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.7,750 - 19,040.

வயது:

30க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து என்ஏசி சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும்.

3. Junior Operative Trainee (JOT) (WG 2).

10 இடங்கள். இவற்றில் வெல்டருக்கு ஒபிசி பிரிவில் ஒரு இடமும், எஸ்டி பிரிவில் 1  இடமும், பிட்டருக்கு பொதுப்பிரிவில் ஒரு இடமும், எஸ்டி பிரிவில் ஒரு இடமும், மில்  ஹேண்ட்க்கு பொதுப்பிரிவில் 2 இடமும், ஒபிசியினருக்கு 2 இடமும், எஸ்சிக்கு ஒரு இடமும், கிரேன் ஆபரேட்டருக்கு பொதுப்பிரிவினருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.7,750 - 19,040.

வயது:

35க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ படிப்பை முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம்.

4. Junior Assistant (WG 4):

11 இடங்கள். (பொது - 4, ஒபிசி - 3, எஸ்டி - 1, எஸ்சி - 3).

சம்பளம்:

ரூ.8,500 - 20,850.

வயது:

35க்குள்.

தகுதி:

கலை, அறிவியல் பிரிவில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருப்பதோடு எம்.எஸ். ஆபீஸ் போன்ற கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க  வேண்டும். தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயது:

விண்ணப்பதாரரின் வயது வரம்பானது 28.2.2015 தேதிப்படி கணக்கிடப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.100. இதை விமிஷிபிஸிகி ஞிபிகிஜிஹி ழிமிநிகிவி லிமிவிமிஜிணிஞிஎன்ற பெயரில் ஐதராபாத்தில் செலுத்தக்கூடிய வகையில் ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் செலுத்தவும்.  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

www.midhani.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager (HR),
Mishra Dhatu Nigam  Limited,
Kanchanbagh (P.O).,
Hyderabad 500058.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.3.2015.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 30.3.2015.

0 கருத்துரைகள்: