பாலிடெக்னிக் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற பாடத் திட்டத்தை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மாற்றியமைத்து வருகிறது.
நடப்பு கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
தமிழக பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. அவ்வகையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பாலிடெக்னிக் பாடத் திட்டத்தில், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் மாற்றம் செய்து வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
புதிய பாடத்திட்ட குழுவின் கன்வீனர் பேராசிரியர் வைரம் கூறியதாவது: பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழுவில், இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளை சேர்ந்த இரு பேராசிரியர்கள், தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என, எட்டு பேர் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளது.
மெக்கானிக்கல், புரடக்ஷன், ரெப்ரிஜரேஷன் அண்ட் ஏர் கண்டிஷனிங் ஆகிய பாடங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்படுகிறது.
முதலாமாண்டு மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிலிருந்தும், இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வரும் 2016 - 17ம் கல்வியாண்டிலிருந்தும், புதிய பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இவ்வாறு, வைரம் கூறினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment