Share

Tuesday, January 27, 2015

உத்தரப்பிரதேச மாநில பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு "சிறப்பு காவல் அதிகாரி பயிற்சி'

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சிறப்பு காவல் அதிகாரி பயிற்சி அளிக்க அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் படி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளில் ஒரு வகுப்பிற்கு 2 அல்லது 3 பேர் வீதம் 70 ஆயிரம் மாணவிகள் தேர்வுச் செய்யப்பட்டு, அவர்களுக்கு "சக்தி வாய்ந்த தேவதைகள்' எனும் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்பட்டு, சிறப்பு காவல் அதிகாரி என்ற பதவியும், அதற்கான அடையாள அட்டையும் வழங்கப்படும். 

மேலும், மாணவிகள் தங்களை தற்காத்துக்கொள்ளவும், மற்றவர்களுக்கு எப்படி உதவுவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த மாத இறுதியில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்: