Share

Monday, January 26, 2015

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் அறிவிப்பு மத்திய அரசில் பல்வேறு பணிகள்

கொல்கத்தா மண்ட லத்தில் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் பி' மற்றும் குரூப் 'சி' பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணி விவரம் வருமாறு:

1. பொது சுரங்க பாதுகாப்பு இயக்குனரகத்தில் டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்:

1 இடம் (பொது).

வயது:

18 முதல் 25க்குள்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

தகுதி:

இயற்பியல்/ கணிதம்/ புள்ளியியல்/ ஆபரேஷனல் ரிசர்ச்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் 2 ஆண்டு முன் அனுபவம்.

2. மத்திய நுகர்வோர் துறையின் கீழ் உள்ள தேசிய பரிசோதனை மையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்: (பிசிக்கல் - சிவில்):

5 இடங்கள். (பொது - 4, ஒபிசி - 1).

வயது:

18 முதல் 30க்குள்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

தகுதி:

பயன்பாட்டு இயற்பியல் அல்லது வேதியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் அல்லது கெமிக்கல் டெக்னாலஜி/ கெமிக்கல்/ சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., மற்றும் பரிசோதனை மையத்தில் சிவில் இன்ஜினியரிங் மெட்டீரியலை ஆய்வு செய்வதில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

3. தொற்றுநோய் தடுப்பு ஆய்வாளர்:

2 இடங்கள் (பொது).

வயது:

18 முதல் 30க்குள்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

தகுதி:

விலங்கியல் அல்லது நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களில் பி.எஸ்சி., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

4. தேசிய வரைபடம் அமைப்பில் ஜூனியர் புவியியல் உதவியாளர்:

1 இடம் (பொது).

வயது:

18 முதல் 25க்குள்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

தகுதி:

புவியியல்/ புள்ளியியல்/ கணிதம் ஆகிய பாடங்களில் ஹானர்ஸ் பட்டம்.

5. மத்திய மருந்து பரிசோதனை மையத்தில் சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்:

2 இடங்கள் (பொது).

வயது:

18 முதல் 30க்குள்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

தகுதி:

பாக்டீரியாலஜி அல்லது நுண்ணுயிரியல் அல்லது உயிரி வேதியியல் அல்லது மருந்தியல் அல்லது உடல் இயக்கவியல் அல்லது வேதியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம்.

தேர்வு கட்டணம்:

ரூ.50. இதை சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். (எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத் தினர், பெண்கள் ஆகியோர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.)

வயது வரம்பு 27.1.2015 தேதியின்படி கணக்கிடப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.sscer.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 27.1.2015.

0 கருத்துரைகள்: