ஒரு நிறுவனத்தின் பயன்பாட்டுப் பொருட்கள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் பணி. திட்டமிடுதல் மற்றும் முறைப்படுத்தல், வாங்குதல் அமைப்புகள் மற்றும் நடைமுறை, தரப்படுத்தல் மூலமாக பல்வேறான குறைப்பு நடவடிக்கைகள், தேவை மற்றும் விநியோகத்தில் நிலவும் நிச்சயமின்மைகளை குறைத்தல், கையாளுதல் மற்றும் போக்குவரத்து, ஆய்வு செய்தல், முறையாக இருப்பு வைத்தல் மற்றும் உள்நிறுவன தேவைகளுக்கு பொருட்களை வழங்குதல், விவரப் பட்டியலை நிர்வகித்தல், விற்பனை மேலாண்மை மற்றும் உடைந்த அல்லது சேதமடைந்தப் பொருட்களை நீக்குதல் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இப்பிரிவில் அடங்கும்.
* இன்றைய பொருளாதாரத்தில் மெட்டீரியல் மேலாண்மை:
நிறுவனங்களுக்கு இடையே இன்றைய பொருளாதார சூழ்நிலையில் நிலவும் போட்டி, செலவினங்களைக் குறைத்தல் போன்ற அம்சங்களால் மெட்டீரியல் மேலாண்மைத் துறையானது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில், முதலாளித்துவப் பொருளாதாரம் கடந்த 1991ம் ஆண்டில் நுழைவதற்கு முன்பாக, ஒரு நிறுவனம் தனக்குத் தேவையான பொருட்களை அதிகளவில் வாங்கி, பெரியளவிலான இடத்தில் அதை சேமித்து வைத்து, பணத்தையும், இடத்தையும் முடக்க வேண்டியதில்லை. ஆனால் இன்று ஒரு நிறுவனம் மேற்கூறிய 2 விஷயங்களையும் செய்ய வேண்டி உள்ளது. ஏனெனில், அதிகப் போட்டியால் நிலைமை மாறிவிட்டது.
* இத்துறைக்கான மனிதவளத் தேவை:
பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், இப்பணிக்கானஆட்கள் தேவை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. ஆட்டோமொபைல், பார்மசூடிகல், எப்எம்சிஜி பாதுகாப்பு, ரயில்வே, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட எப்போதும் உதிரிபாகங்கள் தேவைப்படும் அனைத்து துறைகளிலும், வாங்குதல், இருப்பு வைத்தல் மற்றும் வழங்குதல் ஆகிய பணிகளில் மெட்டீரியல் மேலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
மெட்டீரியல் மேலாண்மையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு தேவை மற்றும் விதிமுறைகள் இருக்கும். உதாரணமாக, பார்மா நிறுவனத்தில், மருந்துகள், வெப்பநிலை கட்டுப்பாட்டு அறையில், தொடர் கண்காணிப்பில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ரயில்வே துறையை எடுத்துக் கொண்டால், வைப்பு அறைகள் பொறியாளர்களால் மேலாண்மை செய்யப்படும்.
* மெட்டீரியல் மேலாண்மை படிப்பு:
இத்துறை தொடர்பான பலவித சங்கேத குறிப்புகள் இளைய தலைமுறையினர் மத்தியில் உள்ளன. இத்துறையில், பட்ட டிப்ளமோ முதுநிலை டிப்ளமோ முழு அளவிலான எம்.பி.ஏ ஆகிய படிப்புகள் உள்ளன. இத்துறையில் எம்.பி.ஏ அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்புகளை மேற்கொள்ள குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐஐஎம்எம் (இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்) வழங்கும் முதுநிலை டிப்ளமோ போன்ற படிப்புகளை பகுதி நேரப்படிப்பாகவோ அல்லது தொலை நிலைப்படிப்பாகவோ மேற்கொள்ளலாம்.
* இந்த தொழிலுக்குள் நுழைதல்:
ஒவ்வொரு நிறுவனமும், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் துறைக்கான ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் தனியான விருப்பங்களைக் கொண்டிருக்கும். சில நிறுவனங்கள், தொழில்நுட்ப செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் அல்லாத மெட்டீரியல் மேலாண்மை செயல்பாட்டை நன்றாக மேற்கொள்ளும் பொறியியல் பட்டதாரிகளை நியமித்துக் கொள்கின்றன.
அதேசமயம், இந்த இருவகை செயல்பாடுகளையும் திறம்பட மேற்கொள்ளும் தொழில் நுட்பம் சாராத பட்டதாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களில் பணிகளைப் பெறுகின்றனர். இத்துறையில் ஒருவர் ஆரம்ப நிலையில், மெட்டீரியல் மேலாண்மையில் பயிற்சி பெறுபவராக, பயிற்சி பெறும் எக்ஸ்சிகியூடிவ், பொருள் வாங்குதல் அதிகாரி, மெட்டீரியல் மேலாளர் மற்றும் வைப்பறை அதிகாரி போன்ற பணி நிலைகளில் நியமிக்கப்படுகிறார்.
ஒரு மெட்டீரியல் மேலாளர் தனது நிறுவனம் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்திருப்பதோடு, முழு சந்தை நிலவரங்களையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மெட்டீரியல் மேலாளர்கள் என்போர் ஒரு நிறுவனத்தின் சக்தி மையங்களுள் ஒன்றாக இருப்பவர்கள். ஒரு பெரிய நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான மதிப்பீட்டில் உதிரிபாகங்கள் வாங்கப்படும்.
* வணிக வியூகங்கள்:
சில இளம் மெட்டீரியல் மேலாளர்கள், தங்களின் பணியானது பொருட்களை வாங்குதல் மற்றும் அவற்றை இருப்பு வைக்கும் நிலையத்தை நிர்வகித்தல் என்ற அளவில் மட்டுமே நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், முழு சந்தை நிலவரத்தை திறம்பட அறிந்து கொள்வதும் அவரின் பணியாகும். சந்தையில் ஒரு சரியான வியாபாரியை கண்டுபிடிக்கவும், சந்தையை முறையாக ஆய்வு செய்யவும் அவர் சிறந்த முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான வழங்கல், பொருட்களின் தரம் மற்றும் சரியான நேரத்தில் பொருட்களை வழங்கும் திறன் போன்றவை ஒரு வியாபாரியை தேர்ந்தெடுப்பதில் முக்கியமானவை.
மிக அதிகளவிலான பொருட்களை இருப்பு வைத்தலும் தேவையற்றது. அதே சமயம், உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பொருட்கள் வழங்குவதில் எந்தவித தாமதமும் ஏற்பட்டு விடக்கூடாது. நிறுவனம் மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தமான திறன்களுடன், சிறந்த திட்டமிடுநராகவும், வியூக ரீதியில் முடிவெடுப்பவராகவும், நல்ல குழு தலைவராகவும் ஒரு மெட்டீரியல் மேலாளர் திகழ்வது அவசியம். எனவே, இந்தப்பணியானது ஒரு சவால் நிறைந்த பணி என்று

0 கருத்துரைகள்:
Post a Comment