Share

Wednesday, January 14, 2015

டெல்லி சபார்டினேட் சர்வீசஸில் வேலை! 1223 பேருக்கு வாய்ப்பு!

டி.எஸ்.எஸ்.பி. என்று சொல்லப்படும் டெல்லி சபார்டினேட் சர்வீசஸ் செலக்ஷன் போர்டின் மூலமாக உடற்பயிற்சி ஆசிரியர், சூப்பர்வைசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ற கல்வித் தகுதிகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

பணியிடங்கள் விவரம்:

அசிஸ்டென்ட் ஸ்டோர் கீப்பர்        12
லைப்ரேரியன்            3
டெக்னீஷியன்            4
அசிஸ்டென்ட் என்சினியர்(சிவில்)        3
ஃபார்மசிஸ்ட்            11
ஸ்டாஃப் நர்ஸ் கிரேட் பி        2
டெக்னிக்கல் அசிஸ்டென்ட்        3
ஃபீல்ட் அசிஸ்டென்ட்        7
ஷிப் மாடலிங் இன்ஸ்ட்ரக்டர் (ஆண்)    1
ஷிப் மாடலிங் ஸ்டோர்கீப்பர் (ஆண்)    2
நீச்சல் பயிற்சியாளர்        7
ஸ்விம்மிங் லைஃப் கார்ட்        7
லைப்ரரியன்
(உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஒதுக்கீடு)    9
மியூசிக் டீச்சர்            62
ஓவிய ஆசிரியர்            202
அறிவியல் ஆசிரியர்        117
உடற்பயிற்சி ஆசிரியர்        424
சுருக்கெழுத்தாளர்            47
சூப்பர்வைசர் (பெண்)        290
மேலாளர் (சிவில்)        1
துணை மேலாளர்            3
மேலாளர் (எலக்ட்ரிக்கல்)        1
லேபர் வெல்ஃபர் ஆபீசர்        2
சீனியர் சயின்ட்டிபிக் அசிஸ்டென்ட்        1
துணை விஜிலன்ஸ் ஆபீசர்        1
துணை செக்யூரிட்டி ஆபீசர்        1

வயது வரம்பு:

ஒவ்வொரு பணியிடத்துக்கு ஏற்ப வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பில் தளர்வு அரசு விதிகளின்படி வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என அந்தந்த பதவிகளுக்கு ஏற்ற கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, தனித்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் இதற்கான இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 25, 2015.

மேலும் தகவல்களுக்கு www.dsssb.delhigovt.nic.in.

0 கருத்துரைகள்: