Share

Thursday, January 15, 2015

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 181 பணியிடங்கள்

இயற்கையோடு இயைந்து இயற்கையை நேசிக்கும் வாழ்வு நம்முடையது. அப்படிப்பட்டவர்களுக்கே இயற்கையைப் பாதுகாக்கும் பணி வழங்கப்பட்டால்? அப்படியொரு வாய்ப்பைத்தான் வழங்குகிறது, தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (Tamilnadu Forest Uniformed Services Recruitment Comimittee). தமிழ்நாடு அரசின் வனத்துறை மற்றும் வனக்கழகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள வனவர்/ கள உதவியாளர் ஆகிய பதவிகளுக்காக போட்டித்தேர்வுகள் நடத்தி, தகுதியானவர்களைத் தேர்வு செய்யவிருக் கிறது இந்த கமிட்டி!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 181 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்தத் தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது.

வேலைகளின் விவரம்...

1. துறை: தமிழ்நாடு வனத்துறை

பணி:

வனவர் (ஃபாரஸ்டர்)

காலியிடங்கள்:

148

சம்பளம்:

மாதம் ரூ.9,300-34,800 + தர ஊதியம் ரூ.4,400

2. துறை: தமிழ்நாடு வனத்துறை தோட்டக் கழகம்

பணி:

வனவர் (ஃபாரஸ்டர்)

காலியிடங்கள்:

17

சம்பளம்:

மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400

3. துறை: அரசு ரப்பர் கழகம்

பணி:

கள உதவியாளர் (ஃபீல்டு அசிஸ்டென்ட்)

காலியிடங்கள்:

16

சம்பளம்:

மாதம் ரூ.9,300-34,800 + தர ஊதியம் ரூ.4,200

கல்வித் தகுதி:

விவசாயம், கால்நடை பராமரிப்பு, தாவரவியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சுற்றுச்சுழல் அறிவியல், வனவியல், நிலயியல், தோட்டக்கலை, இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிரியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, பர்சனாலிட்டி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு:

பொதுப் பிரிவினருக்கு 30. SC, ST, BC, MBC பிரிவினருக்கு 35.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.1.2015.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.2.2015.

தேர்வு மையங்கள்:

சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.60/-

தேர்வுக் கட்டணம்:

ரூ.262/-

விண்ணப்பிக்கும் முறை:

வனவர்/ கள உதவியாளர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.60/-ஐ (விண்ணப்பப் படிவக் கட்டணம் ரூ.50/- மற்றும் சேவைக் கட்டணம் ரூ.10/-) குறிப்பிட்ட தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் செலுத்தி விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் குறிப்பேட்டைப் பெற்றுக்கொள்ளலாம். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.250/-ம், சேவைக் கட்டணம் ரூ.12/-ம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட அஞ்சலகங்களில் ஏதேனும் ஓர் அஞ்சலகத்தில் இந்தக் கட்டணத்தைச் செலுத்தி, அதற்கான பற்றுச்சீட்டு விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த ளிவிஸி விண்ணப்பத்தை சரியான அளவுள்ள காகித உறையில் வைத்து, பின் அதை சரியான கிளாத் லைன்டு உறைக்குள் வைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலமாக

 The Chief Postmaster, Anna Road H.O, Chennai  600 002 

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதனுடன் சான்றிதழ்கள் / நகல்கள் எதையும் அனுப்பத் தேவையில்லை. விண்ணப்பங்களை அனுப்ப கடைசித் தேதி, 30.1.2015.

மேலும் விவரங்களுக்கு: www.forests.tn.nic.in.

0 கருத்துரைகள்: