மன்னார்குடி, : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மன்னார்குடி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களுக்குட்பட்ட களப்பகுதிகளில் பணியாற்ற சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படும் மன்னார்குடி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களுக்குட்பட்ட 5 களப்பகுதிகளுக்கு தலா 4 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இவர்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் போன்ற சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கும், வங்கிகளுக்கும் இடையே தொடர்பாளராக செயல்பட வேண்டும். இப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மன்னார்குடி மற்றும் முத்துபேட்டை வட்டாரங்களுக்குட்பட்ட களப்பகுதிகளில் குடியிருப்பதுடன் சுயஉதவிக்குழு அல்லது ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பில் உறுப்பினராகவும், விண்ணப்பிக்கும் நாளன்று 35 வயதிற்கு கீழ் உள்ளவராகவும், மக்கள் நிலை ஆய்வாளர் கண்டறியப்பட்ட உறுப்பினராகவும், 12ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
தகவல் தொடர்பு திறன் மற்றும் கணினி இயக்க போதுமான முன்அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாத மதிப்பூதியமாக ரூ. 2 ஆயி ரம் வீதம் வழங்கப்படும். உரிய தகுதி சான்றுடன் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவோர்க்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 04366-221031 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

0 கருத்துரைகள்:
Post a Comment