டெல்லி ஐ.ஐ.டி.யில் கணினி பயிலும் மாணவர்கள் இருவருக்கு ஆண்டுக்கு ரூ.1.42 கோடி சம்பளத்துடன் பேஸ்புக் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
ஐ.ஐ.டி. மாணவர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தில் இதுவே மிக அதிகமானது எனக் கூறப்படுகிறது.
கேம்பஸ் இன்டர்வியூவ் குறித்து டெல்லி ஐ.ஐ.டி ஒருங்கிணைப்பாளர் அக்ஷய் மாலிக் கூறும்போது, "இரண்டு மாணவர்கள் ஆண்டுக்கு 2,30,000 அமெரிக்க டாலர் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது.
இந்த நேர்காணல் வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சராசரி சம்பளமாக இருக்கிறது. முதல் முறையாக ஜப்பானிய நிறுவனங்கள் பல வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. அதுவும் இந்தியாவில் உள்ள தங்களது கிளைகளைலேயே வேலை வழங்கியுள்ளன" என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment