இந்தியாவை பொருத்தவரை பலவிதமான மொழிகள் உள்ளன. இவற்றில் பல மொழிகளை பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்தவர்கள் ஒருசிலர் மட்டுமே. ஆனால் கடல் கடந்து வந்து நம்மில் ஐக்கியமாகிப் போன ஆங்கிலம் இன்று இந்தியாவின் இரண்டாவது முக்கிய மொழியாக உள்ளது. ஆனால் ஆங்கிலத்தை தவிர இன்னும் பல மொழிகள் நம் நாட்டிற்குள் புகுந்து கொண்டு தான் உள்ளது. இந்த மொழிகளை படிப்பதன் மூலம் புதிய மொழியை கற்றுக் கொள்ளும் வாய்ப்பும், அதன் மூலம் அதிக அளவு வருமானத்தையும் பெறமுடியும்.
பல வெளிநாட்டு மொழிகளைக் கற்றவர் பலவிதமான வேலை வாய்ப்புகளை பெற்று அதிகமான அளவில் சம்பாதிக்கிறார். எழுத்துவழி மற்றும் வாய்வழி மொழிபெயர்ப்பு, கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணி வாய்ப்புகளில் வெளிநாட்டு மொழி நிபுணர்கள் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்கள். இவர்களின் தொழில் பெரும்பாலும் பகுதி நேரம் அடிப்படையிலானது. இந்த தொழிலில் முழுநேர வேலையில் கிடைக்கும் சம்பளத்தை விட பகுதி நேர தொழிலில் அதிகம் சாம்பாதிக்கலாம்.
* மொழி நிபுணர்களை நாடும் நிறுவனங்கள்:
இந்தியாவில் back end office வைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள், மொழி நிபுணர்களை பணிக்கு அமர்த்திக் கொண்டு தங்களின் வணிகத்திற்கு ஏற்படும் மொழி ரீதியான தடைகளை தீர்த்துக் கொள்கின்றன. இன்றைய நிலையில் பல நிறுவனங்கள் பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் மொழி கற்றவர்களை அதிகமாக தேடுகிறது. மேலும் பள்ளிகள், பல்கலைகள், மொழி கற்பித்தல் மையங்கள் ஆகியவற்றில் மொழி ஆசிரியர்களுக்கு அதிக பற்றாக்குறை நிலவுகிறது. எனவே புதிய மொழியை கற்றுக் கொள்வது என்பது ஒருவரின் ஆசையை நிறைவு செய்வதோடு அல்லாமல் அவருக்கு அதிக வருமானத்தையும் ஈட்டித் தருகிறது.
தற்போதைய சூழலில் பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் இப்படிப்பின் மீது ஆர்வம் கொண்டுள்ளனர். பன்னாட்டு நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெறவும், குறிப்பிட்ட நாடுகளுக்கு நீண்ட நாட்கள் சுற்றுலா செல்வதற்கும், பல நாடுகளின் கலாசார பாரம்பரியங்களை அறிந்து கொள்ளவும் இப்படிப்பினை மேற்கொள்கின்றனர்.
* மொழி படிப்பின் இன்றைய நிலை:
லத்தீன் அமெரிக்க நாடுகளுடன், பலவிதமான வணிக மற்றும் பொருளாதார உறவுகளை இந்தியா பலப்படுத்தி வருவதால் ஸ்பானிஷ் மொழி கற்றவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பிரெஞ்சு மற்றும் ஜெர்மனியை பொருத்தவரை இவை ஏற்கனவே பிரபலமானவை என்பதால் அவற்றை பல மாணவர்கள் விரும்பி தேர்வு செய்து கற்றுக் கொள்கிறார்கள்.
bosch, deutsche bank போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மொழி நிபுணர்களை பணிக்கு அமர்த்துகின்றன. சுற்றுலா பிரதேசங்களில் பன்மொழி நிபுணர்களுக்கு பணி வாய்ப்புகள் அதிகம். உலகளாவிய வர்த்தகத்தில் பல நாடுகள் ஈடுபடுவதால் அங்கு பன்மொழி நிபுணர்களின் தேவை அவசியமாகிறது.
* இத்துறைக்கான கல்வி படிப்புகள்:
வெளிநாட்டு மொழிகளை கற்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. பள்ளி நிலையிலிருந்தே விருப்ப மொழி தேர்வு optional படிப்பை ஒருவர் மேற்கொள்ள முடியும். கல்லூரி நிலையில் இளநிலை, டிப்ளமோ, சான்றிதழ் அல்லது ணீபீபீ ஷீஸீ பாடங்களை படிக்கலாம். பல டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் குறுகிய கால அளவுக்குள் முடிக்கக் கூடியதாய் உள்ளன.
டெல்லி பல்கலை, ஜவஹர்லால் நேரு பல்கலை, ஜாமியா மிலியா பல்கலை போன்றவை பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், கொரியன், சீனம், பெர்ஷியன் மற்றும் அராபிக் ஆகிய மொழிகளில் பி.ஏ. படிப்புகளை வழங்குகின்றன. மொழி படிப்புக்காக ஒரு புகழ் பெற்ற பல்கலையில் சேர வேண்டுமெனில் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வில் பொது அறிவு, ரீசனிங், இலக்கணம் போன்ற அம்சங்கள் உள்ளடங்கியிருக்கும்.
ஜவஹர்லால் நேரு பல்கலையில் மொழி படிப்புக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை கட்டணம் பெறப்படுகிறது. அதே சமயம் alliance francaise (french), instituto hispania (spanish) and max mueller bhavan (german) போன்ற தனியார் கல்வி நிறுவனங்களில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றன.
* பேசுதலில் உள்ள வித்தியாசங்கள்:
சில கல்வி நிறுவனங்கள் exchange கல்வி திட்டத்தை வழங்குவதால் அங்கே படிக்கும் மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று அந்நாட்டு மாணவர்களுடன் பேசும் வாய்ப்புகளை பெறுகின்றனர். இதன் மூலம் அந்த மொழியின் தெளிவான உச்சரிப்பு மற்றும் லாவகத்தை மாணவர்கள் தெளிவாக கற்றுக் கொள்ள முடியும். ஒரு மொழியின் நுட்பமான வேறுபாட்டை கற்றுக் கொள்வதன் மூலம் அதிக பயன்களை அடையமுடியும். இதனால் அந்த மொழியில் பேசும், எழுதும் மற்றும் படிக்கும் திறன்கள் மேம்படும்.
* இதற்குரிய பணிவாய்ப்புகள்:
ஒருவருக்கு சிறந்த மொழித்திறன் இருந்தால் அவர் மொழி பெயர்ப்பாளர், ஆசிரியர் உள்ளிட்ட பலவிதமான வேலைவாய்ப்புகளை பெறலாம். மொழி வல்லுநர்கள் பள்ளிகள், பல்கலைகள், இந்தியப் பாதுகாப்பு துறை, இந்திய உளவுத்துறை, துணை ராணுவப்படை, தூதரகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கால்சென்டர், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத்துறை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை அமைப்புகள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகள் பெறலாம்.
* ஊதியம்:
interpreter பணியில் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1000 முதல் ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் வரையும், translator பணியில் இருப்பவர் ஒரு வார்த்தைக்கு இவ்வளவு தொகை என்ன கணக்கிலும் சம்பாதிக்கலாம். கே.பி.ஓ.க்களில் ஆண்டிற்கு ரூ. 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
மொழிப்படிப்பில் இந்த நிலையை அடைய வேண்டும் எனில் இடைவிடாத கடின பயிற்சி இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் இதற்கான ஆர்வமும் அதிக அளவில் இருக்க வேண்டும்.

0 கருத்துரைகள்:
Post a Comment