CABIN CREW எனும் பணியில் ஆட்களை சேர்க்க, ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம், நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் நபர்கள், அப்பணியில், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மொத்தம் 61 பணியிடங்கள் உள்ளன. அதில் ஆண்களுக்கு 31ம், பெண்களுக்கு 30ம் அடக்கம்.
வயது வரம்பு - 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதேசமயம் SC/ST/OBC பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் உண்டு.
பணியில் சேர விரும்புவோர், கட்டாயம் திருமணமாகாத நபராக இருக்க வேண்டும். ஆண்களின் உயரம் குறைந்தபட்சம் 172 செ.மீ, பெண்களின் உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ. இருத்தல் வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும் மற்றும் பிறருக்கு தெளிவாக புரியும் மொழி நடையில் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். பிற வெளிநாட்டு மொழிகளை அறிந்தவர்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் நபர்கள், பின்வரும் முகவரியில், ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், காலை 9 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிக்குள் பதிவுசெய்ய வேண்டும்.
Executive Director (NR)’s Office Complex,
Air India Limited, Northern Region,
IGI Airport, Terminal-1,
Near Old Lufthansa Hanger, JAL Road,
New Delhi-110037.
Air India Limited, Northern Region,
IGI Airport, Terminal-1,
Near Old Lufthansa Hanger, JAL Road,
New Delhi-110037.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பயிற்சி உண்டு. பயிற்சி காலத்தில், மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகையாக அளிக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு http://www.airindia.in/careers.htm.
0 கருத்துரைகள்:
Post a Comment