டெல்லிக்கு படிக்க போன இடத்தில் மும்பையை சேர்ந்த மாணவி அருஷி சச்தேவா. அங்கு தனக்கு விருப்பமான சாண்ட்விச் கிடைக்கவில்லை என்று, அவரே தயார் செய்து சாப்பிடத் தொடங்கினார். பிறகு தனது நண்பர்களுக்கும் செய்து கொடுத்தார்.
இதை பலரும் விரும்பவே இதையே தொழிலாக்கலாம் என்ற எண்ணம் அந்த எம்பிஏ மாணவிக்கு உதித்தது. தனது நண்பர்களோடு முதலீடு திரட்டி டெல்லியில் இரண்டு சாண்ட்விச் கடைகளை திறந்துள்ளார். 2019 ஆண்டுக்குள் இதை 50 கடைகளாக விரிவுபடுத்த வேண்டும் என்பதே இவரது இலக்காம். நிர்வாகவியல் படித்தால் நிறுவனங்களில் வேலை என்றில்லை, சாண்ட்விச் கடை தொடங்கி தொழில்முனைவோராகவும் மாறலாம் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்.
0 கருத்துரைகள்:
Post a Comment