Share

Wednesday, December 17, 2014

பெயின்டிங் மற்றும் காஸ்மெடாலஜி துறைகளில்...

பழைய அகழ்வாராய்ச்சி ஆதாரங்களை வைத்து ஆய்வு செய்கையில், பெயின்டிங் என்பது, இந்தியாவில், வரலாற்று காலத்திற்கு முன்பிருந்தே பிரபலமாக இருந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.
பெயின்டிங் என்பது, கேன்வாஸ்(canvas) மீது செய்யப்படும் பாரம்பரிய பெயின்டிங் மட்டுமல்ல, கிளாஸ், செராமிக், பானை மற்றும் பேப்ரிக் ஆகியவற்றின் மீதும் செய்யப்படுவதாகும். பொழுதுபோக்கிற்காக படம் வரைதல் என்பது ஒரு வகை. ஆனால், அதையே தொழில்முறையாக வரைதல் என்பது இன்னொரு வகை.
இன்றைய நாட்களில், பெயின்டிங் என்பது அதிக மக்களால் ரசிக்கப்படும் ஒரு அம்சமாக ஆகியுள்ளது. ஆனால், முந்தைய நாட்களில், அதற்கான ரசனை அங்கீகாரம் குறைவாகவே இருந்தது. இதன்மூலம், இத்துறையில் நுழைய விரும்பும் கலைஞர்களுக்கு உற்சாகமும் கிடைக்கிறது.
எங்கே வேலை?
ஆர்ட் நிபுணர்கள், தங்களுக்கான தொழிலை அமைத்துக்கொள்வதில், வெவ்வேறான வாய்ப்புகளைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆர்ட் ஸ்டுடியோக்கள், விளம்பர கம்பெனிகள், பப்ளிஷிங் நிறுவனங்கள் மற்றும் பேஷன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்களுக்கான வாய்ப்புகள் குவிந்துள்ளன.
மேலும், பல ஆர்ட் கலைஞர்கள், freelance முறையில் பணிபுரிய விரும்புகிறார்கள். ஏனெனில், இதன்மூலம் அவர்கள் நேர சுதந்திரம் உள்ளிட்ட பல சுதந்திரங்களைப் பெறுவதோடு, பல்வேறான freelance புராஜெக்ட்களில் பணியாற்றும் வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுகிறார்கள்.
இதுதவிர, ஒரு ஆர்ட் கலைஞர், தனது திறமையை பிறருக்கும் கற்றுக் கொடுக்கும் வகையில், கற்பித்தல் தொழிலையும் தேர்வு செய்யலாம்.
எங்கே படிக்க...
இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில இந்திய கல்வி நிறுவனங்கள்
லயோலா கல்லூரி - சென்னை
டில்லி பல்கலை - டில்லி
பனாரஸ் இந்து பல்கலை - பனாரஸ்
ரபீந்திர பாரதி பல்கலை - கொல்கத்தா
கொல்கத்தா பல்கலை - கொல்கத்தா
ஜாமியா மிலியா பல்கலை - டில்லி
எம்.எஸ்.பல்கலை - பரோடா
சிம்பயோசிஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைன் - புனே
ராஜஸ்தான் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் - ஜெய்ப்பூர்
காஸ்மெடாலஜி
அழகூட்டும் சிகிச்சை தொடர்பாக மேற்கொள்ளும் படிப்பே காஸ்மடாலஜி எனப்படுகிறது. இத்துறையில், hairstyling, skin care, cosmetics, manicures, pedicures and electrology போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன.
இத்துறையின் பணியில், அறிவு மற்றும் அனுபவம் ஆகிய இரண்டும் தேவைப்படுகிறது. அழகு சிகிச்சை முதல் மருத்துவ கவனிப்பு வரை, ஒவ்வொன்றையும் இத்துறை தனக்குள் உள்ளடக்கியுள்ளது.
இத்துறை தொடர்பான பணி, போட்டி நிறைந்ததாகவும், திறமை தொடர்பான சவால் நிறைந்ததாகவும் மாறி வருகிறது. ஏனெனில், இன்றைய உலகம் கார்பரேட் உலகமாக இருப்பதோடு மட்டுமல்லாது, ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில், ஆரோக்கியம் மற்றும் அழகு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ள உலகமாகவும் இருப்பதால், போட்டியும், சவாலும் அதிகரித்துள்ளன.
மேலும், இத்துறைக்கான வளர்ச்சியும், முக்கியத்துவமும் அன்றாடம் அதிகரித்து வருவதால், நல்ல திறன்வாய்ந்த நிபுணர்கள், அதிகளவில் தேவைப்படுகிறார்கள். எனவே, இத்துறையை தேர்வு செய்வோருக்கு, எதிர்காலத்தில் சிறப்பான பணி வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன.
எங்கே வேலை?
பியூட்டி சலூன்கள், ஹெல்த் ரிசார்ட் மற்றும் இதர ரிசார்ட்கள் ஆகியவற்றில், படிப்பை முடித்து வெளிவரும் காஸ்மெடாலஜிஸ்டுகளுக்கு உடனடியாக பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.
மேலும், காஸ்மெடிக் நிறுவனங்கள் மற்றும் அதுதொடர்பான தொழிற்சாலைகள் ஆகியவை, காஸ்மெடாலஜி படித்தவர்களை பணி நியமனம் செய்கின்றன.
இவைதவிர, செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் வெப் பப்ளிஷர் ஆகியவற்றில் கன்சல்டன்ட் என்ற பணி வாய்ப்பையும் காஸ்மெடாலஜிஸ்டுகள் பெறலாம்.
எங்கே படிக்கலாம்?
இத்துறை சார்ந்த படிப்பை மேற்கொள்வதற்கான சில இந்திய கல்வி நிறுவனங்கள்
சவுத் டில்லி பாலிடெக்னிக் பார் வுமன் - டில்லி
ஒய்.எம்.சி.ஏ - டில்லி
நாக்பூர் பல்கலை - நாக்பூர்
பியர்ல் அகடமி ஆப் பேஷன் - டில்லி
Schnell Hans பியூட்டி ஸ்கூல் - மும்பை

0 கருத்துரைகள்: