Share

Monday, February 8, 2016

என்டிபிசி மின்சார நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Image result for ntpc41 மின் தயாரிப்பு நிலையங்கள் மூலம் 45 ஆயிரத்து 548 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறகொண்ட என்டிபிசி என அழைக்கப்படும் மிகப்பெரிய மின்சார நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: எக்சிகியூட்டிவ் டிரெயினி (நிதி) - 46

பணி: எச்.ஆர் - 25

தகுதி: நிதி மற்றும் நிர்வாகவியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: அசிஸ்டன்ட் கெமிஸ்ட் டிரெயினி - 25

வயதுவரம்பு: 29.02.2016 தேதியின்படி 29க்குள் இருக்க வேண்டும். அசிஸ்டன்ட் கெமிஸ்ட் டிரெயினி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல், தனிநபர் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ntpccareers.net   என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, February 3, 2016

நீங்கள் லேப்-டெக்னீஷியனா...? எம்ஆர்பி-க்கு உடனே அப்ளிகேஷன் போடுங்க...!!

சென்னை: லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ சேவை தேர்வாணையம் (எம்ஆர்பி) அறிவிப்பு செய்துள்ளது.
மொத்தம் 710 லேப்- டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக உள்ளதாம். தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கண்டிப்பாக பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பு படித்ததற்கான சான்ரிதவையும் வைத்திருக்கவேண்டும். மேலும் நல்ல உடல், கண் பார்வை, வெளியே சென்று வேலை செய்யத் தயாராக இருக்கவேண்டும்.
வயது 18 முதல் 57-க்குள் இருக்கலாம்.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் எம்ஆர்பி இணையதளத்தில் கிடைக்கின்றன. அணுக வேண்டிய இணையதள முகவரி: http://www.mrb.tn.gov.in
கல்வித் தகுதி, தொழில்நுட்ப கல்வித் தகுதி அடிப்படையில் ஆட்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
விண்ணப்பக் கட்டணமாக ஓபிசி, பொதுப் பிரிவினருக்கு ரூ.500-ம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250-ம் வசூலிக்கப்படும்.

பணியாற்ற அழைக்கிறது இந்திய கடலோரக் காவல்படை!!

சென்னை: இந்தியக் கடலோரக் காவல்படை தனது யாந்த்ரிக் பகுதியில் பணியாற்ற தகுதியான நபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யலாம்.
யாந்த்ரிக் பகுதியில் 02/2016 பேட்ச்சுக்காக ஆட்களை கடலோரக் காவல்படை தேர்வு செய்யவுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு 3 ஆண்டு டிப்ளமோ(எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங்) அல்லது அதற்கு இணையான படிப்பைப் படித்து முடித்திருக்கவேண்டும்.
வயது 18 முதல் 22-க்குள் இருக்கலாம்.
தகுதியும், விருப்பமுள்ளவர்கள் http://joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியக் கடலோரப் பகுதியைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும், கடலோரக் காவல் படை 1978-ல் உருவாக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கடலோரக் காவல் படை செயல்படுகிறது.

Monday, February 1, 2016

எம்.பில்., பிஹெச்.டி., படிக்கும் மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை

விண்ணப்பித்து விட்டீர்களா...? எஸ்.டி. மாணவர்களுக்கான பெல்லோஷிப்எம்.பில்., பிஹெச்.டி., படிக்கும் மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பல்கலைக்கழக மானியக்குழு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின்படி இந்தாண்டு 750 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. முதுநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, முழுநேரமாக எம்.பில்., அல்லது பிஹெச்.டி. படிப்பவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம். அறிவியல், மானுடவியல், சமூக அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருக்க வேண்டும். எம்.பில். மாணவர்களுக்கு ரூ.25,000, பிஹெச்.டி. மாணவர்களுக்கு ரூ.28,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.11.2015. கூடுதல் விவரங்களுக்கு    www.ugc.ac.in  என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.