Share

Thursday, June 4, 2015

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என்று கலெக்டர் பழனிசாமி கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போட்டி தேர்வுகள்

தமிழகத்தில் படித்துவிட்டு எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., டி.ஆர்.பி., ஆர்.ஆர்.பி. உள்பட பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த விரிவான ஆலோசனை மற்றும் பயிற்சிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது அறிவித்துள்ள 1,241 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தகுந்த பயிற்சி வல்லுனர்களை கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது.

பயிற்சிவகுப்பு

இந்த பயிற்சி வகுப்பு அலுவலக வேலை நாட்களில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பில்கேட்ஸ் கூறும் அறிவுரை

எதிர்கால சந்ததிகளான இளைஞர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறும் அறிவுரை என்ன தெரியுமா? தன்னைப் போல யாரும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விடாதீர்கள் என்பதுதான்.

இது குறித்து இளைஞர்களுக்கு தனது பிளாக்கில் அவர் கூறியிருப்பதாவது, வெற்றியை அடைய மிக எளிதான வழி பட்டப்படிப்புதான். எனவே, மாணவர்கள் பட்டப்படிப்பை முடியுங்கள். எந்த காரணம் கொண்டும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்லூரியில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் கிடைக்கும். பட்டம் பெறாதவர்களோடு ஒப்பிடும் போது, பட்டம் பெற்றவர்கள் நல்ல தரமான வாழ்க்கையை வாழ முடியும். பட்டம் பெற்ற இளைஞர்களால்தான் அமெரிக்காவின் பொருளதாரமும் உயரும் என்று கூறியுள்ளார்.

Wednesday, June 3, 2015

நாகையில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: அரியலூர் இளைஞர்கள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் ஜூன் 4 முதல் 15 ஆம் தேதி வரை நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், அரியலூர் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தச் சிறப்பு முகாமில் சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் டிரேட்ஸ்மேன், ஹவுஸ் கீப்பர், மெஸ் கீப்பர், வாஷர் மேன், நர்சிங் அசிஸ்டெண்ட், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், 17 வயது முதல் 23 வயது வரையுள்ள, குறைந்த பட்ச கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு என 2 கட்டங்களாக ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் அரியலூர், நாகை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, கரூர், ராமநாதபுரம், புதுகை, தூத்துக்குடி, பெரம்பலூர், விருதுநகர், திருவாரூர், நெல்லை, காரைக்கால், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 4 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், 5 ஆம் தேதி உடற்தகுதித் தேர்வும் நடைபெறும்.

முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, பிறப்புச்சான்று, நன்னடத்தை சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற நன்னடைத்தைச் சான்று, மாற்றுச்சான்றிதழ், ஆர்ய்ஹச்ண்க்ங் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங், சஇஇ சான்று, விளையாட்டு சான்று ஆகியவைகளைக் கொண்டு வர வேண்டும்.

மேலும்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 12, 8 ஆம் வகுப்பு பயின்றவர்கள் மதிப்பெண் சான்றிதழில் தலைமை ஆசிரியர் ஒப்பம் மற்றும் மாற்றுச்சான்றிதழில் மாவட்ட கல்வி அலுவலரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் பெறப்பட்டிருக்க வேண்டும்.

மேலும்,விவரங்களுக்கு 98421 96910, 97872 62670 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி விவரப்பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வட்டார வளமையங்களில் காலியாக உள்ள 13 கணினி விவரப் பதிவாளர் பணியிடங்களுக்கு வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். கல்வித் தகுதி பிளஸ்2 தேர்ச்சி தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை சான்று மற்றும் எம்.எஸ்.ஆபீஸ் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஜூன் 1 ஆம் தேதியன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 விண்ணப்பித்த நபர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் அழைப்பாணையில் தெரிவிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தினை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், மோகனூர் சாலை, நாமக்கல்637 001 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.