Share

Saturday, May 30, 2015

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி பணிகள்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (NLC) நிரப்பப்பட உள்ள துணை மருத்துவ அதிகாரி, மருத்து அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 03/2015

பணி: துணை மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி

தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்து இண்டர்ஷீப் முடித்திருக்க வேண்டும்

எம்.பி.பி.எஸ் முடித்து Obstetrics மற்றும் Gynaecolog துறையில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.05.2015 தேதியின்படி துணை மருத்துவ அதிகாரி பணிக்கு 32க்குள்ளும், மருத்துவ அதிகாரி பணிக்கு 36க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: துணை மருத்து அதிகாரி பணிக்கு மாதம் ரூ.24,000 - 3% - 50,500 வருடத்திற்கு ரூ.10.24 லட்சம்.

மருத்துவ அதிகாரி பணிக்கு மாதம் ரூ.24,000 - 3% - 50,500 வருடத்திற்கு ரூ.12.31 லட்சம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nlcindia.com/careers/DetailedAdvt.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, May 15, 2015

இந்திய ஏற்றுமதி நிறுவனத்தில் 49 பணியிடங்கள்

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களை தரம் நிர்ணயம் செய்து சான்றிதழ் அளிக்க 1963-ஆம் ஆண்டு புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு, இந்திய ஏற்றுமதி ஆய்வு கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் மும்பை, கொச்சி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 30 கிளை அலுவலகங்கள் மற்றும் பரிசோதனை மையங்களில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தகுதியும் விரப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்):காலியிடங்கள்: 10சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400. பணி: டெக்னிக்கல் ஆபீசர்காலியிடங்கள்: 02சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200. பணி: ஜூனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்காலியிடங்கள்: 01சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200. பணி: லேபரட்டரி அசிஸ்டென்ட்: (கிரேடு – 1)காலியிடங்கள்: 02சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400. பணி: லேபரட்டரி அசிஸ்டென்ட்: (கிரேடு – 2)காலியிடங்கள்: 02சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900. பணி: உதவி இயக்குநர்காலியிடங்கள்: 01சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400. பணி: பிரிவு அலுவலர்காலியிடங்கள்: 02சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600. பணி: அக்கவுன்ட்ஸ் ஆபீசர்காலியிடங்கள்: 01சம்பளம்: மாதம் ரூ.9,300 -34,800 + தர ஊதியம் ரூ.4,600. பணி: ஆபீஸ் அசிஸ்டென்ட்காலியிடங்கள்: 03சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200. பணி: அக்கவுன்டென்ட்காலியிடங்கள்: 02சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200. பணி: கிளார்க் கிரேடு – 1காலியிடங்கள்: 06சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400. பணி: ஜூனியர் இந்தி டிரான்ஸ் லேட்டர்காலியிடங்கள்: 02சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400. பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு – 1காலியிடங்கள்: 01சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200. பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு – 2காலியிடங்கள்: 03சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400. பணி: கேர் டேக்கர் கிரேடு – 1காலியிடங்கள் 02சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200. பணி: ஸ்டோர் கீப்பர் கிரேடு – 2காலியிடங்கள்: 02சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400. பணி: கிளார்க் கிரேடு – 2காலியிடங்கள்: 02சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900. பணி: சீனியர் லேப் அட்டெண்டென்ட்காலியிடங்கள் 02சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900. பணி: லேபரட்டரி அட்டெண்டென்ட்காலியிடங்கள்: 03சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை நெட்பேங்கிங் முறையில் செலுத்தவும். பெண்கள், எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.eicindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2015.பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.05.2015.ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Export InspectionCouncil of India,3rd Floor, NewDelhi YMCA Cultural Centre Building,1, Jai Singh Road,NEWDELHI- 110001.மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.eicindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, May 9, 2015

அணு இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி

இந்திய அணுசக்தி கழகத்தின்கீழ் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அணு இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: SINP/Estt/Adv/04/2015
பணி: Scientific Assistant-B (Crisis Management)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant-B
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician-B (Electrical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 4 வருடம் எலக்ட்ரீசியன் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician-B (Civil)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 4 வருடம் எலக்ட்ரீசியன் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician-B (Carel)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் புராஜெக்ட்டர்ஸ், ஆடியோ-வீடியோ சிஸ்டம்ஸ், ஃஸ்கைப் போன்ற எலக்ட்ரானிக்ஸ உபகரணங்களை கையாள்வதில் 4 வருடம்  பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician-B (Medical Unitl)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மருத்துவத்துறையில் Attendant/Nursing/First-Aid போன்ற பணிகளில் 4 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மருத்துவத்துறை சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician-B (welder, Tool Crib Attendant)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant-B
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Linux/Windows OS/Networking/Database Management and Administration/RDMS/HTML/CSS/PHP போன்ற பிரிவில் பணிபுரியும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்த தேர்வு, தொழிற்திறன், நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar, SAHA Institute of Nuclear Physics, Sector-1, Block-AF, Bidhan Nagar, Kolkata-700064
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.saha.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் நிரப்பப்பட உள்ள 176 பணிகள்

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் நிரப்பப்பட உள்ள 176 பட்டயக் கணக்காளர், சட்ட அலுவலர், திட்ட உதவியாளர், உதவி பொறியாளர், திட்டமிடல் உதவி வரையாளர், சமூக அதிகாரி, தொலைபேசி ஆஃப்ரேட்டர், புகைப்படக்காரர், நூலகர், சுருக்கெழுத்தர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, இந்தியாவின் நான்காவது பெருநகரமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பர எண்: 1/Estt./CMDA-Recruitment/2015

தேதி: 03.05.2015

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Charted Accountant - 01

2. Law Officer - 02

3. Assistant Planner -  16

4. Assistant Engineer - 05

5. Planning Assistant - 44

6. Assistant Draughtsman - 01

7. Community Officer - 02

8. Telephone Operator

9. Photographer - 01

10. Field man - 11

11. Librarian - 116

12. Stenographer - 10

13. Typist - 04

14. Junior Assistant - 22

15. Driver - 18

16. Messenger  - 22

17. Watchman - 09

வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: சென்னை, தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட அதிகாரப்பூர்வ இணையதத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Member-Secretary,

CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY

THALAMUTHU - NATARAJAN BUILDING

NO.1, GANDHI-IRWIN ROAD,

EGMORE, CHENNAI-600 008.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய Advertisement (Original): http://www.cmdachennai.gov.in/pdfs/Application-CMDA-Recruitment.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சிப் பணி

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி திட்டத்தில் சேர்ந்து பணியாற்ற சிவில், கெமிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Assistant (Level-II)

ஆராயச்சி திட்டத்தின் பெயர்: EIA Study for CPV Project, Walwhan (Pro.No.C-7-1954)

தகுதி: சிவில், கெமிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,000 - 14,000

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.neeri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Scientist & Head, WT & M Division, CSIR-NEERI, Nehru Marg, Nagpur-440020

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.05.2015

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.05.2015

மேலும் முழுமையான விவரங்களுக்கு www.neeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 66 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 426-432/26/04/2015

தேதி: 26-04-2015

பணி: உதவி பேராசிரியர்

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. தமிழ் - 13

2. ஆங்கிலம் - 18

3. கணிதம் - 11

4. இயற்பியல் - 02

5. கணினி அறிவியல் - 11

6. வணிகவியல் - 10

7. சந்தையியல் நிர்வாகம் - 01

சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6000.

தகுதி: தமிழ், சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் மற்றும் NET அல்லது SLET, SET, JRF, Ph.D முடித்திருக்க வேண்டும்.

பணியிடம்: வேலூர், தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.thiruvalluvaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழகத்தில் காலியாகவுள்ள 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 3 -ஆம் தேதி கடைசியாகும்.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்ட தேர்வு அறிவிக்கை விவரம்:

புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 268 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணிகளுக்கு இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வுகளின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்தப் பணிகளுக்கு மாதம் ரூ.5,000 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தின் (www.tnpscexams.net) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 3-ஆம் தேதி ஆகும்.

வங்கி, அஞ்சலகங்கள் மூலமாக விண்ணப்பக் கட்டணம்-தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த ஜூன் 5 கடைசி நாள்.

கல்வித் தகுதி: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது.

முதல் தாள் தேர்வானது ஜூலை 1 ஆம் தேதி காலை 10 மணிக்கும், இரண்டாம் தாள் மதியம் 2.30 தொடங்கி நடைபெறும்.

இந்தத் தேர்வு என்பது கொள்குறி வகை என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வினை எதிர்கொள்ள கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம், அல்லது ஏதாவது ஒரு இளநிலைப் பட்டத்துடன் பொருளாதாரம், கணித பொருளாதாரம் போன்ற சிறப்பு பாடங்களுடன் முதுநிலையில் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.100. எழுத்துத் தேர்வின் போது பொருளாதாரம், பொது அறிவுடன், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இந்தத் தேர்வானது சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மையங்களில் நடைபெறவுள்ளன.

எழுத்துத் தேர்வுக்கான பாடத் திட்டம்-தேர்வுத் திட்டம் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த சந்தேகங்கள் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு பள்ளிகளில் இணையம் மூலம், முதல் நாளான (மே 8-ம் தேதி) மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதிய இத்தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் சற்றே கடினமாக இருந்ததால், அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்தது.

கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்தது: இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய முக்கிய பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், இந்த முக்கியப் பாடங்களில் பெரும்பாலானோரின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். மேலும் எம்.பி.பி.எஸ்.- பி.இ. படிப்பில் சேருவதற்கு தாங்கள் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைந்துள்ளதால், பெரும்பாலானோர் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் பள்ளிகளில் இணையம் மூலம் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் நாளான வெள்ளிக்கிழமையே விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுக்கூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ முடியும். வரும் 14-ஆம் தேதி வரை விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டண விவரம்: விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு ரூ. 275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு ரூ. 305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.