Share

Saturday, April 4, 2015

கூடலூர் ஊராட்சி ஒன்றியம்-காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

Image result for கூடலூர் ஊராட்சிகூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள இரவுக்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

 நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள இரவுக் காவலர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். 8ம்வகுப்பு கல்வி தேர்ச்சியுடன் இதர சான்றுகளின் கையொப்பமிட்ட நகலுடன் விண்ணப்பங்களை இம்மாதம் 15ம்தேதி மாலை 5 மணிக்குள் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், கூடலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் இடம் மற்றும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் 2015ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி 30 வயது நிறைவடையாதவராக இருத்தல் வேண்டும். இதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களின் வயது 35 நிறைவடையாமல் இருக்க வேண்டும். தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு முறைப்படி முன்னுரிமை பெற்றோர் இனங்களில் பொது 1 என கடைபிடிக்கப்படுவோரில் தகுதியுள்ளோர் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துரைகள்: