Share

Saturday, April 11, 2015

மத்திய சேமிப்பு கிட்டங்கி கழகத்தில் உதவியாளர் டைப்பிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு

மத்திய சேமிப்பு கிட்டங்கி கழகத்தின் சண்டிகார் பிராந்திய அலுவலகத்தில் காலியாக உள்ள கிட்டங்கி உதவியாளர் பணி போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக் கலாம்.

பணி விவரம்.

Warehouse Assistant GradeII.

21 இடங்கள். (பொது-10, எஸ்சி-5, ஒபிசி-5, மாற்றுத்திறனாளி-1).

சம்பளம்:

ரூ.8,900- 24,320 மற்றும் இதர சலுகைகள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் அலுவலக பணிகள் தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.

வயது:

1.4.2015 தேதிப்படி 18 லிருந்து 25க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிமுறைகளின்படியும் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத்தேர்வு, டைப்பிங் திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.cwc.gov.in என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Regional Manager,
Central Warehousing Corporation,
Bay 3942, Sector 31A,
CHANDIGARH.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.4.2015.

0 கருத்துரைகள்: