Share

Wednesday, April 8, 2015

பி.இ, எம்பிஏ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு 873 காலியிடங்கள் அறிவிப்பு

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் பொறியியல் மற்றும் புவி அறிவியல் பிரிவு பணியிடங்கள் 'கேட் 2015' மதிப்பெண்கள் அடிப்படையிலான நேர்முகத்தேர்வு மூலமும், இதர பணியிடங்கள் கம்ப்யூட்டர் தேர்வு மூலமும் நிரப்பப்பட உள்ளன.

பொறியியல் மற்றும் புவி அறிவியல் பிரிவு பணிகளுக்கு 'கேட்-2015' தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

காலியிடங்கள்

அ. பொறியியல் மற்றும் புவி அறிவியல் பிரிவு:

1. Assistant Executive Engineer (Cementing):

தகுதி:

மெக்கானிக்கல்/ பெட்ரோலியம் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ. பட்டம்.

2. Assistant Executive Engineer (Civil):

தகுதி:

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ. பட்டம்.

3. Assistant Executive Engineer (Drilling):

தகுதி:

மெக்கானிக்கல்/ பெட்ரோலியம் இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ. பட்டம்.

4. Assistant Executive Engineer (Electrical):

தகுதி:

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ., மற்றும் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் பிரிவில் சான்றிதழ் பயிற்சி.

5. Assistant Executive Engineer (Electronics):

தகுதி:

எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகாம்/ இ அண்ட் டி இன்ஜினியரிங் பிரிவுகளில் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ., அல்லது எலக்ட்ரானிக்சை ஒரு பாடமாகக் கொண்டு இயற்பியலில் குறைந்தபட்சம் 60 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம்.

6. Assistant Executive Engineer (Instrumentation):

தகுதி:

குறைந்த பட்சம் 60 சதவீத தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ. பட்டம்.

7. Assistant Executive Engineer (Mechanical):

தகுதி:

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ. பட்டம்.

8. Assistant Executive Engineer (Production):

தகுதி:

கெமிக்கல்/ மெக்கானிக்கல்/ பெட்ரோலியம் இன்ஜினியரிங்/ அப்ளைடு பெட்ரோலியம் இன்ஜினியரிங் பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ. பட்டம்.

9. Assistant Executive Engineer (Reservior):

தகுதி:

கணிதம்/ இயற்பியல் பாடத்தில் பிஎஸ்சி முடித்த பின் நிலத்தியல்/ வேதியியல்/ புவி இயற்பியல்/ கணிதம்/ இயற்பியல்/ பெட்ரோலியம் டெக்னாலஜி பிரிவில் 60 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங்/ பெட்ரோலியம் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ. பட்டம்.

10. Chemist:

தகுதி:

வேதியியல் பாடத்தில் 60 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டப்படிப்பு.

11. Geologist:

தகுதி:

60 சதவீத தேர்ச்சியுடன் ஜியாலஜி பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது பெட்ரோலியம் புவி அறிவியல்/ பெட்ரோலியம் ஜியாலஜி/ ஜியாலஜிக்கல் டெக்னாலஜி பிரிவில் எம்.எஸ்சி.,/ எம்.டெக். பட்டம்.

12. Geo Physicist (Surface):

தகுதி:

குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் புவி இயற்பியல்/ புவி இயற்பியல் தொழில்நுட்பம் அல்லது எலக்ட்ரானிக்சை ஒரு பாடமாகக் கொண்டு இயற்பியல் பாடத்தில் முதுநிலை பட்டம்.

13. Geo physicist (Wells):

தகுதி:

குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் புவி இயற்பியல் அல்லது எலக்ட்ரானிக்சை ஒரு பாடமாகக் கொண்டு இயற்பியலில் முதுநிலை பட்டம்.

14. Materials Management Officer:

தகுதி:

ஆட்டோ இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/ இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங்/ பெட்ரோலியம் இன்ஜினியரிங்/ கெமிக்கல் இன்ஜினியரிங்/ சிவில் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ இ அண்ட் டி இன்ஜினியரிங்/ டெலிகாம் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ இன்பர்மேசன் டெக்னாலஜி பிரிவில் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ. பட்டம்.

15. Programming Officer:

தகுதி:

குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது எம்சிஏ/ கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது எலக்ட்ரானிக்ஸ் துறையில் 'பி' லெவல் டிப்ளமோ.

16. Transport Officer:

தகுதி:

குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஆட்டோ/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ. பட்டம்.

வயது வரம்பு:

1.1.2015 அன்று 30க்குள். ஒபிசியினருக்கு 33 வயதும், எஸ்சி, எஸ்டியினருக்கு 35 வயது வரையிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும். டிரில்லிங் மற்றும் சிமென்டிங் பணிகளுக்கு 28க்குள் இருக்க வேண்டும்.

ஆ. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மூலம் நிரப்பப்படும் இடங்கள்: 128.

1. Assistant Executive Engineer: (Environment):

தகுதி:

என்விரான்மென்டல் இன்ஜினியரிங்/ என்விரான்மென்ல் சயின்ஸ் பிரிவில் 60 சதவீத தேர்ச்சியுடன் பட்டம்/முதுநிலை பட்டம்.

2. Finance - Accounts officer:

தகுதி:

60 சதவீத தேர்ச்சியுடன் பட்டப்படிப்புடன் சிஏ/ ஐசிடபிள்யூஏ தேர்ச்சி அல்லது எம்பிஏ (நிதி) பட்டம்.

3. Fire officer:

தகுதி:

ஃபயர் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம்.

4. Human Resource Executive:

தகுதி:

பெர்சனல் மேமேஜ்மென்ட்/ ஹெச்ஆர்எம்/ ஹெச்ஆர்டி பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ அல்லது பெர்சனல் மேனேஜ்மென்ட்/ ஐஆர்/ தொழிலாளர் நலன் பிரிவில் 60 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம்.

5. Medical Officer:

தகுதி:

எம்பிபிஎஸ் பட்டம்.

6. Security Officer:

தகுதி:

முதுகலை பட்டப்படிப்புடன் ராணுவம் அல்லது மத்திய போலீஸ் படை பிரிவுகளில் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம். உடல்தகுதி: உயரம் - 168 செ.மீ., மார்பளவு 81 - 86 செ.மீ., மற்றும் உயரத்திற்கேற்ற எடை.

வயது:

1.1.2015 தேதிப்படி 30க்குள். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்:

கம்ப்யூட்டர் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பணிகளுக்கு பதிவு கட்டணம் ரூ.750. (எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150). இதை 'ONGC Power Joythi A/c No:30827318409, SBI, Tel Bhavan, Dehradun' என்ற கணக்கில் ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும்.

இதற்கான செலானை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும்.

www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் செலுத்த கடைசி நாள்: 10.4.2015.

கம்ப்யூட்டர் தேர்வு நடைபெறும் நாள்: 10.5.2015.

0 கருத்துரைகள்: