இது குறித்து, எழுதுபொருள்-அச்சுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு அச்சகம் சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் பல்வேறு நிலைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன. அச்சகர், அலுவலக உதவியாளர் எனப் பல்வேறு நிலைகளில் காலியாகவுள்ள 147 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 17 ஆம் தேதி கடைசியாகும். எழுதுபொருள்-அச்சுத் துறை இணையதளத்தில் (www.stationeryprinting.tn.gov.in) இருந்து தேவையான விவரங்களையும், விண்ணப்பப் படிவத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment